॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத சதுர்தோ அத்யாய:।
ஞானகர்மஸந்யாஸ யோகம்
ஸ்ரீபகவாநுவாச।
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்।
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே அப்ரவீத்॥ 4.1 ॥
பகவான் கூறினார்: அழிவற்ற இந்த யோக முறையை முன்பு சூரிய தேவனுக்கு கூறினேன். சூரியன் தன் புதல்வனான வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார், மனு தன் மகனான இக்ஷ்வாகுவுக்கு இதை உபதேசித்தார்.
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:।
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரம்தப॥ 4.2 ॥
பரந்தப அர்ஜூன! இவ்வாறு பரம்பரை முறையில் கிரமப்படி வந்துள்ள இச்செய்தியானது புனிதமான மன்னர்களாலும் அறியப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் மறைந்தது போலத் தோன்றுகிறது.
ஸ ஏவாயம் மயா தே அத்ய யோக: ப்ரோக்த: புராதந:।
பக்தோ அஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்॥ 4.3 ॥
நீ எனக்கு நண்பனும், பக்தனுமாதலால் இறைத்தொடர்பு பற்றிய இவ்விஞ்ஞானம் இன்று உனக்கு என்னால் கூறப்படுகிறது. இதன் ரகசியத்தையும் உன்னால் புரிந்து கொள்ள முடியும்.
அர்ஜுந உவாச।
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:।
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி॥ 4.4 ॥
அர்ஜூனன் கூறினார்: பிறப்பினால் உமக்கு முந்தையவர் விவஸ்வான், அவருக்கு நீர் எப்படி உபதேசித்தீர்?
ஸ்ரீபகவாநுவாச।
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந।
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரம்தப॥ 4.5 ॥
பகவான் கூறினார்: பற்பல பிறவிகளை நாம் கடந்துள்ளோம். அவற்றை நாமறிவோம், நீயறியாய். நான் பிறப்பற்றவன். எல்லா உயிர்களுக்கும் இறைவன். இருந்தாலும், திவ்வியமான ஆன்மீக சரீரத்துடன் யுகம்தோறும் தோன்றுகிறேன்.
அஜோ அபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஷ்வரோ அபி ஸந்।
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா॥ 4.6 ॥
நான் பிறப்பற்றவன். எல்லா உயிர்களுக்கும் இறைவன். இருந்தாலும், திவ்வியமான ஆன்மீக சரீரத்துடன் யுகம்தோறும் தோன்றுகிறேன்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத।
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்॥ 4.7 ॥
எப்பொழுதெல்லாம் அறநெறிகளுக்கு தொல்லைகள் ஏற்பட்டு அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்போதெல்லாம் என்னை நான் இவ்வாறு உருவித்துக் கொள்கிறேன்.
பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்।
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே॥ 4.8 ॥
சாதுக்களைக் காக்கவும், கொடியவர்களை ஓய்ப்பதற்காகவும் தர்மத்தை ஸ்தாபிக்கவும் யுகந்தோறும் வருகிறேன்.
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:।
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுந॥ 4.9 ॥
எனது திவ்யமான பிறப்பு, செயல்கள் இவற்றின் மேலான தன்மைகளை உள்ளபடி அறிபவன், ஜட உடலை விட்டபின் மீண்டும் இங்கு பிறப்பதில்லை, அவன் என்னை அடைகிறான்.
வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஷ்ரிதா:।
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:॥ 4.10 ॥
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்।
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 4.11 ॥
ஆசை, பயம், சினம் இவற்றை விட்டு என்னிடம் சரணடைந்த பலர், ஞானதவத்தால் தூய்மையடைந்து என்னிடம் நல்ல முறையில் அன்பு கொண்டுள்ளனர். என்னிடம் அவர்கள் சரணடைவதற்கேற்ப நான் பலன் அளிக்கிறேன். எவ்வழியிலும் அவர்கள் என்னையே பின்பற்றுகின்றனர்.
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:।
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா॥ 4.12 ॥
பலனிச்சையால் மனிதர்கள் தேவர்களைப் பூசிக்கின்றனர். இத்தகு செயல்களுக்கு உடனடி விளைவுகளும் அமைகின்றன.
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஷ:।
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்॥ 4.13 ॥
குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப மனிதரில் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. (பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர்). எனினும் மாற்றமில்லாத என்னை, செயலுக்கு அப்பாற்பட்டவன் என்பதை அறிவாயாக.
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா।
இதி மாம் யோ அபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே॥ 4.14 ॥
எச்செயலும் என்னை பாதிப்பதுமில்லை. செயலின் பலனுக்காக நான் ஏங்குவதுமில்லை. இவ்வாறு என்னை அறிபவன் செயலின் விளைவுகளால் கட்டுப்படுவதுமில்லை.
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி:।
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்॥ 4.15 ॥
முன்னோர்கள்கூட இவ்விதம் செயல்பட்டு விடுபட்டுள்ளனர். நீயும் அதுபோல மேலான உணர்வுகளுடன் கடமைகளைச் செய்.
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ அப்யத்ர மோஹிதா:।
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 4.16 ॥
செயல்களே ஒருவனை விடுபடுத்துகின்றன. எது செயல், எது செயலற்ற நிலை என்பதைத் தீர்மானிப்பதில் அறிவாளியும் குழம்புகிறான். எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடக் கூடிய அத்தகைய செயல்களைப் பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:।
அகர்மணஷ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:॥ 4.17 ॥
சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட செயல்கள் (கர்மா), விலக்கப்பட்ட செயல்கள் (விகர்மா), மற்றும் விளைவற்ற செயல்கள் (அகர்மா – பகவானுக்காக ஆற்றப்படுபவை) உள்ளன. அறிவதற்கு கடினமாயினும், இவற்றை அறிந்தே ஒருவன் செயல்பட வேண்டும்.
கர்மண்யகர்ம ய: பஷ்யேதகர்மணி ச கர்ம ய:।
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்॥ 4.18 ॥
செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்பவனே அறிஞன். அவன் செயல்பட்டாலும் விடுபட்டவனாவான்.
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:।
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:॥ 4.19 ॥
புலன் நுகர்வுக்கான நோக்கமின்றி செயல்படுபவன் சிறந்தவன். அவன் தனது பக்குவத்தால் விளைவுகளை எரித்து விடுவதால் அறிஞர்கள் அவனைப் போற்றுகின்றனர்.
த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஷ்ரய:।
கர்மண்யபிப்ரவ்ருத்தோ அபி நைவ கிம்சித்கரோதி ஸ:॥ 4.20 ॥
செயலின் பலனில் பற்றற்று, சதா திருப்தியுடன் சார்பற்று இருப்பவன், செயல்பட்டாலும் செயலற்றவனே ஆவான்.
நிராஷீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:।
ஷாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 4.21 ॥
அப்படிப்பட்டவனது மனதும் அறிவும் கட்டுப்பட்ட நிலையில் உரிமை உணர்வின்றி குறைந்தபட்சத் தேவைகளுக்காக செயலாற்றுகிறான். அவன் தீய விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை.
யத்ருச்சாலாபஸம்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:।
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே॥ 4.22 ॥
தானாய்க் கிடைப்பதில் திருப்தி அடைந்தவன், இருமைகளிலிருந்து விடுபட்டவன், பொறாமையற்றவன், வெற்றி – தோல்விகளில் சமமாய் இருப்பவன் – இவன் செயலாற்றினாலும் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.
கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:।
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே॥ 4.23 ॥
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்।
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா॥ 4.24 ॥
தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே।
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி॥ 4.25 ॥
ஷ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி।
ஷப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி॥ 4.26 ॥
ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே।
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே॥ 4.27 ॥
த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே।
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஷ்ச யதய: ஸம்ஷிதவ்ரதா:॥ 4.28 ॥
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே அபாநம் ததாபரே।
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:॥ 4.29 ॥
அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி।
ஸர்வே அப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:॥ 4.30 ॥
யஜ்ஞஷிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்।
நாயம் லோகோ அஸ்த்யயஜ்ஞஸ்ய குதோ அந்ய: குருஸத்தம॥ 4.31 ॥
ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே।
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே॥ 4.32 ॥
குருவம்சத்தவனே, யாகங்களின்றி இவ்வுலகில் யாரும் சுகமாக இருக்க முடியாது. அப்படி இருக்கையில் மறுவுலகைப் பற்றி என்ன சொல்வது? இந்த யாகங்கள் அனைத்தும் வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டவை. கர்மங்களிலிருந்து தோன்றியவை. இதையறிந்து விடுதலையடைவாயாக.
ஷ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரம்தப।
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே॥ 4.33 ॥
பரந்தபா, பொருட்களினாலான யாகத்தை விட, ஞான யக்ஞம் சிறந்தது. ஏனெனில் எல்லா கர்ம யக்ஞங்களும் ஞானத்தில் தான் முற்றுப்பெறுகின்றன.
