Friday, September 7, 2012

ஶ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு

AddThis Social Bookmark Button
ஶ்ரீ ஹயக்ரீவர் திருமாலின் அவதாரம் ஆகத் தோன்றியவர். தசவதாரங்களுக்கு முற்பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர்.

பரிமுகன் என்றும் அஸ்வசிரவர் என்றும் குறிப்பிடப்படுவர். ஒருமுறை பிரம்ம தேவர் உறக்கத்தில் இருக்கும் வேளையில் மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதள பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்த நான்முகனும் வேதங்களைக்காணாது மகாவிஸ்ணுவிடம் முறையிட அவரும் அவற்றை மீட்டு வருவதற்காக ஹயக்ரீவராக உருவெடுத்துச் சென்றதாக

அதள பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன் வழியே வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு ஞானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார். பின்னர் வேதத்தை படைப்புத்தெய்வம் பிரம்மாவிற்கே ஆவணி மாதப் பெளர்ணமி அதாவது (சிரவணப்பெளர்ணமி) நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்க கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆக கல்வி கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவர் உள்ளார் எனவே இவரை போற்றி வழிபடுபவருக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும்.

'ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே'

அதாவது தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன். என்று போற்றித் துதிக்கின்றனர்.
அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும் அவர் லஸ்மி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பல வித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்திரி முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.

ஆத்திசூடியில் ஒளவை கூறியதுபோல்' நூல் பல கல் ' என அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப் படிப்பது போல் ஹயக்ரீவர் தியானத்தையும் கூறி மாணாக்கர் வாழ்வை வளம் பெறச்செய்வோம்.

ஹயக்ரீவர் காயத்திரி
'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'

மூலமந்திரம்

'உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர
ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய'

ஞானத்தையும் ஒருமுகப் பட்ட மனதையும் வீர்யமான சக்தியையும் அளிக்கவல்லதும், இச்சுலோகங்களின் அதிர்வலைகள் சொல்பவர்களின் நரம்புகளில் ஒருவகை நல்ல அதிர்வுகளை ஏற்படச் செய்து மூளையில் ஞானத்தைப் பெருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானம் உணர்ந்த வேத பண்டிதர்கள். ஆகவே ஹயக்ரீவரை வணங்கி கலைகளை கற்றத் தேர்ச்சி அடைவோம்.

-  அருந்தா

Thursday, August 30, 2012

ஓணம் பண்டிகையும் கொண்டாட்டமும்


கேரள மக்களினால் இன்று ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப்பழம்பெரும் பண்டிகைகளில் ஒன்றாக இணங்காணப்பட்டுள்ள ஓணம் பண்டிகைக்கு கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளது.

அத்தம், சித்திரா, சுவாதி என தொடங்கும் 10 நாள் விழா,  பத்தாம் நாள் திருவோணம் எனும் கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது.  ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு விசேஷம் இருக்கிறது. நான்காம் நாள், ஒன்பது சுவைகளில், ஓண சாத்யா எனும் உணவு தயார் செய்யப்படுகிறது.

அன்று புலிக்களி அல்லது கடுவக்களி என அழைக்கப்படும் புலி வேடமிட்ட நடனம் நடைபெறுகிறது. சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்ள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி மகிழ்கின்றனர்.


ஐந்தாம் நாள் கேரளாவின் பாரம்பரியமான படகு போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து பத்து நாட்களும் கேரள வீட்டுப்பெண்கள் பூக்களினால் ஆன அத்தப்பூ எனும் கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். 10ம் நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாடு செய்து கசவு எனும்சொல்ல கூடிய சுத்தமான வெண்ணிற ஆடையை உடுத்துகின்றனர். அன்று சிறப்பு யானைத்திருவிழா நடைபெறுகிறது. யானைகளுக்கு விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துகிறார்கள்.

சிவாலயமொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டி பிரகாசமாக எரிய உபகாரம் செய்ததற்காக எலி ஒன்றுக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை சிவபெருமான் வழங்கியதாகவும், அந்த எலியானது மறுபிறப்பில் மகாபலி எனும் பெயருடன மாமன்னனாக பிறந்து கேரளத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்த போதும், அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியை கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டு தோல்வி அடைந்ததால், திருமாலிடம் அடைக்கலம் புகுந்தனர்.

