Thursday, November 24, 2011
வெங்கடேச பெருமாளுக்கு 162 வைரங்கள் காணிக்கை!
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியலில், 162 வைரங்களை அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். இவற்றின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்யும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். உண்டியல் காணிக்கை மூலம், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இந்த ஆண்டு இதுவரை தங்கம், வெள்ளி மற்றும் பணமாக 600 கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.1,600 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத ஒரு பக்தர், விலை உயர்ந்த 162 வைரங்களை, ஒரு வெல்வெட் பையில் வைத்து, கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். இந்த வைரங்களின் மதிப்பு, 1.5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், "திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஸ்ரீவாரி உண்டியல், திறக்கப்பட்டது. அதிலிருந்த பணம், நகைகள் எண்ணப்பட்ட போது, வெல்வெட் பையில், 162 வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment