Monday, December 3, 2012

ஸ்வாமி சரணம் ஐயப்பா

ஆன்மீகம்

ஹரிவராசனம் விஷ்வ மோஹனம்
ஹரித தீஷ்வரம் ஆராத்ய பாதுகம்
ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..

சரண கீர்த்தனம்.. பக்த மானஸம்..
பரண லோலுபம்.. நர்த்தனாலஸம்..
அருண பாசுரம்.. பூத நாயகம்..
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..

ப்ரணய சத்யகம்.. ப்ராண நாயகம்
ப்ரணத கல்பகம்.. சுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம்.. கீர்த்தனப்ரியம்..
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..

துரஹ வாகனம்.. சுந்தரானனம்
வரக தாயுதம்.. வேதவர்ணிதம்
குருக்ருபாகரம்.. கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..

த்ரிபுவனார்ச்சிதம்.. தேவதாத்மகம்..
த்ரினயனம் ப்ரபும்.. திவ்ய தேசிகம்..
த்ரிதச பூஜிதம்.. சிந்திதப்ரதம்..
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..

பவபயாபஹம்.. பாவுகாவஹம்
புவன மோஹனம்.. பூதிபூஷணம்..
தவளவாஹனம்.. திவ்யவாரணம்..
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..

களம்ரு துஸ்மிதம்.. சுந்தரானனம்..
களப கோமளம்.. காத்ரமோஹனம்..
களப கேசரி.. வாஜிவாஹனம்..
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..

ஷ்ருதஜனப்ரியம்.. சிந்திதப்ரதம்..
ஷ்ருதிவிபூஷணம்.. சாதுஜீவனம்..
ஷ்ருதிமனோஹரம்.. கீதலாலஸம்.
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..

ஸ்வாமி சரணம் ஐயப்பா..
ஸ்வாமி சரணம் ஐயப்பா..
ஸ்வாமி சரணம் ஐயப்பா..

பாடியவர் - கே.ஜே. ஜேசுதாஸ்

- தமிழ் ப்ரியா.

Wednesday, November 28, 2012

திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறு?

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.

தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.

Monday, November 26, 2012

கார்த்திகை தீபம் ஏற்றும் முறையும் பலனும்!

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
தீப லட்சுமி துதி
1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே
ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.
2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே
எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே... எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.
3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). அவர் வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.
4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:
நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும்.
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
 அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
திருவிளக்கு பூஜை விதிமுறை
* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
விளக்கு பூஜை மாத பலன்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.
சித்திரை - தானிய வளம்.
வைகாசி - செல்வச்செழிப்பு.
ஆனி - திருமண பாக்கியம்.
ஆடி - ஆயுள்பலம்.
ஆவணி - கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி - கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி - நோய் நீங்குதல்
கார்த்திகை - புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி - ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை - எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி - துன்பம் நீங்குதல்.
பங்குனி - ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.
எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
பொட்டு வைக்கும் முறை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
எந்த திசை என்ன பலன்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
இவர்களுக்குரிய எண்ணெய்
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்.

Friday, November 23, 2012

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியி
ல் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
 
Photo: பிரமிப்பூட்டும்  தமிழர்களின் விஞ்ஞானம்  !!!
 
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
 
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!. 

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு  வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?  தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!! 
 
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!!  பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. 

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

Wednesday, November 21, 2012

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -2

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -2

கந்தபுராணத்தை அடி எடுத்துக் கொடுத்து பாடவைத்தவரையும், கந்தன் புகழைக் கந்தபுராணமாகப் பாடியவரையும் உலகுக்கு அறிமுகம் செய்தவன் ஆறுமுகன். புராணம்பாடியதால் அறிமுகமானவர் கச்சியப்பசிவாச்சாரியார்.
காஞ்சிமாநகரின் குமரகோட்டத்தில் அர்ச்சகராக பணிபுரியும் காளத்தியப்பருக்கு மகனாக தோன்றினார். இளவயது முதற்கொண்டே இறைவன் மீது இடையறா அன்பு பூண்டவர், அவருக்கு ஏழாம் வயதில் உபநயனம் செய்யப் பெற்று வேதங்களையும் இலக்கண இலக்கியங்களையும் கற்று தேர்ந்தார். பின்னர் சமயதீட்சை, விசேசதீட்சை, நிர்வாணதீட்சை, ஆசார்யாபிசேகம் என்பன வற்றை முறைப்படி பெற்று தேவாரதிருவாசகங்கள், சைவாகமங்களின் கிரியாகாண்டங்களையும், ஞானகாண்டங்களையும் ஓதி உணர்ந்தார்.