மகாபலி மன்னர் ஒரு முறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணணாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் இந்த பூமையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையை கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

எனினும் தனது நாட்டு மக்கள் மிகுந்த அன்பு வைத்திருப்பதாலும், வருடம் ஒரு முறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டியதாலும் ஒவ்வொரு திருவோணத்திருநாள் அன்றும் மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வந்து, தங்களது வீடுகளுக்கு வந்து செல்வதாக மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், போன்ற அண்டை மாநிலகங்களிலும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணத்தையொட்டி கேரளாவை ஒட்டிய குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி : விக்கிபீடியா

Wednesday, August 29, 2012

சீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள் !!!

Photo: சீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள் !!!

உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.

இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.
இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

உலக மக்கள் தொகையில் முத்லிடத்தை பிடித்த சீனாவின் கிழக்கில்ஷான்ஹாயில் தொடங்கி லோப்நூர் வழியாக மேற்க்கில் சென்று தெற்க்கெ மங்கோலியாவின் உட்ப்பகுதிவரை செல்கிறது சீனப்பெருஞ்சுவர், வானுயர்ந்த மலைகள் மணல் பாலைவனங்கள் பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் சுவரின் நீளம் 6400கிலோமீட்டர்கள்,எந்தவொரு தொழில்நுட்ப்பமும் இல்லாத இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்படுள்ளது மிகப்பெரும் அதிசயம்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீனவிற்க்கு அச்சுறுத்தல்கள் அதிகம் திடீர் திடீரென்று அண்டை நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்தன இது சீன அரசர்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வந்தது, இதை எப்படி தீர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்து இறுதியாக சீனாவின் எல்லைப்பகுதியில் மாபெரும் சுவர் ஒன்றை கட்டுவது என்று முடிவெடுத்து உடனடியாக வேலையில் இறங்கினார்கள், அதாவது கி.பி 206 இல் முதல் சின்வம்சத் அரசன் இதை கட்டத்தொடங்கினான் பதினைந்து வருடங்கள் இந்த பெருஞ்சுவரை கட்டினார்கள்

குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் 70 % பேர் இப்பணியில் ஈடுபட்டனர், கி.பி 221ல் 5000 கிலொமீட்டர் தூரம்வரை கட்டினர் இதற்க்கு வான்-லி-குவான்ங்-கெங் என்று பெயர் வைத்தனர், 4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இதன் அகலம் இருந்தது, இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் ஏனோ அவர்களுக்கு திருப்தி ஏற்ப்படவில்லை, சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்து கி.பி 1368 லிருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள், மொத்தம் 6400 கிலொமீட்டர் வரை கட்டினார்கள், பின்பு இந்த சுவரில் மறு சீரமைப்பு பணியை தொடங்கினார்கள் இதுவெ 200 ஆண்டுகள் வரை நீடித்தது , சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்க்கும் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுவதற்க்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன, ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகை போட்டு படை வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.கி.பி1987ல் சீனப்பெருஞ்சுவர், உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது,மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடம்சீனப்பெருஞ்சுவர்.
இந்த சுவர் சீனாவின் அடையாளமாக உள்ளது, தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கிலொமீட்டர் தொலைவில் இருக்கும் சைமைதாயு மற்றும் மடியான்யு என்ற இரண்டு இடங்களில் மட்டும் இப்போது சுற்றுலாப் பயணிகள் சுவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்

சீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்

சீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
Posted by venkatesh at 10:35 AM 

சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?

சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளத்தைக் கண்டுபிடிக்க, ஏப்ரல் திங்களில் பிரம்மாண்ட அளவீட்டுப் பணி தொடங்கியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்று, சீனப் பெருஞ்சுவர். பகைவர்களின் படை எடுப்பிலிருந்து சீனாவின் வட பகுதியைக் காப்பாற்ற, இந்த மாபெரும் பாதுகாப்பு அரண் கட்டப்பட்டது.

கி.மு. 220இல் தொடங்கிய இதன் கட்டுமானப் பணி இறுதியில், 1368-1644 வரையிலான மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தான் நிறைவடைந்தது.