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஷ்நேந ஸேவயா।
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஷிந:॥ 4.34 ॥
ஆன்மீக குருவுக்குப் பணிந்தும், பணிவிடைகள் புரிந்தும் கேள்விகள் கேள். உண்மையை உணர்ந்த அவர், உனக்கு உண்மை ஞானத்தை உணர்த்துவார்.
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ।
யேந பூதாந்யஷேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி॥ 4.35 ॥
அதன்பின் மயக்கம் நீங்கி, எல்லா உயிரினங்களும் என் அங்கமே, அவை என்னுடையவை, என்னில் இருப்பவை என்றறிவாய்.
அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:।
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸம்தரிஷ்யஸி॥ 4.36 ॥
பெரும் பாபியாக நீ கருதப்பட்டாலும் ஞானப் படகினால், துன்பக்கடலைத் தாண்டுவாய்.
யதைதாம்ஸி ஸமித்தோ அக்நிர்பஸ்மஸாத்குருதே அர்ஜுந।
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா॥ 4.37 ॥
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஷம் பவித்ரமிஹ வித்யதே।
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி॥ 4.38 ॥
ஷ்ரத்தாவாம்ல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:।
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஷாந்திமசிரேணாதிகச்சதி॥ 4.39 ॥
தீச்சுடரானது விறகுகளை சாம்பலாக்குவது போல், ஞானமானது கர்ம பந்தங்களை எரிக்கின்றது. ஞானம் போல் சிறந்ததும், தூயதுமில்லை. அதுவே யோக கனியாகும். இதைப்பெற்றவன் காலப்போக்கில் தன்னுணர்வில் திளைக்கின்றான்.
அஜ்ஞஷ்சாஷ்ரத்ததாநஷ்ச ஸம்ஷயாத்மா விநஷ்யதி।
நாயம் லோகோ அஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மந:॥ 4.40 ॥
சிரத்தையுள்ளவன், புலனடக்கத்தாலும், ஞானத்தாலும், பரத்தில் ஆழ்ந்து, ஆன்மீக அமைதியை அடைகிறான். வேதங்களில் நம்பிக்கை இல்லாதவன் நாசமாகிறான், அவனுக்கு இவ்வுலகிலும், எவ்வுலகிலும் இன்பமில்லை.
யோகஸம்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸம்சிந்நஸம்ஷயம்।
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநம்ஜய॥ 4.41 ॥
செயலின் பலனில் இச்சையின்றி இறையருளால் சந்தேகங்கள் போக்கப்பட்டு, தன்னில் நிலைபெற்றவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை.
தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:।
சித்த்வைநம் ஸம்ஷயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத॥ 4.42 ॥
எனவே அர்ஜூனா, அறியாமையால் விளைகின்ற சந்தேகங்களை, அறிவெனும் ஆயுதத்தால் அழித்துவிட்டு, யோக கவசம் அணிந்து எழுந்து போரிடு.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஜ்ஞாநகர்மஸம்ந்யாஸயோகோ நாம சதுர்தோ அத்யாய:॥ 4 ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஞானகர்மஸந்யாஸ யோகம்' எனப் பெயர் படைத்த நான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.
Tuesday, January 31, 2012
Sunday, January 29, 2012
ஸ்ரீமத் பகவத்கீதை - மூன்றாவது அத்தியாயம்
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத த்ருதீயோ அத்யாய:।
கர்மயோகம்
அர்ஜுந உவாச।
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந।
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ॥ 3.1
அர்ஜுனன் சொன்னார்: " ஜனார்தன! கர்மத்தக் காட்டிலும் ஞானம் சிறந்த என்று உங்களால் கருதப்பட்டால் கேசவ! பின்னர் என்ன பயங்கரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்கிறீர்கள்?
வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே।
ததேகம் வத நிஷ்சித்ய யேந ஷ்ரேயோ அஹமாப்நுயாம்॥ 3.2
குழம்பிய போன்ற பேச்சினால் என் புத்தியக் கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே! எதனால் நான் மேன்மய அடமேனோ அந்த ஒன்றத் தீர்மானித்க் கூறுங்கள்.
ஸ்ரீபகவாநுவாச।
லோகே அஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக।
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்॥ 3.3
ஸ்ரீ பகவான் கூறினார்: " பாவமற்றவனே! இவ்வுலகில் என்னால் இருவககள் கொண்ட நிஷ்ட முன்பே கூறப்பட்ட. அவற்றில் ஸாங்க்ய யோகிகளுக்கு நிஷ்ட ஞானயோகத்தினாலும் யோகிகளுக்கு நிஷ்ட கர்மயோகத்தினாலும் அமகிற.
ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அஷ்நுதே।
ந ச ஸம்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி॥ 3.4
மனிதன் கர்மங்களச் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே நிஷ்கர்ம நிலய - கர்மயோக நிஷ்டய அடவதில்ல. கர்மங்களச் செய்யாமல் றப்பதாலேயே ஸித்திய அதாவ ஸாங்க்யயோக நிஷ்டயயும் பெறுவதில்ல.
ந ஹி கஷ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்।
கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:॥ 3.5
ஸந்தேஹமின்றி எந்த ஒருவனும் எக்காலத்திலும் ஒருகணம்கூடச் செயல் புரியாமல் இருப்பதில்ல. ஏனெனில் மனித ஸமுதாயம் அனத்ம் ப்ரக்ருதியிலிருந் உண்டான குணங்களால் தன்வசமிழந் வேறு வழியின்றிச் செயல் செய்யத் தூண்டப்படுகிற.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே॥ 3.6
அறிவிலியான எவன் புலன்கள் அனத்தயும் வலுவில் - வெளித்தோற்றத்தில் அடக்கி விட்டு மனதினால் அந்தப் புலன்நுகர் பொருட்கள நினத்க் கொண்டிருக்கிறானோ, அவன் பொய் நடத்தயுள்ளவன் - ஆஷாடபூதி எனக் கூறப்படுகிறான்.
யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே அர்ஜுந।
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஷிஷ்யதே॥ 3.7
ஆனால் அர்ஜீன! எவனொருவன் மனதினால் புலன்கள வசப்படுத்திப் பற்றில்லாதவனாக எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தக் கடப்பிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:।
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8
நீ சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்கள ஆற்றுவாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதக் காட்டிலும் கர்மங்கள ஆற்றுவ சிறந்த. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலப் பேணுவகூட ஸாத்யமாகா.
யஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம் கர்மபந்தந:।
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9
யாகத்தின் பொருட்டுச் செய்யப்படுகின்ற கர்மம் தவிர வேறு செயல்களில் ஈடுபடுவதனாலேயே இம்மனித ஸமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிற. (ஆகயால்) அர்ஜீன! பற்றுதல் இல்லாமல் அந்த யாகத்தின் பொருட்டே கடமய நன்கு ஆற்றுவாயாக.
ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:।
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோ அஸ்த்விஷ்டகாமதுக்॥ 3.10
கல்பத்தின் ஆரம்பத்தில் ப்ரஜகளின் தலவரான ப்ரம்மதேவன் யாகங்களுடன் மக்களாஇப் படத்விட்டுக் கூறினார்: "நீங்கள் இந்த வேள்வியின் மூலம் பல்கிப் பெருகுங்கள். இந்த வேள்வி உங்களுக்கு நீங்கள் விரும்பிய போகத்தத் தருவதாக ஆகட்டும்.
தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:।
பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரமவாப்ஸ்யத॥ 3.11
இந்த வேள்வியினால் தேவதகள வளரச் செய்யுங்கள். அந்த தேவதகள் உங்கள வளர்ச் செய்யட்டும், தன்னலம் கருதாத தன்மயுடன் ஒருவர் மற்றொருவர வளரச் செய்த நீங்கள் மேலான நன்மய அடவீர்களாக.
இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:।
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:॥ 3.12
வேள்வியினால் வளர்ச்சியடந்த தேவதகள் உங்களுக்குக் கேட்காமலேயே விரும்பிய போகங்கள நிச்சயமாகக் கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்கள அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனே.
யஜ்ஞஷிஷ்டாஷிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:।
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்॥ 3.13
வேள்வியில் எஞ்சிய உணவ உண்கின்ற சான்றோர்கள் எல்லாப் பாவங்களிலிருந்ம் விடுபடுகிறார்கள். ஆனால் எந்தப் பாவிகள் தம் உடலப் பேணுவதற்காகவே உணவச் சமக்கிறார்களோ, அவர்கள் பாவத்தயே உண்கிறார்கள்.
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:।
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:॥ 3.14
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்।
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்॥ 3.15
உயிரனங்களனத்ம் உணவிலிருந் உண்டாகின்றன. மழயிலிருந் உணவின் உற்பத்தி ஏற்படுகிற. மழ வேள்வியிலிருந் உண்டாகிற. வேள்வி விதிக்கப்பட்ட கர்மங்களிலிருந் உண்டாகிற. கர்மங்களின் தொகுப்பு வேதத்தில் உண்டாவ. மேலும் வேதம் அழிவற்ற பரமாத்மாவிடம் தோன்றிய என்று தெரிந் கொள். ஆகவே எங்கும் நிறந்த அழிவற்ற பரப்ரம்ம பரமாத்மா எப்பொழும் வேள்வியில் நிலபெற்றிருக்கிறார் (என்ப இதிலிருந்தே தெரிகிற).
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:।
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி॥ 3.16
பார்த்த! எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு பரம்பரயாகத் தொடங்கி வக்கப்பட்ட படப்புச் சக்ரத்திற்கு அனுகூலமாகப் பின்பற்றி நடக்கவில்லயோ - தன் கடமய ஆற்றவில்லயோ, புலன்கள் மூலம் போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்க யுடயவன் வீணே வாழ்கிறான்.
யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஷ்ச மாநவ:।
ஆத்மந்யேவ ச ஸம்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே॥ 3.17
ஆனால் எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும் மேலும் ஆத்மாவிலேயே த்ருப்தி கொண்டமனாகவும் ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கிறானோ, அவனுக்குச் செய்ய வேண்டிய செயல் எவும் இல்ல.
நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஷ்சந।
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஷ்சிதர்தவ்யபாஷ்ரய:॥ 3.18
அந்த மாமனிதன் இவ்வுலகில் கர்மங்களச் செய்வதாலும் எந்தவிதமான பயனும் இல்ல. கர்மங்களச் செய்யாவிட்டாலும் ஒரு பயனுவில்ல. அவ்வாறே உயிரினங்கள் அனத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆக வேண்டிய என்ற தொடர்பு சிறிகூட இல்ல.
தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர।
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:॥ 3.19
ஆகவே பற்றின்றி எப்பொழும் ஆற்ற வேண்டிய கடமயச் செவ்வனே நிறவேற்றிக் கொண்டிரு. ஏனெனில் பற்றின்றிக் கர்மங்களச் செய்கின்ற மனிதன் பரமாத்மாவஅடகிறான்.
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:।
லோகஸம்க்ரஹமேவாபி ஸம்பஷ்யந்கர்துமர்ஹஸி॥ 3.20
ஜனகர் முதலிய ஞானிகளும் பற்றின்றிக் கர்மங்களச் செய்ததன் மூலமே சிறந்த பேற்ற அடந்தனர். அவ்விதமே உலகத்திற்கு வழிகாட்டுவ என்பத நன்கு மனதில் கொண்டு நீயும் கர்மங்களச் செய்வதான் உனக்கு உரிய செயலாகும்.
யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே॥ 3.21
உயர்ந்த மனிதன் எத எதச் செய்கிறானோ ஏனயோரும் அத அதயே செய்வர். அவன் எதச் சான்றாக எடுத்க்காட்டுகிறானோ மனித ஸமுதாயம் அனத்ம் அதயே பின்பற்றி நடக்கிற.
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிம்சந।
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி॥ 3.22
அர்ஜுன! எனக்கு மூவுலகங்களிலும் செய்ய வேண்டிய கடம ஒன்றுமில்ல. அடய வேண்டிய எவும் அடயப்படாமலுமில்ல. ஆயினுங்கூட நான் கர்மத்திலேயேதான் ஈடுபட்டுள்ளேன்.
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:।
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 3.23
ஏனெனில் பார்த்த! ஒருகால் நான் கவனத்டன் கர்மங்களில் ஈடுபடாமல் இருந்தால் பெரிய தீங்கு விளயும். ஏனெனில் மனிதர்கள் எல்லாவிதங்களிலும் என்னுடய வழியயே பின்பற்றுகிறார்கள்.
உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்।
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:॥ 3.24
நான் கர்மங்களச் செய்யாமல்விட்டால் இம்மனிதர்கள் அனவரும் சீர்குலந் போவார்கள். மேலும் நான் சீர்குலவு செய்கிறவனாகவும் இம்மாந்தர் அனவரயும் அழிப்பவனாகவும் ஆவேன்.
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத।
குர்யாத்வித்வாம்ஸ்ததா அஸக்தஷ்சிகீர்ஷுர்லோகஸம்க்ரஹம்॥ 3.25
பரதகுலத் தோன்றலே! கர்மங்களில் பற்றுக் கொண்ட அஞ்ஞானிகள் எவ்விதம் கர்மங்களச் செய்கிறார்களோ பற்றில்லாத தத்வஞானியும் உலகத்திற்கு வழிகாட்டுதலச் செய்ய விரும்பி அவ்விதமே கர்மங்கள் செய்யவேண்டும்.
ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்।
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்॥ 3.26
பரமாத்ம ஸ்வரூபத்தில் நிலத் நிற்கின்ற ஞானி சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களப் பற்றோடு செய்யும் அஞ்ஞானிகளின் புத்தியில் குழப்பத்த அதாவ கர்மங்களயாற்றுவதில் ச்ரத்தயின்மய உண்டாக்கக் கூடா. மாறாகத் தானும் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களச் செவ்வனே ஆற்றி அவர்களயும் செய்யச் செய்யவேண்டும்.
ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஷ:।
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥ 3.27
எல்லாச் செயல்களும் எல்லா விதங்களிலும் ப்ரக்ருதியின் குணங்களால் செய்யப்படுகின்றன. ஆயினும் அஹங்காரத்தால் மழுங்கிய அறிவ உடய அஞ்ஞானி நான் கர்த்தர் என்று நினத்க் கொள்கிறான்.
தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:।
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே॥ 3.28
ஆனால் நீண்ட புஜங்கள் உடயவனே! குணங்களின் பிரிவு, கர்மங்களின் பிரிவு - இவற்றின் தத்வம் அறிந்த ஞானியோகி குணங்கள் அனத்ம் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந் அவற்றில் பற்றுக் கொள்ளாதிருக்கிறான்.
ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு।
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்॥ 3.29
ப்ரக்ருதியில் உண்டான குணங்களால் மிக்க மயக்கம் அடந்ள்ள மனிதர்கள் குணங்களிலும் கர்மங்களிலும் ஈடுபடுகிறார்கள். முற்றும் அறிந்திராத குறமதியுடய அந்த அஞ்ஞானிகள முழுமயான அறிவு பெற்றுள்ள ஞானி தடுமாறச் செய்யலாகா.
மயி ஸர்வாணி கர்மாணி ஸம்ந்யஸ்யாத்யாத்மசேதஸா।
நிராஷீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:॥ 3.30
அந்தர்யாமியான பரமாத்மாவாகிய என்னிடம் ஒன்றிய மனத்டன் எல்லாக் கர்மங்களயும் என்னிடம் அர்ப்பணம் செய்விட்டு ஆடயற்றவனாக மமகாரமற்றவனாக மேலும் தாபமற்றமனாக ஆகி யுத்தம் செய்.
யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:।
ஷ்ரத்தாவந்தோ அநஸூயந்தோ முச்யந்தே தே அபி கர்மபி:॥ 3.31
எந்த மனிதர்கள் குற்றங்குற காணாதவர்களாக ச்ரத்த உடயவர்களாக என்னுடய இக்கொள்கய எப்பொழும் பின்பற்றுகிறார்களோ அவர்களும் அனத்க் கர்மங்களிலிருந்ம் விடுபடுகிறார்கள்.
யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்।
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:॥ 3.32
ஆனால் எந்த மனிதர்கள் என்னிடம் குற காண்பவர்களாக என்னுடய இந்தக் கருத்த ஏற்று நடப்பதில்லயோ, அந்த மூடர்கள முழுமயான ஞானத்தில் அறிவு மயக்கம் அடந்தவர்கள் என்றும், சீரழிந் போனவர்கள் என்றும் அறிந் கொள்.
ஸத்ருஷம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி।
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி॥ 3.33
எல்லா உயிரினங்களும் இயல்ப அடகின்றன - அதாவ தம் இயல்புக்கேற்றவாறு தம்வசம் இன்றிச் செயல் புரிகின்றன. ஞானியும் தம இயல்புக்கு ஏற்றுவாறு செயல் புரிகிறார் என்றால் இதில் ஒருவர பலவந்தமான பிடிவாதம் என்ன செய்யும்?
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ।
தயோர்ந வஷமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ॥ 3.34
ஒவ்வொரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருளிலும் விருப்பு-வெறுப்புகள் மறந் இருக்கின்றன. மனிதன் அவ்விரண்டின் பிடியிலும் அகப்படக் கூடா. ஏனெனில் அவ்விரண்டும்தான் இவனுடய மேன்மப் பாதயில் இடயூறு விளவிக்கும் பெரும் எதிரிகள்.
ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வதர்மே நிதநம் ஷ்ரேய: பரதர்மோ பயாவஹ:॥ 3.35
நன்கு கடப்பிடிக்கப்பட்ட பிறருடய தர்மத்தக் காட்டிலும் குணக்குறவிருப்பினும் தன்னுடய தர்மம் மிகவும் உயர்ந்த. ஸ்வதர்மத்தக் கடப்பிடிப்பதில் இறப்பம் மேன்மயே தரும். பிறருடய தர்மம் பயத்த விளவிக்கும்.