கல்வி கற்றதன் பயன் இறைவனத்தொழுதலே, எனத்தெளிந்தார். குமரகோட்டத்து கந்தக் கடவுளை எந்நாளும் அஞ்சுவித சுத்திகள் செய்து, ஆறுகாலங்களிலும் எழுவகைப் பிறவி நீங்கும் பொருட்டு எண்வகை மலர்கள் சார்த்தி வழிபட்டு வந்தார். ஒருநாள் முழுமுதற்கடவுளான முருகப்பெருமான் கச்சியப்பர் கனவில் காட்சியளிக்கிறார். "அன்பனே' கந்தபுராணத்து ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவரகசிய காண்டத்தில், நமது சரித்திரம் அடங்கியுள்ளது. அதைக் கந்தபுராணம் எனும் பெயரில் தமிழிலே பெரும் காப்பியமாகப் பாடக்கடவாய்" என்று கட்டளையிட்டு, "திகடசக்கர" என்று அடியெடுத்துக் கொடுத்து அருள் செய்து கந்தபுராணத்தை எழுதி பாடவைத்து அரங்கேற்றம் செய்விக்கிறார்.
இதில் அதிசயம் என்னவென்றால் தினமும் நூறு செய்யுள்கள் பாடி எழுதிய ஏட்டையும் எழுத்தாணியையும் கந்தவேளின் இணையடியில் அர்த்தஜாமபூஜையின் பின்பு குமரகோட்டத்து கோயிலில் கச்சியப்பர் வைத்துவிட்டு திருக்கதவை திருக்காப்பிட்டு வீடுசெல்வார். மறுநாள் வழிபடும் பொருட்டு ஏட்டை எடுத்துப் பார்த்தால் அதில் சில சொற்கள் திருத்தப்பட்டு இருக்கும், கந்தப்பெருமானே தன்கர மலர்களால் திருத்தியமைத்தருளிய அதிசயம் கண்டு ஆனந்தம் மேலிட இறைவன் கருணையை நினைந்து கண்ணீர் சொரிவார். இப்படி செந்தமிழ்க்காவியமாக உருப்பெற்றது.
பின் அரங்கேற்றும் நாளும் வந்தது. அங்கு விழாதொடங்கியதும், கச்சியப்பரும் சுப வேளையில் "திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்" எனத்தொடங்கி பாடுகிறார். பின்பு பொருள் கூறும் வேளை திகழ் தசக்கரம் செம்முகம் ஐந்து உளான் எனப் பதப்பிரிவினை செய்து விளங்கா நின்ற பத்து திருக்கைகளும், செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபெருமானுடைய என்று பொருள் செய்தார்.
அரங்கேற்ற அவையின்கண் இருந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர் சுவாமிகாள், திகழ் தசம் என்பது திகடசம் எனப் புணர்வதற்கு தொல்காப்பியம் முதலிய நூல்களுள் ஒன்றிலும் இல்லையே என்றார். ஐயா தாங்கள் கூறுவது சரிதான் ஆனால் இம்முதல் அடி என் வாக்கில்லை. இறைவன் திருவாக்கு, முருகன் தந்த முதலடி என்று கச்சியப்பர் கூறவும், அதை  ஏற்க மறுத்த புலவர் புன்முறுவல் செய்து முருகனின் முதலடியாயின் அவரே இதற்கு விளக்கமளிக்க வரவேண்டும். இல்லையேல் அரங்கேற்ற முடியாது; இப்படித்தடுக்கவே நாளை அரங்கேற்றுவோம், எனக்கூறியதும் சபையும் கலைந்து சென்றது.
கச்சியப்பர் உண்ணாது உள்ளம் உலைந்து முருகனை நினைந்து உருகினார். தன்னை மறந்த நிலையில் கிடந்த கச்சியப்பரின் கனவில் மீண்டும் தோன்றி அன்பனே நீ வருந்தற்க, சோழதேசத்தில் வீர சோழியம் என்ற இலக்கணநூல் இருக்கிறது.  அதில் பதினெட்டாம் செய்யுளில் திகடசம் என்று வரிகளுக்கு திகழ் தசம் என்ற பொருள் வருகின்றவாறு விதிக்கப்பட்டுள்ளது. சோழதேசத்துப் புலவன் நாளைக்கு இங்கு கொணர்ந்து கொடுத்து விளக்குவான். இப்படிக் கூறி திருவாய் மலர்ந்து மறைந்து விட்டார்.