இதன் நீளம்,10 ஆயிரம் லீ அதாவது 5000கிலோ மீட்டர் என்றும், அகலம் சராசரியாக 6 மீட்டர் என்றும் கூறப்படுகிறது. எனினும் இவை தோராயமான அளவுகள் தான்.

இதனால், பெருஞ்சுவர் பற்றிய துல்லியமான புள்ளி விபரங்களைக் கண்டறிய வேண்டும் என்று சீன வரலாற்று அறிஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து,பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள், 1980ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால் இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தற்போது, தொழில் நுட்பத் துறையில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் பணியை மீண்டும் தொடங்கச் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த மாபெரும் அளவீட்டுப் பணி,4 ஆண்டு காலம் தொடரும். இதன் மூலம் சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளம், வரைபடம், தற்போதைய நிலை ஆகிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும்.

டைடானிக் கப்பல் பற்றிய தகவல் !!!

Photo: டைடானிக் கப்பல் பற்றிய தகவல் !!!

டைடானிக் என்று சொன்னாலே டைடானிக் படம் தான் நமக்கு எல்லாம் நியபகதிர்க்கு வரும் .ஆனால் அந்த கப்பல் பற்றிய தகவல் அவளவாக நமக்கு தெரியாது . அதை பற்றிய சில தகவல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. டைடானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகளை 2012 ம் ஆண்டு கடக்கவுள்ளது.

டைடானிக் விபத்தின் பதிவுகள் இன்றுவரை பசுமையுடன் நினைவு கொள்ளப்படுகின்றது , இதனால் இது தொடர்பாக வெளியான புத்தகங்கள் , திரைப்படங்கள் எண்ணிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. இந்தவகையில் டைடானிக் கப்பல் விபத்தினை வெகு நேர்த்தியுடன் நிஜமாக மக்கள் கண்முன் 1997ம் வருடத்தில் வெளிவந்த "டைடானிக்" திரைப்படம் கொண்டுவந்தது. திரைப்படம் சொல்லிய காதல் கதை தவிர அனைத்து காட்சிகளும் சம்பவ தின நிகழ்வின் சாட்சியங்களின் அடிப்படையில் படமாக்கப்பட்டதாகும். 

பல நூறு பக்கங்களில் சொல்லமுடியாத சோக சம்பவத்தினை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து 11 ஆஸ்கார் விருதுகளை 1997 இல் மிகப்பெரிய சாதனை திரைப்படம் டைடானிக் பெற்றது . 200 மில்லியன் டாலர் செலவில் தயாரான டைடானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற சாதனை மட்டுமல்ல வசூலிலும் 1.85 பில்லியன் (1850 மில்லியன்) டாலர் மேலாக இதுவரை குவித்துள்ளது . மேலும் டைடானிக் கப்பல் விபத்து பற்றியதான 14 திரைப்படங்களும் , சின்ன திரைகளும் இதுவரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் சோகம் நிறைந்த டைடானிக் கப்பல் விபத்து தொடர்பான முக்கிய தகவல்கள் கீழ்வருமாறு.

டைடானிக்கின் முழு பெயர் RMS Titanic (Royal Mail Steamer Titanic).
அயர்லாந்து (Ireland) நாட்டின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் கட்டப்பட்டது.

டைடானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31 ம் திகதி தொடங்கி 1911 மே 31ம் திகதி முடிவுற்றது.

3,000 வேலையாட்கள் 3 மில்லியன் தறையாணி (கடாவி) களை பாவித்து கப்பலை கட்டிமுடித்தனர்.

அன்றய காலத்தில் டைடானிக்கை கட்டிமுடிக்க 7.5 மில்லியன் டொலர் பணம் செலவிட்டனர், அதன் இன்றய பெறுமதி 4,000 மில்லியன் டொலர் என கணக்கிடப்படுகின்றது.

முதலாவது பயணம் (கன்னி) 1912 ஏப்பிரல் 10 ம் திகதி தொடங்கப்பட்டது.

கப்பலின் நீளம் 882 அடி (269.1 மீற்றர்) , உயரம் 175 அடி (53.3 மீற்றர்) , மொத்த எடை 46,328 தொன் , வேகம் 21 நொட் (39 கிலோமீற்றர்/மணி) இதன் அதிகவேகம் 23 நொட் (43 கிலோமீற்றர்/மணி).
டைடானிக் கப்பல் அதிகபட்சம் 3,547 பயணியளையும் சிப்பந்திகளையும் கொள்ளக்கூடியது.

