Thursday, June 13, 2013

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா 2013



திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (14ம் தேதி )துவங்குகிறது. 22ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் 9 நாட்களும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந் தேரோட்டத் திருவிழா நாளை (14ம் தேதி) துவங்குகிறது. காலை 7.47 மணிக்கு மேல் 8.17 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது.

அன்று முதல் தினந்தோறும் காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடக்கிறது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் திருமலை பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு விஜயலெட்சுமி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி,

8 மணிக்கு தாயிற்சிறந்த தயாவான தத்துவன் என்ற தலைப்பில் தேச மங்கையர்கரசி பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

நிகழ்ச்சியை ராஜதீபன் ஜூவல்லரி, சிட்டி யூனியன் பாங்க், நெல்லை துணிவணிகர் இலக்கிய வட்டத்தினர் இணைந்து நடத்துகின்றனர்.
----------------------------------------------------------------------------------------------
15ம் தேதி மாலை 5 மணிக்கு காந்திமதி அம்பாள் கைங்கர்ய கமிட்டி குழுவினரின் பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு சிவாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி,

இரவு 8 மணிக்கு சென்னை புஷ்பா ஆனந்த் பக்தி இன்னிசை நடக்கிறது.

நல்லி சில்க்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சவுபாக்கியா ஜூவல்லர்ஸ், பாளை., கணேஷ் ஸ்டோர்ஸ், நெல்லை டாடா கோல்டு பிளஸ் ÷ஷாரூம் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------
16ம் தேதி மாலை 5 மணிக்கு கோமதி திருநாவுக்கரசு சொற்பொழிவு,

6 மணிக்கு கிருஷ்ணவாணி நிருத்தியாலயா நாட்டியப்பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சி,

இரவு 8 மணிக்கு பெங்களூர் சம்பத்குமார் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.

நிகழ்ச்சியை கல்யாண் ஜூவல்லர்ஸ், நெல்லை கிருஷ்ணா டிவிஎஸ்., கரூர் வைஸ்யா பாங்க், கோடீஸ்வரன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------
17ம் தேதி மாலை 5 மணிக்கு கலைமுத்து இசை நாட்டியப்பள்ளி மாணவி ஹரிதா நாட்டிய நிகழ்ச்சி,

6 மணிக்கு பழனி வெங்கடேஷ் குழுவினரின் திருமுறை விண்ணப்பம்,

இரவு 8 மணிக்கு ராஜேஷ் வைத்யா வீணை இசை நடக்கிறது. நிகழ்ச்சியை நெல்லை தினமலர், ஹோட்டல்கள் ஆர்யாஸ், ஜானகிராம், நயினார், ராம்பிரசாத், மதுரம், விசாகபவன், சேலம் சரவணபவா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.

---------------------------------------------------------------------------------------------
18ம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ ராம நாட்டியலயா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி,

மாலை 6 மணிக்கு கோவை ஜெயராமன் பக்தி இன்னிசை,

இரவு 8 மணிக்கு டி.எம்.கிருஷ்ணா பக்தி இன்னிசை நடக்கிறது. நிகழ்ச்சியை கணபதி கெமிக்கல்ஸ், நேச்சுரல் காட்டன் மில்ஸ், சியமளா புக் சென்டர், அனில் ஸ்டோர், ராஜேஷ் எலக்ட்ரிகல்ஸ், சுதர்ஸன் மருத்துவமனை மற்றும் லெட்மிவிலாஸ் பாங்க் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
19ம் தேதி மாலை 5 மணிக்கு ஜோதிடர் பாலசுப்பிரமணியன் பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு பட்டினத்தார் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பக்தி சொற்பொழிவு,

இரவு 8 மணிக்கு சென்னை ஆர்.எஸ்.மனோகர் வழித்தோன்றல் பாலசுந்தரம் வழங்கும் "ராகு கேது புராண நாடகம் நடக்கிறது. நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.

----------------------------------------------------------------------------------------------------
20ம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வசுமதி பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு நிருத்தியாஞ்சலி நாட்டியாலயா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி,

இரவு 8 மணிக்கு ஆன்மிகம் தழைக்க பெரிதும் துணை நிற்பது பக்தி நெறியா, தொண்டு நெறியா என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானசம்பந்தம் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சியை ஆரெம்கேவி நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
----------------------------------------------------------------------------------------------------
21ம் தேதி மாலை 5 மணிக்கு விஜயலெட்சுமி பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு சென்னை சாய் ஸ்ருதி இசைக்குழு மாணவிகளின் பக்தி இன்னிசை,

இரவு 8 மணிக்கு டாக்டர் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சி நடக்கிறது. போத்தீஸ் நிறுவனத்தினர் நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.
-----------------------------------------------------------------------------------------

22ம் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு சங்கீத ஸம்வர்த்தினி சபா மாணவிகளின் பக்தி இன்னிசை,

6 மணிக்கு நெல்லை அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுலை நிகழ்ச்சி,

இரவு 8 மணிக்கு எம்.ஆர்.விஜயா, பாம்பே சாரதா குழுவினரின் பக்தி இன்னிசை நடக்கிது. நிகழ்ச்சியை நெல்லை ஓட்டல் சரவணபவா, நாகா மைதா, இந்தியன் பாங்க், நெல்லை பனியன் ஏஜென்ஸி, ஜி.டி.எம்.தங்க நகை மாளிகை நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
----------------------------------------------------------------------------------------
விருந்தினர் உபசரிப்பு பணியில் நெல்லை ஆர்.ஆர்.இன் ஓட்டல் நிறுவனம், மேடை அலங்கார பணிகளில் கஜானா ஜூவல்லர்ஸ் இணைந்து செய்துள்ளனர்.


கலை நிகழ்ச்சிகளை நெல்லை கல்சுரல் அகடமி நிறுவனத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.

No comments:

Post a Comment