மறுநாள்  ஆலயத்தில் சபை கூடியது. மக்கள் கூட்டடமும் புலவர்பெருமக்களும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர். கச்சியப்பரும் கந்தபுராண ஏடுகள் யாவற்றையும் அரங்கேற்றத் தயாராக எடுத்துக் கொண்டு வந்து இறைவனை மனதில் நினைத்த வண்ணம் அமர்ந்திருந்தார். அங்கு சோழநாட்டு புலவர் ஒருவர் வந்து வீரசோழிய இலக்கணநூலில் சந்திப்படலத்தில் பதினெட்டாம் செய்யுளை படித்துக்காட்டி சந்தேகத்தை ஓட்டினார். வாதிட்ட புலவர்கள் தமிழின் இலக்கணத்தையும் அதில் அடங்கியுள்ள அழகு தத்துவங்களை எண்ணி வியந்தனர், அச்சத்திலும் அதிசயத்திலும் தம்மை மறந்து நின்றிருந்தனர். வீரசோழியத்தை கச்சியப்பர் கையில் கொடுத்து விட்டு, புலவர் மறைந்த பின் இது வரை புலவர் வடிவில் வந்தது, முருகன்தான்  தமிழ் வளர தமிழுக்கு இலக்கணமாய் நின்ற இறைவன் புரிந்த திருவிளையாடல் இது என எண்ணி கச்சியப்பரின் திருவடியில் வீழ்ந்து வணங்கி துதிசெய்தனர். தடைசெய்த புலவரும் மன்னித்தருளுமாறு வேண்ட கச்சியப்பரும் தாங்கள் தடைப்படுத்தியதால் அன்றோ முருகவேளின் திருவருளை எல்லோரும் அறிய முடிந்தது. எல்லாம் ஈசன் செயல். இறைவனையே இங்கு அழைத்து யாவரும் கண்டுகளிக்கச் செய்த அற்புதச்செயலோடு கந்தபுராணம் அறங்கேறியமையால் கந்தபுராணத்திற்கு இணையாக எந்தப் புராணமும் இல்லை.
இது ஒருலட்சம் கிரந்தங்களைக்கொண்டதாம். பதினெண்புராணங்கள் பாடியவர் வேதவியாசர். அவர் பாடிய புராணங்கள்  மிகுதி பதினேழும் மூன்று லட்சங் கொண்ட கிரந்தங்களாகும். மகிமையால் மட்டுமல்லாமல் அளவிலும் சிறந்தது கந்தபுராணமாகும். இதிலே ஆறு பிரிவுகள் சனற்குமார சங்கிதை, சூரசங்கிதை, பிரமசங்கிதை, விட்டுணுசங்கிதை, சங்கர சங்கிதை, சூரசங்கிதை என்பனவாகும்.
இவற்றிலே சங்கரசங்கிதை பன்னிரு கண்டங்களை உடையது. இவற்றுள் முற்பட்டது சிவரகசிய கண்டம் இது 23ஆயிரம் கிரந்தங்களையுடையது. அதில் ஏழுகாண்டங்கள் அடங்கியுள்ளது. அதில் ஆறுகாண்டங்களையும் கச்சியப்பர் 10,345 செய்யுள்களாக தமிழில் இயற்றியுள்ளார். ஏழு காண்டங்களில் கடைசியில் உள்ளதை மட்டும் குகனேரியப்ப முதலியாரும், ஞானவரோதயரும் இதனை தமிழில் இயற்றி அருளிச் செய்தனர், ஆக உலகில் உள்ள சமய உண்மைகள் மதக்கொள்கைகள் யாவும் அடங்கியுள்ளது.கடிய கொடிய இருளை ஞாயிறு எளிதில் அகற்றுவது போல் கந்தப்பெருமானின் கீர்த்தி ஒன்றே கலியில் வரும் பாவங்களைப் போக்கவல்லது. இக்கதையைப் படிப்போர் கேட்போர் அனைவருக்கும் கந்தனருள் என்றும் கிடைத்து இன்பமுடன் வாழ்வார்கள். 