டைடானிக் கப்பல் கட்டுமானத்தில் அன்று இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்பமும் அதிகபட்சம் பாவித்து கட்டப்பட்டது.
ஒருநாளைக்கு 825 தொன் நிலக்கரியை டைடானிக் இயந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.

டைடானிகில் மொத்தம் 9 தட்டுக்கள் (மாடிகள்) , அத்துடன் ஆழம் 59.5 அடி எனவும் உயரம் 60.5 அடி எனவும் சொல்லப்படுகின்றது.
மொத்தமாக 4 புகை போக்கிகள் , இவற்றின் மொத்த உயரம் 175 அடி , இதில் 3 புகை போக்கவும் 1 காற்று போக்கியாகவும் பயன்பட்டது.
ஒருநாளைக்கு கப்பலுக்கு தேவைப்படும் சுத்தமான தண்ணீர் 14,000 கலன் கொள் அளவு.

டைடானிக்11 மாடி உயரமான கட்டிடதிற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது , இந்த கப்பலை வர்ணமூட்ட பெருமளவில் கறுப்பு மையுடன் வெண் வர்ணமும் பாவிக்கப்பட்டது.
முதலாவது நீச்சல் தடாகம் உள்ள கப்பலாக டைடானிக் வடிவமைக்கப்பட்டது.
விபத்து நடந்த தினம்....................................

1912 ஏப்ரல் 10 ம் திகதி அயர்லாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக2,228 பேருடன் (1,343 பயணிகள் , 885 மாலுமிகள்) மறுநாள் (1912 ஏப்பிரல் 13 ம் நாள்) நியூயோர்க் நோக்கி டைடானிக் புறப்பட்டது.

அமைதியான கடலில் கரும் இருட்டில் (அமாவாசை) 5 நொட்டுக்கள் வேகத்தில் டைடானிக் பயணித்துக் கொண்டிருந்தது.

அன்றய தினம் (1912 ஏப்பிரல் 14 ம் நாள்) பயணிகள் தகவல் பரிமாறும் வானொலி தொடர்பில் பனிப்பாறை பற்றிய முன் எச்சரிக்கை இரு முறை ஒலிக்கப்பட்டது

220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறையுடன் இரவு 11.40 மணிக்கு டைடானிக் மோதல் நடைபெற்றது.

டைடானிக் கப்பலின் கீழ் பகுதியில் உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது.
அன்றிரவு 12 மணி இலிருந்து மூழ்க ஆரம்பித்த கப்பல் காலை 2.20 மணி (15ம் ஏப்பிரல்) முழுமையாக மூழ்கியது.

அன்றய பனிப்பாறை விபத்தில் மாட்டிய டைடானிக் கப்பலில் இருந்த 20 உயிர்காப்பு படகுகளில் 705 சிறுவர்கள் , பெண்கள் மட்டும் உயிர் தப்பியதுடன் மிகுதி 1,523 பேர் கடலில் மாண்டனர்.

டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால் அவதானிக்கப்பட்டது.
அன்று கடல் விபத்தில் பலியான 1,523 பேரில் (பயணிகள், மாலுமிகள்) 300 பேரின் உடல்கள் மட்டும் பின்னர் மீட்கப்பட்டது.
74 வருடங்களின் பின்................

அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடியில் (12,600 அடி அல்லது 3,925 மீற்றர் அல்லது இரண்டரை மைல் ஆழத்தில் ) இயந்திர நீர்மூழ்கி (Alvin,robot) உதவியுடன் டைடானிக் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.
டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பகுதிகளாக உடைந்த பாகங்கள் சமுத்திர அடியில் 1,970 அடி தூரத்தில் இருக்க காணப்பட்டது.

மேலும் சில தகவல்...

அன்றய பயணத்தில் முதல் வகுப்பில் மட்டும் 870 பயணிகள் பயணம் செய்தனர். முதல் வகுப்பிற்கு ஒவ்வொருவரும் 4,350 டொலர்களை அன்று செலுத்தினர் எனவும் இது இன்றய பெறுமதியில் 80,000 டொலருக்கு சமமானது எனவும் சொல்லப்படுகின்றது

மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள் !!!!