அர்ஜுந உவாச।
அத கேந ப்ரயுக்தோ அயம் பாபம் சரதி பூருஷ:।
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:॥ 3.36
அர்ஜூனன் கூறினார்: 'க்ருஷ்ண! பின் இந்த மனிதன் தான் விரும்பாவிட்டாலும் பலவந்தமாகத் தூண்டப்பட்டவன்போல எதனால் ஏவப்பட்டுப் பாவத்தைச் செய்கிறான்?
ஸ்ரீபகவாநுவாச।
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:।
மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்॥ 3.37
ஸ்ரீ பகவான் கூறினார்: ரஜோ குணத்திலிருந்து உண்டாக்கிய இந்த காமம்தான் கோபமாகும். இது பெருந்தீனிக்காரன். போகங்களில் 'போதும்' என்ற எண்ணமில்லாதவன். மேலும் பெரிய பாவி. இதையே இந்த விஷயத்தில் பகைவனாக அறிந்து கொள்.
தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஷோ மலேந ச।
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்॥ 3.38
எவ்விதம் புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்படுகின்றனவோ மேலும் எவ்விதம் கருப்பையினால் - தசைமூட்டத்தினால் கரு மறைக்கப்படுகிறதோ, அவ்விதமே அந்தக் காமத்தினால் இந்த ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.
ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா।
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச॥ 3.39
மேலும் அர்ஜூன! த்ருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும் காமம் என்ற வடிவத்தில் உள்ளதும் ஞானிகளுக்கு என்றுமே பகைவனுமாகிய இந்தக் காமத்தினால் மனிதனுடைய ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே।
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்॥ 3.40
புலன்கள், மனம், புத்தி இவையெல்லாம் இந்தக் காமத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காமம்தான் மனம், புத்தி, புலன்களைக் கொண்டு ஞானத்தை மறைத்து ஜீவாத்மாவை மோகத்திற்கு உட்படுத்துகிறது.
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப।
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஷநம்॥ 3.41
ஆகவே அர்ஜூன! நீ முதலில் புலன்களை வசபடுத்தி ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற இந்தப் பெரும் பாவியான காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்துவிடு.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥ 3.42
புலன்கள் உடலைக் காட்டிலும் மேலான்வை என்று கூறுகிறார்கள். அவை உயர்ந்தவை; பலமுள்ளவை; நுண்ணியவை. இந்தப் புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது. மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. மேலும் எது புத்தியைக் காட்டிலும் மிகவும் மேலானதோ அதுவே ஆத்மா.
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா।
ஜஹி ஷத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்॥ 3.43
நீண்ட புஜங்களுடையவனே! இவ்விதம் புத்தியைக் காட்டிலும் ஆத்மா மிகவும் மேலானவன்; நுண்ணியவன்; பலம் உள்ளவன் என்று அறிந்து புத்தியினால் மனதை வசப்படுத்தி, காமம் என்ற வெற்றி கொள்ள முடியாத சத்ருவைக் கொன்றுவிடு.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
கர்மயோகோ நாம த்ருதீயோ அத்யாய:॥ 3 ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'கர்மயோகம்' எனப் பெயர் படைத்த மூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

Friday, January 27, 2012
ஸ்ரீமத் பகவத்கீதை - இரண்டாவது அத்தியாயம்
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத த்விதீயோ அத்யாய:।
ஸாங்க்யயோகம்
ஸம்ஜய உவாச।
தம் ததா க்ருபயாவிஷ்டமஷ்ருபூர்ணாகுலேக்ஷணம்।
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:॥ 2.1 ॥
ஸஞ்ஜயன் கூறினான்: பரிவும், கவலையும் நிறைந்து கண்ணீர் ததும்ப அமர்ந்துவிட்ட அர்ஜுனனைப் பார்த்து மதுஸ தனரான ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார்.
ஸ்ரீபகவாநுவாச।
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥
முழுமுதற் கடவுள் (பகவான்) கூறினார்: எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥
ப்ருதாவின் புத்திரனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல. இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.
அர்ஜுந உவாச।
கதம் பீஷ்மமஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுஸூதந।
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந॥ 2.4 ॥
அர்ஜுனன் கூறினான்: மதுவை அழித்தவரே (கிருஷ்ணரே), எனது வந்தனைக்குரிய பீஷ்மர், துரோணர் முதலியோர்களை போரில் எதிர்த்து எவ்வாறு அம்புகளுடன் தாக்குவேன்?
குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந்
ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே।
ஹத்வார்தகாமாம்ஸ்து குருநிஹைவ
புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்॥ 2.5 ॥
எனது ஆசிரியர்களான பெரு மக்களின் வாழ்வை அழித்து நான் வாழ்வதை விட பிச்சையெடுப்பது மேல். அவர்கள் பேராசை கொண்டவர்களாயினும் பெரியோர்களே. அவர்கள் கொல்லப்பட்டால் நாம் குருதிக்கறை படிந்த இன்பங்களை அனுபவிப்வராவோம்.
ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:।
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம:
தே அவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:॥ 2.6 ॥
எது சிறந்ததென்றும் நாம் அறியோம். அவர்களை நாம் வெல்லுதலா அல்லது அவர்கள் நம்மை வெல்வதா. யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்பமாட்டோமோ அந்த திருதராஷ்டிரர் மக்களே நம் முன்பு போர் செய்யத் தயராக நிற்கின்றனரே.
கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:।
யச்ச்ரேய: ஸ்யாந்நிஷ்சிதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தே அஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்॥ 2.7 ॥
இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்தவனாயிருக்கிறேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று தெளிவாக்கும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். உம்மிடம் புகலிடம் கொண்ட சீடன் யான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.
ந ஹி ப்ரபஷ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம்।
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்॥ 2.8 ॥
என் புலன்களை வறட்டுகின்ற இந்தத் துன்பத்தைப் போக்கடிக்க ஒரு வழியையும் என்னால் காண முடியவில்லை. மேலுலகத்துத் தேவர்களைப் போல இவ்வுலகை எதிரொருவரின்றி ஆளும் அரசைப் பெறினும் இதை என்னால் அழிக்க முடியாது.
ஸம்ஜய உவாச।
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஷம் குடாகேஷ: பரம்தப:।
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ॥ 2.9 ॥
ஸஞ்ஜயன் கூறினான்: எதிரிகளைத் தவிக்கச் செய்பவனான அர்ஜுனன் இவ்வாறு கூறி, ~~கோவிந்தா! நான் போரிடேன்|| என்று கூறிப் பேச்சற்று அமர்ந்தான்.
தமுவாச ஹ்ருஷீகேஷ: ப்ரஹஸந்நிவ பாரத।
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:॥ 2.10 ॥
பரத குலத் தோன்றலே, அவ்வமயம், இரு தரப்புச் சேனைகளுக்கிடையே, துயரத்தால் பீடிக்கப்பட்டமர்ந்திருந்த அர்ஜுனனனைப் பார்த்து, புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஸ்ரீபகவாநுவாச।
அஷோச்யாநந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஷ்ச பாஷஸே।
கதாஸூநகதாஸூம்ஷ்ச நாநுஷோசந்தி பண்டிதா:॥ 2.11 ॥
முழு முதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போலப் பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்க்காகவோ, மாண்டவர்க்காகவோ வருந்துவதில்லை.
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥
நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த ஒரு காலமென்றுமிருக்கவில்லை. எதிர்காலத்திலும் நம்மிலெவரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை.
தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥
உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.
மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:।
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥
குந்தி மகனே! இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலப் போக்கிலான அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே, புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றனவாதலால், பரத குலத்தோன்றலே, இவைகளால் பாதிக்கப்படாமல் பொறுத்துக்கொள்ளக் கற்றுக் கொள்வாயாக.
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।
ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥
மனிதரில் சிறந்தோனோ (அர்ஜுனா), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இருநிலையிலும் தந்நிலை மாறாதவனுமே விடுதலைக்கு நிச்சயமாய்த் தகுதி பெற்றவனாயிருக்கிறேன்.
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி:॥ 2.16 ॥
உண்மை அறிந்தவர்கள், நிலையற்றவற்றிற்கு நீடிப்பும், நிலைத்தவைக்கு முடிவுமில்லையென்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கைகளையும் ஆய்ந்தே இதை இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.
அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥
உடல் முழுவதும் பரவியிருப்பது அழிவற்றதென்று அறிவாய்@ அழிவற்றதான ஆத்மாவைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை.
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥
ஜட உடல் மட்டுமே அழிவுறுவது. உடலில் வாழும் ஜீவாத்மாவோ நித்தியமானது, அளவிட இயலாதது, அழிவற்றது. எனவே பரதகுலத் தோன்றலே, போரிடுவாய்!
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே॥ 2.19 ॥
ஜீவாத்மா கொலை புரிகின்றதென்றோ, கொல்லுகின்றதென்றோ கருதுபவன் புரிந்து கொள்ளாதவனே. அறிவுள்ளோர் ஆத்மா அழிவதோ, அழிப்பதோ இல்லை என்பதை அறிகின்றார்கள்.
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥
ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை. அவன் பிறப்பற்ற, நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான். உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை.
வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥
பார்த்தனே! ஆத்மா அழிவற்றது, பிறப்பற்றது, மாற்றமில்லாததென்றறிந்த ஒருவன் யாரையாகிலும் கொல்வதோ, கொலை செய்யப்படக் காரணமாவதோ எப்படி?
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥
பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.
நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:।
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:॥ 2.23 ॥
ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.
அச்சேத்யோ அயமதாஹ்யோ அயமக்லேத்யோ அஷோஷ்ய ஏவ ச।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோ அயம் ஸநாதந:॥ 2.24 ॥
தனி ஆத்மா பிளக்க முடியாதது. கரைக்க முடியாதது. எரிக்கவோ, உலர்க்கவோ முடியாதது. என்றுமிருப்பது, எங்கும் நிறைந்தது, அசையாதது, என்றும் மாறாமலிருப்பது.
அவ்யக்தோ அயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே।
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி॥ 2.25 ॥
ஆத்மா கண்ணுக்கெட்டாததும், சிந்தனைக்கப்பாற்பட்டதும், மாற்ற முடியாததுமாகும். இதை நன்கறிந்த, உடலுக்காக வருந்தாமலிருப்பாயாக.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்।
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.26 ॥
மேலும், ஆத்மா எப்போதுமே பிறந்து, இறந்து கொண்டிருப்பதாகவே நீ எண்ணினாலும், பலம் பொருந்திய புயங்களை உடையோனோ! அதில் கவலைப்படுதற்கு என்ன உள்ளது?
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச।
தஸ்மாதபரிஹார்யே அர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.27 ॥
பிறந்தவன் எவனுக்கும் மரணமும், மரணப்பட்டவனுக்குப் பிறப்பும் நிச்சயமே. தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் இதற்காகக் கவலைப்படாதே.
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத।
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா॥ 2.28 ॥
படைக்கப்பட்டவை எல்லாமே முதலில் தோன்றாதிருந்து, இடைநிலயில் தோன்றி, இறுதியில் மீண்டும் மறைகி;ன்றன. எனவே, கவலைப்பட என்ன இருக்கிறது?
ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம்
ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:।
ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதி
ஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥
சிலர் ஆத்மாவை அதிசயமானது போலப் பார்க்கின்றனர், சிலர் ஆத்மாவை அதிசயமானதாக வர்ணிக்கின்றனர், சிலர் அதிசயமாகக் கேட்பவராகவும், மற்றும் சிலர் கேட்ட பின்னும் ஆத்மாவைச் சற்றும் அறியாதவராகவும் இருக்கின்றனர்.
தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத।
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30 ॥
பாரத! உடலில் உறைபவன் நித்தியனாதலால் என்றும் அழிக்கப்பட முடியாதவனாக இருக்கிறான். எனவே பிறப்புடைய எந்த ஆத்மாவுக்காகவும் நீ வருந்தவேண்டாம்.
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥
ஒரு சத்திரியன் என்ற முறையில் உனது முக்கிய கடமையைப் பற்றிக் கருதுவாயேயாயினும், நீதிக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமைகள் உனக்கில்லை. எனவே தயங்கத் தேவையில்லை.
யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்।
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥
பார்த்தனே! வலியவரும் போர்வாய்ப்புகள் சுவர்க்கலோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் அரசகுலத்தோர் மகிழ்கின்றனர்.
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥
ஆனால், இந்த அறப்போரினின்று பின்வாங்கினாலோ கடமையினின்றும் தவறியதாலான தீயவிளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவதோடு, போர்வீரனெனும் பெயரையும் இழப்பாய்.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥
மக்கள் உன்னை என்றும் அவதூறு செய்வர். மதிக்கப்பட்ட ஒருவனுக்கு அவமானம் மரணத்தைவிட மோசமானதே.
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥
உன் பெயரையும், புகழையும் பற்றிப் பெருமதிப்புக் கொண்டுள்ள பெரும் போர்த்தலைவர்கள், பயத்தால் நீ களம் விட்டதாக எண்ணி, உன்னைக் கோழையாய்க் கருதுவர்.
அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥
உனது எதிரிகள் அன்பிலாதவற்றைக் கூறி உன்னைத் தூற்றுவர். இதைக் காட்டிலும் உனக்குத் துன்பம் தருவது வேறு என்ன இருக்க முடியும்?
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய:॥ 2.37 ॥
குந்திமகனே! போரில் மாய்ந்து நீ மேலுலகை அடையலாம் அல்லது வெற்றிபெற்று இவ்வுலகை அரசாளலாம். எனவே எழுந்து, உறுதியுடன் போர்புரிவாயாக.
ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி॥ 2.38 ॥
இன்ப, துன்ப, லாப நஷ்டம், வெற்றி, தோல்வி இவைகளைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக. இவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ தீய விளைவுகளை அடையமாட்டாய்.
ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஷ்ருணு।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி॥ 2.39 ॥
ஸாங்க்ய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுகாறும் விளக்கினேன். பலன் விளைவுகளுக்காயன்றி ஒருவன் செயல்படும் யோகத்தைப் பற்றிய அறிவை இப்போது கேள். ப்ருதாவின் மகனே, இவ்வாறான அறிவோடு செயல்பட்டால், செயல்களின் விளைவெனும் விலங்கினின்றும் நீ விடுதலை பெறுவாய்.
நேஹாபிக்ரமநாஷோ அஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்॥ 2.40 ॥
இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந।
பஹுஷாகா ஹ்யநந்தாஷ்ச புத்தயோ அவ்யவஸாயிநாம்॥ 2.41 ॥
இவ்வழியிலுள்ளோர் உறுதியான நோக்கமுடையோர். அவர்களது இலட்சியம் ஒன்றே. குருக்களின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளை உடையதாக ஆகின்றது.
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஷ்சித:।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:॥ 2.42 ॥
காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்।
க்ரியாவிஷேஷபஹுலாம் போகைஷ்வர்யகதிம் ப்ரதி॥ 2.43 ॥
சிற்றறிவுடைய மாந்தர் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற் பிறவி அடைதல், அதிகாரமடைதல் முதலான பலன் கருதிச் செய்யும் செயல்களைச் சிபாரிசு செய்கின்றன. புலன் நுகர்ச்சியையும், செல்வமிகு வாழ்வையும் விரும்புபவர் இதைவழட உயர்ந்ததேதுமில்லை என்று கூறுகின்றனர்.
போகைஷ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே॥ 2.44 ॥
புலன்நுகர்வு, செல்வம் இவைகளை மிகவும் விரும்புவதால் மயங்கியவர்களின் மனங்களில், பரமப்பிரபுவின் பக்தித் தொண்டிற்கான நிலையான உறுதி உண்டாவதில்லை.
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்॥ 2.45 ॥
வேதங்கள் பொதுவாக மூன்று பௌதிக இயற்கைக் குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா! இவை மூன்றிற்கும் மேற்பட்டவனாவாயாக. எல்லா இரட்டைகளிலிருந்தும், அடைதல் காத்தல் இவைகளுக்கான கவலைகளிலிருந்தும் விடுபட்டுத் தன்னில் நிலை பெற்றிருப்பாயாக.
யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:॥ 2.46 ॥
ஒரு சிறு கிணற்றால் ப+ர்த்தி செய்யப்படும் தேவைகளெல்லாமே, ஒரு பெரும் நீர்த்தேக்கத்தால் உடன் ப+ர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவைகளுக்குப் பின் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥
உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்குப் ப+ரண உரிமை உண்டு@ செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே@ செயலற்ற நிலையிலும் விருப்பங் கொள்ளாதே.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥
யோகத்தில் உறுதி கொள் அர்ஜுனா@ வெற்றி தோல்வியின் பற்றைத் துறந்து கடமையைச் செய். இதுபோன்ற மன ஒருமையே யோகமென்றழைக்கப்படுகின்றது.
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநம்ஜய।
புத்தௌ ஷரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:॥ 2.49 ॥
பக்தித் தொண்டால், பலன் நோக்குக் கருமங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு, பக்தி உணர்வுக்குப் ப+ரண சரணடையக் கடவையாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவர்கள்.
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே।
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்॥ 2.50 ॥
பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்தும் தப்புகின்றான். எனவே எல்லாச் செயல்களின் செயற்கலையான யோகத்திற்காய்ப் பாடுபடுவாயாக, அர்ஜுனா.
கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:।
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்॥ 2.51 ॥
சான்றோர், பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இறைவனிடம் அடைக்கலம் புகுந்து இகவுலகில் செயல்களின் பலன்களைத் துறப்பதால் ஜனன மரணச் சுழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர். இவ்விதமாக அவர்கள் துன்பங்களுக்கப்பாற்பட்ட நிலையை அடைய முடியும்.
யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி।
ததா கந்தாஸி நிர்வேதம் ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச॥ 2.52 ॥
மயக்கமெனும் இவ்வடர்ந்த காட்டை உன் அறிவு தாண்டிவிட்டால், இதுவரை கேட்டவை, இனிக் கேட்க வேண்டியவை இவற்றிற்கு, சமநிலையுடையவனாகி விடுவாய் நீ.
ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53 ॥
வேதங்களின் மலர் மொழிகளால் மேலும் மனங்கவரப்படாத நிலையை உன்னறிவு அடையும் போதுதான், தன்னுணர்வு ஆழ்வில் நீ திளைத்திருக்கும்போது தான், நீ தெய்வீக உணர்வை அடைந்து விட்டவனாக இருப்பாய்.
அர்ஜுந உவாச।
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஷவ।
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்॥ 2.54 ॥
அர்ஜுனன் வினவினான்: உன்னதத்தில் இவ்வாறே நிலைபெற்ற உணர்வுடையோனின் அறிகுறிகள் யாவை? அவனது மொழி எது? எவ்வாறு பேசுவான்? எப்படி இருப்பான்? எப்படி நடப்பான்?
ஸ்ரீபகவாநுவாச।
ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்।
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே॥ 2.55 ॥
பகவான் கூறினார்: பார்த்தனே! மனக் கற்பனையில் எழும் புலன் பற்றுக்களின் பலவிதங்களைத் துறந்து, எப்பொழுது ஒருவனது மனம் தன்னில் திருப்தி அடைகின்றதோ அப்போது அவன் உன்னத உணர்வில் நிலைபெறுகிறான்.
து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:।
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே॥ 2.56 ॥
மூவகைத் துயரங்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்படாதவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்று, பயம், கோபம் இவற்றினின்று விடுபட்டவனுமே மனம் நில பெற்ற முனிவன் என்றழைக்கப்படுகிறான்.
ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஷுபாஷுபம்।
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.57 ॥
நன்மை பெறுவதால் மிகக் களிப்பும், தீயவற்றால் கவலையும் கொள்ளாது, பற்றற்று இருப்பவனே ப+ரண அறிவில் நிலைபெறுகிறான்.
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ அங்காநீவ ஸர்வஷ:।
இந்த்ரியாணீந்த்ரியார்தே அப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.58 ॥
புலன்களை அவற்றின் நோக்கப் பொருள்களிலிருந்தும் ஆமை தன் உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல், விலக்கிக் கொள்பவனே உண்மையாக அறிவில் நிலைபெற்றவனென்றறியப் படுகிறான்.
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:।
ரஸவர்ஜம் ரஸோ அப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே॥ 2.59 ॥
புலன் நுகர்வினின்றும் உடலை உடைய ஆத்மா கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட புலன் நுகர்வுப் பொருட்களுக்கான சுவை இருக்கலாம். ஆனால், உயர்ந்த சுவையொன்றை அனுபவிப்பதால், அத்தகு ஈடுபாடு முழுவதுமாய் முற்றுப்பெற, அவன் உணர்வில் நிலைபெறுகின்றான்.
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சித:।
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:॥ 2.60 ॥
பகுத்தறிவு நிறைந்து புலன்களைக் கட்டுப்படுத்த முயலும் ஒருவனது மனதைக் கூட, சக்திவாய்ந்த புலன்கள் இழுத்துச் சென்றுவிடுகின்றன.
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:।
வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.61 ॥
புலன்களை அடக்கி, உணர்வை என்னில் நிறுத்துபவனே நிலைபெற்ற அறிவுடையோனாகிறான்.
த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோ அபிஜாயதே॥ 2.62 ॥
புலன் நோக்கப் பொருட்களை எண்ணுவதால் ஒருவன் பற்றை வளர்த்துக் கொள்கிறான். இந்தப் பற்றினின்றும் காமமும், காமத்திலிருந்து சினமும் வளர்கின்றன.
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:।
ஸ்ம்ருதிப்ரம்ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத்ப்ரணஷ்யதி॥ 2.63 ॥
சினத்திலிருந்து மயக்கமும், மயக்கத்தால் நினைவு நில இழப்பும் ஏற்படுகிறது. நினைவு குழம்புவதால் அறிவு இழக்கப்பட்டதும் ஒருவன் மீண்டும் ஜடச் சுழலில் இழிந்து வீழ்கிறான்.
ராகத்வேஷவிமுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஷ்சரந்।
ஆத்மவஷ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி॥ 2.64 ॥
விடுதலையின் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் புலனடக்கம் செய்யக் கூடியவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விருப்பு, வெறுப்புக்களிலிருந்து விடுபடுகிறான்.
ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்யவதிஷ்டதே॥ 2.65 ॥
தெய்வீக உணர்வில் நிலைபெற்றுவிட்ட ஒருவனுக்கு, ஜட உலகின் மூவகைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. அத்தகு ஆனந்த நிலையிலே, ஒருவனது அறிவு மிக விரைவாக நிலைபெறுகிறது.
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா।
ந சாபாவயத: ஷாந்திரஷாந்தஸ்ய குத: ஸுகம்॥ 2.66 ॥
உன்னதமான உணர்வு பெறாதவனுக்கு கட்டுப்பாடான மனதோ, நிலையான அறிவோ கிடையாது. இவையின்றேல் அமைதிக்கு வழியில்லை. அமைதியின்றேல் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ அநுவிதீயதே।
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி॥ 2.67 ॥
கடுங்காற்றால், படகு நீரில் அடித்துச் செல்லப்படுவது போலவே, மனம் ஈர்க்கப்படும் ஒரே ஒரு புலன் கூட, மனிதனின் அறிவை அழுத்துச் சென்று விடும்.
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஷ:।
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.68 ॥
எனவே, பலம் பொருந்திய புய வலிமையுடையோனே! நுகர்ச்சிப் பொருட்களினின்றும் முற்றுமாய் விலக்கிக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களை உடையோன் நிலைத்த அறிவுடையவனாகிறான்.
யா நிஷா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ।
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஷா பஷ்யதோ முநே:॥ 2.69 ॥
தற்கட்டுப்பாடுள்ளவனுக்கு எல்லா உயிர்களுக்கும் இரவாக இருப்பதே எழும் நேரமாம். அவர்கட்கு எழும் நேரமோ அவனுடைய (ஆய்ந்தறியும் முனிவனுடைய) இரவாக உள்ளது.
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஷந்தி யத்வத்।
தத்வத்காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே
ஸ ஷாந்திமாப்நோதி ந காமகாமீ॥ 2.70 ॥
ஆசைகளின் தொடர்ந்த பெருக்கால் பாதிக்கப்படாதவன் மட்டுமே, தொடர்ந்து நதிகளின் பெருக்கால் புகப்பட்டாலும், அமைதியாய் என்றுமிருக்கும் கடல் போல அமைதியை அடைய முடியும். இத்தகு ஆசைகளைப் ப+ர்த்தி செய்ய முயற்சி செய்பவனல்ல.
விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஷ்சரதி நி:ஸ்ப்ருஹ:।
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஷாந்திமதிகச்சதி॥ 2.71 ॥
புலன் நுகர்விற்கான ஆசைகள் எல்லாவற்றையும் துறந்துவிட்டவனும், விருப்பங்களற்றவனும், எல்லா உரிமையுணர்வுகளையும் துறந்திருப்பவனும், பொய்த்தன்னுணர்வற்றவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி।
ஸ்தித்வாஸ்யாமந்தகாலே அபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி॥ 2.72 ॥
எந்நிலையை அடைந்தால் மனிதன் மீண்டும் குழப்பமே அடையமாட்டானோ, அதுவே தெய்வீக ஆன்மீக வழியாகும். இவ்வாறு நிலைபெற்றவன், வாழ்வின் கடைசி நேரத்திலாயினும் கூட, இறைவனின் அரசினைச் சேர்கின்றான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஸாங்க்யயோகோ நாம த்விதீயோ அத்யாய:॥ 2 ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஸாங்க்யயோகம்' எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

ஸ்ரீமத் பகவத்கீதை - முதல் அத்தியாயம்
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா ॥
அத ப்ரதமோத்யாய
அர்ஜுந விஷாத யோகம்
த்ருதராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।
மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥
திருதராஷ்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத் தலமான குருட்ஷேத்திரத்தில் போர் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு என் மகன்களும், பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜயனே?
ஸம்ஜய உவாச।
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா।
ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥
சஞ்ஜயன் கூறினார்: மன்னனே, பாண்டுவின் புதல்வரால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆசிரியரை அணுகிப் பின்வருமாறு பேசலானான்.
பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥
ஆசிரியரே, துருபதகுமாரனான உங்கள் சீடனால் மிகத் திறமையாக அணிவகுக்கப்பட்ட, பாண்டுபுத்திரரின் சிறந்த சேனையைப் பாருங்கள்.
அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி।
யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥
இதோ இந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வீரமிகு வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற சிறந்த மகாரதர்களும் இருக்கின்றனர்.
த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்।
புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥
த்ருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித் குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த, பலமிக்க போர்நாயகர்களும் இருக்கின்றனர்.
யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥
வீரனான யுதாமன்யு, பலமிக்க உத்தமௌஜன், மற்றும் சுபத்ரையின் புதல்வன், திரௌபதியின் குமாரர்கள் இவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே சிறந்த ரதப்போர் வீரர்கள்.
அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம।
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥
அந்தணரில் சிறந்தவரே, எனது சேனையை நடத்தும் தகுதி வாய்ந்த தலைவர்களை நீர் அறியும்படி கூறுகின்றேன்.
பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:।
அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥
எப்போதும் போரில் வெற்றிகாண்பவரான தாங்களும், பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், பரிசிரவஸ் என்ற சோமதத்தனின் குமாரன் போன்ற பெரும் வீரரும் இருக்கின்றீர்கள்.
அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:।
நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥
எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற வீரர்கள் பிறரும் உள்ளனர். அவர்கள் எல்லோருமே பலவிதமான ஆயுதங்களை உடையவர்களாயும், போர்க்கலையில் மிகத் தேர்ந்தவர்களாயுமிருக்கின்றனர்.
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥
பாட்டனார் பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட நமது பலம் கணக்கிலடங்காதது. ஆனால் பீமனால் கவனமாய்ப் பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக் கூடியதாக இருக்கின்றது.
அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥
படை அணிவகுப்பின் முக்கியமான போர்முனை நிலைகளிலிருந்து கொண்டு நீங்களெல்லோரும் பாட்டனார் பீஷ்மருக்குப் பாதுகாப்புக் கொடுப்பீர்களாக.
தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥
பிறகு குருவம்சத்தின் பெருவீர முதியவரும், போர் வீரரின் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனைபோன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்வைக் கொடுத்தார்.
தத: ஷங்காஷ்ச பேர்யஷ்ச பணவாநககோமுகா:।
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஷப்தஸ்துமுலோ அபவத்॥ 1.13 ॥
அதன்பின் சங்குகள், குழல்கள், முரசுகள், பறைகள், கொம்புகள், இவை ஒரே சமயத்தில் முழக்கப்பட, அவ்வதிர்வு கிளர்ச்சியை எழுப்புவதாக இருந்தது.
தத: ஷ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ।
மாதவ: பாண்டவஷ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதக்மது:॥ 1.14 ॥
மறுதரப்பில், வெண்புரவிகள் ப+ட்டிய மிகச் சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் தங்கள் தெய்வீகமான சங்குகளை முழக்கினர்.
பாம்சஜந்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநம்ஜய:।
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஷங்கம் பீமகர்மா வ்ருகோதர:॥ 1.15 ॥
பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்ச்சஜன்யத்தை முழக்கினார். அர்ஜுனன் தனது தேவதத்தத்தையும், பெருந் தீனிக்காரனும், வீர சாகசங்களைப் பரிபவனுமான பீமன் பௌண்ட்ரமெனும் பெரும் சங்கையும் முழக்கினர்.
அநம்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:।
நகுல: ஸஹதேவஷ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ॥ 1.16 ॥
காஷ்யஷ்ச பரமேஷ்வாஸ: ஷிகண்டீ ச மஹாரத:।
த்ருஷ்டத்யும்நோ விராடஷ்ச ஸாத்யகிஷ்சாபராஜித:॥ 1.17 ॥
த்ருபதோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வஷ: ப்ருதிவீபதே।
ஸௌபத்ரஷ்ச மஹாபாஹு: ஷங்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்॥ 1.18 ॥
குந்தியின் புதல்வனான மன்னன் யுதிஷ்டிரன் அநந்தவிஜயமெனும் சங்கையும், நகுலனும் ஸஹாதேவனும் ஸ{கோஷம், மணிபுஷ்பகமெனும் சங்குகளையும் ஒலித்தனர். பெரும் வில்லாளியான காசிராஜன், பெரும் போர்வீரனான சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், வெற்றி கொள்ளப்படாதவனான ஸாத்யகி, துருபதன், திரௌபதியின் புதல்வர்கள் மற்றும் பெரும் பலம் பொருந்திய, சுபத்ரை மகனான அபிமன்யு போன்றவர்கள் தத்தம் சங்குகளை முழங்கினர்.
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்।
நபஷ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ அப்யநுநாதயந்॥ 1.19 ॥
சங்கொலிகளின் பல்வேறு முழக்கங்கள் பேரொலியாக எழுந்து ப+மியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க திருதராஷ்டிரரின் மகன்களுடைய இதயங்கள் சிதறலாயின.
அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:।
ப்ரவ்ருத்தே ஷஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ:॥ 1.20 ॥
ஹ்ருஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே।
மன்னனே, அந்த நேரத்தில், ஹனுமான் கொடியை உடைய தேரிலமர்ந்திருந்த பாண்டு மகன், அர்ஜுனன், திருதராஷ்டிரரின் மகன்களை நோக்கி அம்பெய்யத் தயாராக வில்லை ஏந்தி, ரிஷிகேசனான ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிப் பின்வருமாறு கூறலானான்.
அர்ஜுந உவாச।
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத॥ 1.21 ॥
யாவதேதாந்நிரிக்ஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்।
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே॥ 1.22 ॥
அர்ஜுனன் கூறினான்: அழிவற்றவரே! போர்புரியும் ஆவலுடையவராய் இங்கு அணிவகுத்துள்ளவரில், நான் எவரோடு இந்தப் பெரும் போர் முயற்சியில் பொருத வேண்டும் என்று பார்க்கும்படியாக, எனது தேரைச் செலுத்தி இரு படையினருக்கு நடுவே நிறுத்துவீராக.
யோத்ஸ்யமாநாநவேக்ஷே அஹம் ய ஏதே அத்ர ஸமாகதா:।
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ:॥ 1.23 ॥
திருதராஷ்டிரனின் கெடுமதியுடைய மகன் துரியோதனனை மகிழ்விக்கும் விருப்பத்தோடு இங்கு போர்புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்கட்டும்.
ஸம்ஜய உவாச।
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஷோ குடாகேஷேந பாரத।
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்॥ 1.24 ॥
ஸஞ்ஜயன் கூறினான்: பரத குலத்தவனே, அர்ஜுனனால் இவ்வாறு கூறப்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனது மிகச் சிறந்த தேரை இருதரப்புச் சேனைகளின் நடுவே செலுத்தி நிறுத்தினார்.
பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்।
உவாச பார்த பஷ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி॥ 1.25 ॥
பீஷ்மர், துரோணர், மற்றும் பல உலகத் தலைவர்களின் முன்னிலையில், ~~பார்த்தா, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்தினரைப் பார்|| என்று ஹ்ருஷீகேசர் கூறினார்.
தத்ராபஷ்யத்ஸ்திதாந்பார்த: பித்ருநத பிதாமஹாந்।
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ருந்புத்ராந்பௌத்ராந்ஸகீம்ஸ்ததா॥ 1.26 ॥
ஷ்வஷுராந்ஸுஹ்ருதஷ்சைவ ஸேநயோருபயோரபி।
இருதரப்புச் சேனைகளிடையே அங்கு தந்தைமாரும், பாட்டனார்களும், ஆசிரியர்களும், மாமாக்களும், சகோதரர்களும், மகன்களும், பேரன்களும், நண்பர்களும், மாமனார்களும் மற்றும் பல சன்மை விரும்பிகளையும் போர்க்களத்தில் கூடியிருக்கக் கண்டான் அர்ஜுனன்.
தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்॥ 1.27 ॥
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்।
குந்திமகனான அர்ஜுனன் அந்த நண்பர்களையும், உறவினர்களையும் கண்டபின், பரிவால் நிறைந்து இவ்வாறு கூறலானான்.
அர்ஜுந உவாச।
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்॥ 1.28 ॥
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஷுஷ்யதி।
அர்ஜுனன் கூறினான்: என் அன்புக்குரிய கிருஷ்ணா, போரிடும் உணர்வோடு என்முன் கூடியுள்ள எனது நண்பரையும், உறவினரையும் கண்டு என் உடல் நடுங்கி வாய் உலர்வதாக உணர்கிறேன்.
வேபதுஷ்ச ஷரீரே மே ரோமஹர்ஷஷ்ச ஜாயதே॥ 1.29 ॥
காண்டீவம் ஸ்த்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே।
என் உடல் முழுதும் நடுங்குகின்றது. மயிர்க்கூச்செறிகின்றது. என் வில்லான காண்டீபம் கைகளிலிருந்து நழுவுகின்றது. என் சருமம் எரிகின்றதே.
ந ச ஷக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந:॥ 1.30 ॥
நிமித்தாநி ச பஷ்யாமி விபரீதாநி கேஷவ।
இனியும் இங்கு என்னால் நிற்க முடியாது. என் மனம் குழம்புகின்றது. நான் என்னையே மறக்கின்றேன். கேசியை அழித்தவரே, கெட்ட சகுணங்களையே நான் காண்கின்றேன்.
ந ச ஷ்ரேயோ அநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே॥ 1.31 ॥
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச।
சொந்த உறவினரை இப்போரில் கொல்வதால் என்ன நன்மை வருமென்பதை என்னால் காணமுடியவில்லை. இதிலே பெறக்கூடிய வெற்றியையோ, அரசையோ, இன்பத்தையோ நான் விரும்பவில்லை.