சூரபன்மன்  பல அரிய வரங்களை சிவபெருமானிடமிருந்து பெற்றிருந்தா, ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களால் கட்டுண்டு இருந்த சூரனை ஞான வேல் கொண்டு அவனை அடக்கினார். உலகெங்கும் வாழும் மனிதர் அன்பும் பக்தியும் பெருக பலபதிகளிலும் வீற்றிருந்து ஆறுபடை வீடுகளிலும் குடி அமர்ந்து கருணை பொழியும் கோலத்தில் வள்ளி தெய்வயாணை சமேத சிவ சுப்ரமண்யராக காட்சி தந்துகொண்டிருக்கிறார். நாமும் துதி பாடி துதித்து துணிவு பெறுவோம்.
"புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச்செய்து நவையறு காட்சி நல்கி
என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங்கயங்கள் போற்றி"
முற்றும்
நன்றி - தகவலுதவி - "வாரியார் சிறப்புரை" (நூல்)
- அருந்தா

                                                                                                             4TamilMedia

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -1

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -1

ஓம் எனும் பொருளாய் ஓங்கார நாதத்தின் விந்துவாக சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் வீழ்ந்த போது அதில் முருகன் சண்முகனாக அவதரித்தார்.
 முருகப்பெருமான் கலியுகத்தெய்வம். குமரன் சக்தி வேல் துணைகொண்டு ஆறுநாட்கள் சூரனுடன் போரிட்டார். ஆறாம் நாள் சூரனை வதம் செய்த போது ஆறுமுகன் தாள்மலரில் சூரன் சரணாகதி அடைந்தபோது அவனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றினார். அனைத்து உயிர்கள் மீதும் தெய்வங்கள் அன்பும் கருணையும் கொண்டுள்ளனர். அதிலும் கருணைக்கடலான கந்தன் அணைத்து உயிருக்கும் அருளைப்பொலிபவனல்லவா. அன்பர் உள்ளத்தில் நீங்காது இருப்பவன். தந்தைக்கு குருவாய் இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசித்து குருபரன் என்றும் ஞானபண்டிதன் என்றும் ஸ்வாமி நாதன் என்றும் போற்றப்படுபவன். தேவரும், மூவரும், முனிவரும், அடியவரும் வாழ்த்தி வணங்க என்றென்றும் அருள் தந்து காப்பான்.

அப்படி கலியுகவரதனாம் கந்தவேளை ஸ்கந்தசஸ்டி விரதநாளாம் ஐப்பசி மாதத்தின் அமாவாசை திதிக்கு அடுத்தநாளில் இருந்து பிரதமைமுதல் சஸ்டி வரையான ஆறுநாட்களில் உபவாசமிருந்து ஏழாம் நாளில் பாறணைபண்ணி (விரதத்தை பூர்த்தி செய்தல்) இந்துப் பெருமக்களின் மரபு, உபவாசம் இருக்க முடியாதவர்கள், பகல் அல்லது இரவு ஒருவேளை உணவருந்தி விரதம் அனுட்டிப்பர். கந்தனை வழிபாடாற்றி கந்தசஸ்டி கவசம், கந்தபுராணம், கந்தகுருகவசம், கந்தரங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், சண்முககவசம், பகைகடிதல், முருகவேளின் ஆறுபடை வீடுகளின் தலபுராணம் இப்படி இயற்றிய நூல்களைப் பாடி பரவி வருதல் வேண்டும். அதிலும் குறிப்பாக கந்தபுராணப் படிப்பதையோ, கேட்பதையோ அல்லது கந்தபுராணத்தின் பொருள் படிப்பதையோ, பொருள் சொல்வதைக் கேட்பதையோ இவ்விரத நாளில் விரதம் அனுஸ்டிக்கும் அன்பர்கள் வழக்கமாகக்கொண்டு பெரும்பயன் அடைவார்.