Photo: மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள் !!!!

குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.
பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

குற்றால சீசன் காலம் 

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம். 

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. 

இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.

மூலிகைகளும், பழவகைகளும் 

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி
அமைவிடம் தென்காசி
ஆள்கூறு 8.9217° N 77.2786° E
மொத்த உயரம் 290 அடி

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டகுற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.

இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒன்பது அருவிகள்

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.


7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது

ஆன்மீகம்

ஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான். தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன், காலைக்கடன்களை முடித்தபின் இறைவனை பூஜிக்கத் தயாரானான். சற்றே மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனையே கடவுளாக பாவித்து, காட்டு மலர்களால் பூஜித்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்தான். அப்போது, அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக் கொண்டு வந்தான். மான் ஓடிய பாதையில் தாண்டி, தாவிக் குதித்து ஓடித் துரத்தினான். அப்போது அவனது கால், மன்னன் கடவுளாக பாவித்து வழிபட்ட மண்மேட்டின் மேல் போடப்பட்டிருந்த பூக்களின் மேல் பட்டது. ஆனால், வேடன் அரசனையோ அங்கிருந்த மற்றவர்களையோ அர்ச்சிக்கப்பட்டிருந்த மலர்களையோ கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அவனது கவனம் முழுக்க மான்மீதே இருந்தது.

தொடர்ந்து மானைத் துரத்தியபடி ஓடினான். எல்லாவற்றையும் கவனித்த அரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பூஜிக்கப்
பட்ட பூக்களை மிதித்ததோடு என்னையும் மதிக்காமல் போகிறான். என்ன ஆணவம்? பிடியுங்கள் அந்த வேடனை...! என்று ஆணையிட்டான். உடனே புறப்பட்ட வீரர்கள், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். அதனால் மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது. கொஞ்சநேரம் கழிந்தது. அந்த வேடன், வேட்டையாடிய மானை சுமந்து கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்தார்கள் வீரர்கள். ஓடிப்போய் அவனைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள். அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன். வேந்தே வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்! என்று அரசரைப் பணிந்தான். அவனை எரித்து விடுபவர் போல் பார்த்தார் மன்னர். இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனுக்கு சமர்ப்பித்த பூக்களை மிதித்ததோடு என்னையும் கவனிக்காதவன் போல் அவமானப் படுத்திவிட்டல்லவா போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவானவன்போல் நடிக்கிறாயா? சீற்றமாக கேட்டார்.

மன்னிக்க வேண்டும் மன்னா, வேட்டையின் போது என் கவனம் முழுதும் மான் மேல்தான் இருந்தது. அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை. வேடன் சொல்ல அரசனுக்கு ஏதோ உறுத்தியது; வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது குவிந்திருந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறை மீது குவிந்திருக்கவில்லையே.. அதனால் அல்லவா நாம் வேடனை கவனிக்க முடிந்தது.. நினைத்த அரசன், தனக்குப் பாடம் உணர்த்திய வேடனுக்கு வெகுமதியளித்து அனுப்பினான். பிறகு மவுனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால்? புதிய சூழல், அச்சமூட்டும் இடம், முதல் நாள் வேட்டையாடிய களைப்பு, சுற்றிலும் விதவிதமான பறவை, விலங்குகளின் சத்தம் இப்படி ஒவ்வொன்றாகப் புரிந்தது அரசனுக்கு. இந்த மன்னனைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும். லட்சியப் பாதையில் இருந்து மனம் விலகி சோர்வடைவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து நீக்கிவிட்டால் போதும், வெற்றி நிச்சயம் நமக்கு கிட்டும்

நன்றி: சாம் மகேந்திரன்

Friday, August 24, 2012

கயிலைமலையானே போற்றி

கயிலைமலையானே போற்றி *


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக்கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி ஆன நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
இமையாது உயிராது இருந்தாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
ஊழி ஏழு ஆன ஒருவா போற்றி
அமையா வரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழும் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவாய் அடியேனுக்(கு) எல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி
அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால்வைத்துகந்த ஈசாபோற்றி
பண்ணார் இசையின்சொல் கேட்டாய் போற்றி
பண்டேஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.