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா॥ 1.32 ॥
யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி ச।
த இமே அவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச॥ 1.33 ॥
ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா:।
மாதுலா: ஷ்வஷுரா: பௌத்ரா: ஷ்யாலா: ஸம்பந்திநஸ்ததா॥ 1.34 ॥
ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ அபி மதுஸூதந।
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே॥ 1.35 ॥
நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜநார்தந।
அரசுகளும், இன்பமும், ஏன் வாழவே கூட, யாருக்காய் அவைகளை நாம் விரும்புவோமோ அவர்களே இந்தக் களத்தில் போர்புரியத் தயாராயிருக்க, என்ன பலன் தரப்போகின்றன? மதுசூதனரே, ஆசிரியரும், தந்தையரும், பிள்ளைகளும், பாட்டனார்களும், மாமன்களும், மாமனார்களும், பேரன்களும், மைத்துனரும், பிற உறவினரும் தங்கள் வாழ்வையும், செல்வத்தையும் இழக்கத் தயாராக என்முன் நின்றிருக்க, நான் வாழ்வேனாயினும் இவர்களைக் கொல்ல நான் ஏன் விரும்பவேண்டும்? இந்த ப+மி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகம் கிடைப்பதாயினும், உயிர்களையெல்லாம் காப்பவரே, நான் இவர்களுடன் போர் செய்யத் தயாராக இல்லை.
பாபமேவாஷ்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந:॥ 1.36 ॥
தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்।
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந: ஸ்யாம மாதவ॥ 1.37 ॥
இவ்வாறான ஆக்ரமிப்பாளரைக் கொல்வதால் நமக்குப் பாபமே வந்து சேரும். எனவே திருதராஷ்டிரர் மக்களையும், நண்பரையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. திருமகளின் கணவரே, நமது சொந்த உறவினரைக் கொலை செய்துவிட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சி அடைய முடியும்? இதனால் நமக்கென்ன லாபம்?
யத்யப்யேதே ந பஷ்யந்தி லோபோபஹதசேதஸ:।
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்॥ 1.38 ॥
கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும்।
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஷ்யத்பிர்ஜநார்தந॥ 1.39 ॥
ஜனார்த்தனரே! பேராசையால் உந்தப்பட்டு, நண்பருடன் கலகம் செய்வதிலும், குலநாசம் செய்வதிலும் இந்த மனிதர் பாவமெதையும் காணவில்லையாயினும், குற்றமென்றறிந்த நாமேன் இச்செயல்களில் ஈடுபட வேண்டும்?
குலக்ஷயே ப்ரணஷ்யந்தி குலதர்மா: ஸநாதநா:।
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ அபிபவத்யுத॥ 1.40 ॥
குலம் அழிவடைவதால் நித்தியமான குலவறம் கெடுகின்றது. இதனால் வமசத்தில் மீந்திருப்பவர் அறமற்ற பழக்கங்களில் ஈடுபடுவர்.
அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:।
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:॥ 1.41 ॥
குலத்தில் அறமின்மை தலையெடுக்கும்போது, கிருஷ்ணரே, குடும்பப் பெண்கள் களங்கப்பட, பெண்மையின் சீரழிவால், விருஷ்ணி குலத்தவரே, தேவையற்ற சந்ததி உண்டாகிறது.
ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச।
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:॥ 1.42 ॥
தேவையற்ற ஜனத்தொகை பெருகுவதால் குடும்பத்திற்கும் குலப்பண்பாட்டை அழிப்போருக்கும் நரகநிலை உருவாக்கப்படுகின்றது. அதுபோன்ற சோரம் Nபுhன குலங்களில் முன்னோருக்கு உணவும் நீரும் அளிக்கும் கருமாதிகள் நடப்பதில்லை.
தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:।
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஷ்ச ஷாஷ்வதா:॥ 1.43 ॥
குடும்பப் பண்பாட்டை அழிப்பவரின் தீய செயல்களால், எல்லாக் குலவறங்களும், குடும்ப நலச் செயல்களும் அழிவுறுகின்றன.
உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந।
நரகே நியதம் வாஸோ பவதீத்யநுஷுஷ்ரும॥ 1.44 ॥
மக்களைக் காக்கும் கிருஷ்ணரே, குலப் பண்பாட்டைக் கெடுப்பவர் நரகத்தில் சதா வாழ்வதாக சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்.
அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்।
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா:॥ 1.45 ॥
ஐயகோ! அரச போகத்தை அனுபவிப்பதற்கான ஆசையால் உந்தப்பட்டுப் பெரும் பாவங்களைப் புரிய நாம் தயாராவது என்ன விந்தை?
யதி மாமப்ரதீகாரமஷஸ்த்ரம் ஷஸ்த்ரபாணய:।
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத்॥ 1.46 ॥
திருதராஷ்டிரர் மக்களுடன் போர்புரிவதை விட, ஆயதமின்றியும், எதிர்ப்புக் காட்டாமலும் அவர்களால் நான் கொல்ல்ப்படுவதையே சிறந்ததாகக் கருதுவேன்.
ஸம்ஜய உவாச।
ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஷத்।
விஸ்ருஜ்ய ஸஷரம் சாபம் ஷோகஸம்விக்நமாநஸ:॥ 1.47 ॥
ஸஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன் போர்க் களத்தில் இவ்வாறு மொழிந்த பின் வில்லையும் அம்புகளையும் ஒருபுறம் எறிந்து விட்டு, மனம் கவலையால் நிறைய, தேரில் அமர்ந்து விட்டான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அர்ஜுநவிஷாதயோகோ நாம ப்ரதமோ அத்யாய:॥ 1 ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அர்ஜுந விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம் நிறைவுற்றது.

ஸ்ரீமத் பகவத்கீதை
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருட்சேத்திர தர்ம யுத்தம் நடக்கும் போது ஸ்ரீ பகவான் கண்ணனின் திருவாயினால் மலர்ந்தது பகவத்கீதை.
அர்ஜூனன் எதிர் அணியில் உள்ள தனது உற்றார், உறவினர்களைக் கண்டு போர்புரிய மாட்டேன் என தனது காண்டீபத்தினை கீழே எரிந்தான். எப்போது அவனது மனக்கலக்கத்தினை போக்கும் பொருட்டு கண்ணன் கீதையை அவனுக்கு உபதேசித்தார்.
கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யோகத்தினைக் குறிக்கும். யோகம் என்பதற்கு அடைதல் எனப் பொருள். இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்கியாணம் எழுதியுள்ளனர்.

Friday, January 20, 2012
அபிராமி அந்தாதி
அபிராமி பட்டர்- கவிஞர் கண்ணதாசன்
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.
3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.
4: மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.
5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.
6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!
7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.
தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!
8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே
என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.
9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.
அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.
10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.
அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.
11: ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
12: கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.
என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!
13: பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?
உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
14: வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே:
ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
15: தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!
16: கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.
கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!
17: அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.
18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.
அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.
19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.
20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.
என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!
21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.
அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!
22: கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.
23: கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.
அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!
24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.
25: பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.
26: ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.
பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.
27: உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!
28: சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.
29: சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?
30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற என் உமையவளே!
31: உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.
32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.
அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!
33: இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே
தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, 'அன்னையே' என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!
34: வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.
தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.
35: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!
36: பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.
குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.
37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.
என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!
38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.
39: ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.
அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!
40: வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.
ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.
41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.
42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.
அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!
43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!
44: தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.
எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!
45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.
அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.
46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.
ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.
47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!
48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!
49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.
நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!
50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.
ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.
51: அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!
52: வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்!
53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.
54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!
55: மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.
அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!
56: ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.
அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.
57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே?
ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!).
+'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.
58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.
59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.
அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.
60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க--
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே?
ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையனிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)
61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!
62: தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.
ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.
63: தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.
ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.
64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.
65: ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.
ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!
66: வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.
ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.
67: தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே.
அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.
68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).
69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,
ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.
70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.
71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?
அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?
72: எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.
ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!
73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
74: நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.
75: தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).
76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!
77: பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
ஏ, அபிராமி! உன்னை, பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.
78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.
என் தாயே! அபிராமி! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். அந்த உருவம் எப்படிப் பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை; அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு; வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.
79: விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).
80: கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே.
ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே! நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன்.
81: அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே.
ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகளெல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!
82: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?
ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).
83: விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே.
அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)
84: உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.
85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.
ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என்கண்முன் காட்சியாய் நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).
86: மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.
87: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.
ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)
88: பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.
ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.
89: சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.
அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.
90: வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத் தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்தும் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?
91: மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.
அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.
92: பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்--
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.
ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.
93: நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.
94: விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.
95: நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.
96: கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.
என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.
97: ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.
என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.
98: தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?--
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.
ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?
99: குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).
100: குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!
ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.
நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.

Subscribe to:
Posts (Atom)