"சத்ரூன் சோஸயதீதி ஸ்கந்த" அமரகோசம் எனும் நிகண்டுவில் இப்படி கூறப்பட்டுள்ளது. பகைவரின் ஆற்றலை வற்றச் செய்பவன் கந்தன், சூரனை வதைக்கவில்லை. மயில்வாகனமாகவும் சேவல்கொடியாகவும் ஆக்கி வேலவன் வாழ்வளித்தான். நன்றிகொன்றவன் விரைந்து அழிவான், என்ற கோட்பாட்டை நமக்கு உணர்த்துவதாக கந்தபுராணம் அமைந்துள்ளது. நன்றி மறத்தல், நன்றிகோறல் என்ற இந்த இருபாவங்களும் மிகத் துன்பத்தை நல்கும். நன்றிகொன்றவனுக்கு உய்வில்லை, என்பதை விரித்துக் கூறுகிறது கச்சியப்பர் எழுதிய கந்தபுராணம். இக்கந்தபுராணத்தில் உள்ள பொருள் எந்தப் புராணத்திலும் இல்லை. ஆக ஞானத்தை விரும்புவோர், ஒளியைவிரும்புவோர், ஆனந்தத்தை விரும்புவோர் எவரும் இக் கந்தபுராணத்தை அவசியம் படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

கந்தன் சிவனின் அம்சம்,பரமேஸ்வரனின் ஐந்து முகங்களான, ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருசம், ஈசானம், அகோரம் ஆகிய ஐம்முகமும், பரமஞானியருக்கு மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருவதனம் அதோமுகமும் சேர்ந்து அம்முகங்களின் நெற்றிக்கண்ணில் நின்று தோன்றிய ஜோதி ஆறு தீப்பொறிகளாகின. அப்பொறிகள் சிவன் முன் வர அவற்றை வாயு தேவனையும் அக்கினி தேவனையும் அக்கினிப்பொறிகளை தாங்கி கங்கையில் கொண்டு சேர்க்குமாறும் பின்னர் கங்காநதி சரவணப் பொய்கையில் கொண்டுபோய் சேர்ப்பாள் என எம்பிரான் உத்தரவிடுகிறார். இந்த அக்கினியின் வெம்மையை எங்களால் தாங்க முடியுமா தேவ தேவா; நாம் எப்படிச் சுமப்பது; எனக்கேட்ட போது இத்தீப்பொறிகளைத் தாங்கிச்செல்ல உமக்கு ஆற்றலை அளித்தோம், என்று அருள் புரிய இறைவனால் அன்றோ நாம் அக்கினியாய் வாயுவாய் இருக்கிறோம், எனக்கூறி தம் சென்னிமேல் ஆறிபொறிகளையும் மாற்றி மாற்றி கொண்டுசென்று கங்கையில் விட்டனர்.
கங்கை அவ்வெம்மை தாங்காது வற்றத்தொடங்கியது. ஆயினும் இறைவனின் அருளை உணர்ந்த கங்கை ஏந்திச் சென்று ஒரு நாழிகைக்குள் இமய மலைச்சாரலில் உள்ள சரவணப்பொய்கையில் சேர்த்துவிட ஆறு தாமரைமலர்களில் ஆறுமுகமாக முருகன் அவதரித்தார். சிவன் அருளால் சரவணப்பொய்கை வற்றாதிருந்தது. அங்கே அருவமாயும் உருவமாயும் அநாதியாயும் ஒன்றாயும் பலவாயும் பரப்பிரம்மமாயும் நின்ற பரசிவ சோதிப்பிழம்பே ஒரு திருமேனியாக வடிவுகொண்டது. பரம்பொருள் கருணை வெள்ளம் பொழியும் ஆறுதிருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு உலகமெல்லாம் உய்யும் வண்ணம் முருகக்கடவுள் திரு அவதாரம் செய்தார்.

இதில் உலகசேமத்திற்காய் முருகு வடிவின் தத்துவத்தை ஆராய்ந்தோமானால் பேருண்மை என்னவென்று புரியும். பஞ்சபூதங்களில் படிப்படியாக வெளி காற்று, கனல், புனல், மண் இவற்றின் வழியில் தோற்றம் பெறுகிறார். இறைசுடராக வானத்தில் நின்று பின்காற்றின்கை புகுந்து பின்தீயைச் சென்றடைந்து கங்கையாகிய நீரில் தவழ்ந்து, பின் நிலத்தில் எய்தியது. ஞானக்கினியில் அருவமாகத் தோன்றிக் கருணைப்பொய்கையில் உருவமாகப் பொலிந்தது.

"ஸட்வக்த்ரம் த்வாதச புஜம் அஸ்டாதச விலோசனம் ரூபம் அங்கீக்ருதம் சுபம் லோகாநாம்" என்று வடமொழி ஸ்காந்தம் சொல்கிறது. உருவம் இல்லாத அருட்பெருஞ் ஜோதி ஆண்டவன் ஆறுமுகங்கள் பன்னிரண்டு தோள்கள் பதினெட்டுக் கண்கள் கொண்ட அருள் உருவத்தை உலகம் நலம் அடையும் பொருட்டு எடுத்துக்கொண்டான்.

"கண்ணிகர் மெய்யும் சென்னிக் கணநிக ரினத்தின் கூறும்
 திண்ணமை தோள்க ளேபோல் திகழ்தரு முயிரும் வேறொன்
 றெண்ணுதற்கரிய தான எஃகமும் இயலிற் காட்டும்
 புண்ணிய முனிக்கோன் செவ்வேள் பொற்பதத் தடிமையாகும்." என்ற கந்தபுராணக்கூற்றுப்படி முருகனுக்கு கண்கள் பதினெட்டுப்போல் தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டாக நின்றன.
முருகனுக்கு முகங்கள் ஆறு, தமிழின் இனஎழுத்துக்கள் ஆறு ஆகும். அதாவது வல்லினம் ஆறு , இடையினம்  ஆறு , மெல்லினம் ஆறு, இப்படியாக மு -ரு -க என்ற சொல்லில் அதன் எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்துக்களும் மெய்யினத்தின் ஒவ்வோர் இனத்தைச் சார்ந்து நிற்பது குறிப்பிடத்தக்கது. முருகன் தோள்கள் பன்னிரண்டு, உயிரெழுத்துக்களும் பன்னிரெண்டு கந்தன் கையில் உள்ள சக்திவேல் எந்தத்தெய்வங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பெற்றது. ஆயுதங்களின் பெயர்களை மக்களுக்கு சூட்டுவதில்லை. ஆனால் சக்திவேல், வேலன், வேல், வேலாயுதம், வேலும்மயிலும் குகவேல், சண்முகவேல் ,கதிர்வேல், வேல்முருகன், வேல்மயூரன் ,சுந்தரவேல் ,வேல்சாமி ,வெற்றிவேல்,வீரவேல் இப்படி பெயர் சூட்டி அழைப்பர்.

மிக முக்கியமாக வேறு எந்தமொழியிலும்  இல்லாத தனிநிலை ஆயுத எழுத்து தமிழில்தான் உண்டு.ஃ ஆயுதஎழுத்து இது வேலின் உருவத்தை ஒத்ததாக அமைந்ததாகும். இச்சை கிரியை ஞானம் என்ற மூன்று சக்திகள் சேர்ந்ததுவே வேலாகும். தமிழின் தலைவன் குமரன், தமிழ்வேறு அழகன் வேறு அல்ல;. எங்கள் தமிழன், இளமையானவன் முருகன்; தமிழும் என்றும் இளமையானது ,அழியாதது ,அழகானது; தமிழ் வேறு;முருகன் வேறு அல்ல.
இனிக் கந்தபுராணத்தை முருகன் அடி எடுத்துக் கொடுக்க கந்தன் புகழைக் கந்தபுராணமாகப் பாடி உலகுக்கு அறிமுகம் செய்த கச்சியப்பசிவாச்சாரியார் அவர்களைப்பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

- அருந்தா
4தமிழ்மீடியா

Thursday, November 1, 2012

நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்

நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்
*********************

நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட
்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன.

*பரதமுனிக்கு அவை நாட்டியசாஸ்திர சூத்ரங்களாகவும்
*நாரதமுனிக்கு சங்கீதசாஸ்திர சூத்ரங்களாகவும்
*பாணினிமுனிக்கு வியாகரணசாஸ்திர சூத்ரங்களாகவும்
*பதஞ்சலிமுனிக்கு யோக சாஸ்திர சூத்ரங்களாகவும் அவை ஒலிக்கின்றன.

அவரவர் துறையில் அவரவர் சிறப்பான நூல்களை உலகம் உய்ய அளிக்க அவை வழிசெய்கின்றன.

*பிரபஞ்ச இயக்கமே சிவதாண்டவம்*

அதனால்தான் சிவனின் நடனத்தை ஸ்ரீசக்ர பிந்துவில் நடைபெறும் நடனமெனக் கூறுவர். அவருடைய நடனத்தாலேயே பிரபஞ்சம் இயங்குகிறது. அவரைச் சுற்றி அனைத்தும் இயங்குகின்றன. பரதமுனிக்கு உடுக்கையின் ஒலியினால் விளக்கியது தவிர தனது நடன முத்திரைகளாலும், கரணங்களாலும், அவற்றின் சேர்க்கையான அங்கஹாரங்களாலும் நடனக் கலையின் சூக்ஷ்மங்களை நடராஜப் பெருமான் விளக்குகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டே தன் நூலில் நூற்றியெட்டு கரணங்களை பரதர் விளக்குகிறார். தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயப் பிராகாரத்திற்கு மேல் உள்ள கோபுர உள்சுற்றில் இந்த நூற்றியெட்டுக் கரணங்களையும் செதுக்கியுள்ள சிற்பி இறுதியில் ஒரு பிறையினை அதிகப்படியாக ஏதும் செதுக்காது விட்டுச் சென்றிருக்கிறார், இது வருங்காலத் தலைமுறைகளுக்கு அந்தச் சிற்பி விடுத்துள்ள சவால். ‘பரதமுனி கூறிய நூற்றியெட்டு கரணங்களையும் இங்கு நான் செதுக்கியுள்ளேன். இது தவிர வேறு ஏதாவது காரணம் உனக்குத் தெரிந்தால் இங்கு செதுக்கிவிடு’ என. இதுநாள் வரை அந்தப் பிறை ஏதும் செதுக்காது தான் வெற்றாக, நடனக் கலையின் முழுமைக் கொரு வெற்றிச் சான்றாக இருந்து வருகிறது.

உலகில் ஒருவர் அடையத்தகுந்த பேறுகளிலெல்லாம் மிகச் சிறந்த பெரும் பேறாகிய பெருவீட்டை, நாதனுடன் ஒன்றும் யோக நெறியை அறிந்த யோகிகள் அகக்கண்ணினால் காண, ஈசன் அந்த நடனத்தை, மக்களின் அறியாமை எனும் முயலகனை காலின் கீழ் அழுத்தி, ஆயிரம் தலைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கைகள், சடைமுடியுடைய ஆயிரம் உருவங்களுடன் மூவாசைகளை அழிக்கும் மூன்று முனைகளை உடைய சூலமேந்தி, பல்வேறு ஆயுதங்களைக் கைகளிலேந்தி வாயுவைத் தன் நடன வேகத்தினாலியக்கி, சந்திர, சூர்ய, அக்னிகளை தன் முக்கண்ணாக்கி, கோபமெனும் புலியையும், மதம் (கர்வம்) எனும் யானையையும் அடக்கித் தோலுரித்து, ஆடையாயுடுத்தி, வெவ்வேறு தீயசக்திகளெனும் விஷப் பாம்புகளை அணிகலன்களாக்கி கோடி சூர்யப் பிரகாசத்தோடு ஹிரண்ய கர்ப்ப முட்டையில் உள்ளும், புறமுமாக நின்று வேதங்களென்னும் காற்சிலம்புகள் ஒலிக்க ஆடுகின்றார்.

அணுவிற்கணுவாய், அசையாப் பொருளாய் தங்கள் ஆன்மாவில் விளங்கும் ஈசனை, பிரபஞ்ச மூலகாரணராய், பிரபஞ்ச சுழற்சிக்குக் காரணராய் உள்ள மஹேசரை, புனித பிரஹ்மக் கருவான தங்கக் கருவாய்த் தங்கியுள்ளவரை, அதையடக்கிய ஹிரண்ய கர்ப்பமாகிய பொன் முட்டையுள் ஆடுவதை யோகிகள் காண்கின்றனர். இந்த ஹிரண்ய கர்ப்பமே பொன்னம்பலமென வழங்கப்படுகிறது. இந்த நடனத்தை கூர்ம புராணம் வர்ணிக்கிறது.

தாருகா வனத்தில் வேதங்களில் சிறந்து விளங்கி, அதனாலேயே செருக்கடைந்த முனிவர்களை செருக்கடக்கி உய்விக்க வந்த ஈசன் சுந்தரனாய், விஷ்ணுவை மோஹினியாக்கி, எழுந்தருளினார். முனிவர்களின் மனங்கள் மோஹினியின் எழிலுருவில் மயங்கின; முனிபத்னியர் சுந்தரரின் எழிலில் தம்மை இழந்தனர். சில கண நேரம் மதிமயக்கிய முனிவர்கள் புலனடக்கத்தை உடையவர்களாக வாழ்ந்திருந்த காரணத்தால் தங்கள் மதிமயங்கிய சுந்தரரையும், மோஹினியையும் எவரென அறியாது அழிக்க முற்பட்டனர். அவர்களின் மாயையினை விலக்க, அவர்களால் ஏவப்பட்ட கோபத்தின் உருவான புலியையும், மதத்தின் உருவான யானையையும் தோலுரித்து உடுத்திக்கொண்டு விட்டார் சுந்தரர். தீயசக்திகளாகிய பாம்புகளையும் தன் அணிகளாக்கிக்கொண்டார். இறுதியில் அவர்களிடம் எஞ்சியிருப்பது வேதங்கள்தான். அவற்றை அவர்கள் ஏவ அவற்றையும் தனது காற்சிலம்புகளாக்கி பிட்சாடனராக, கஜசம்ஹார மூர்த்தியாக, நடனமிட்டார், அவர்களுடைய மடமை அல்லது அஞ்ஞானமெனும் முயலகனை காலின் கீழிருத்தி. இந்த நடனத்தை நினைத்து பின்னொரு சமயம் விஷ்ணு மெய்சிலிர்க்க அதனைத் தானும் காண விழைந்த ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராகி தில்லையில் ஈசனின் நடனத்தைக் கண்டு களித்தார்.

பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு மைய இயக்கமாகத் திகழும் இந்த ஆட்டத்தில் சிவசக்தி ஐக்யத்துக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் சிவனது தாண்டவத்துடன் சக்தியின் லாஸ்யத்தையும் நாம் காண்கிறோம்.

ஈசனின் நடனத்தில் தான் எத்தனை வகை?
எத்தனை விதமாக தன் நடனத்தை எத்தனை பேர்க்கு அருளச் செய்கிறார் மஹேசர்?
அவற்றில் தாண்டவத்தில் தான் எத்தனை விதம்?

தாண்டவ - யோக நடனம்

ஒரு பெண்ணால் மட்டுமே தான் கொல்லப்பட வேண்டுமென வரம் பெற்ற தாருகாட்சன் என்ற அரக்கனிடமிருந்து தேவர்களைக் காக்க உமையுடன் கூடிய ஈசன், தன் மூன்றாவது கண்ணிலிருந்து நீலகண்டமுள்ள காளியைப் படைத்தார். அரக்கனை அழித்த பின்னரும், அவனது உதிரம் குடித்ததனால், உக்கிரம் தணியாத காளியின் உக்கிரத்தை அடக்க ஈசன் ஒரு குழந்தையாக மாறி காளியின் மார்பிலிருந்து பாலாக அவளது உக்கிரத்தை உறிஞ்சிவிட்டார். பிறகு காளியை மகிழ்விக்க பூதகணங்களுடன் தாண்டவமாடினார். இந்தத் தாண்டவத்தினை தேவர்களும், முனிவர்களும் யோக சக்தியினால் கண்டார். இது லிங்கபுராணத்தில் வர்ணிக்கப் படுகிறது.

ஊர்த்துவ தாண்டவம்

சும்பன், நிசும்பன் எனும் அரக்கர்களை அழிக்கும் காளி உக்கிர நடனம் புரிந்தாள். அவளை அடக்க இறைவனும் அவளுடன் நடனம் புரிந்தாள். ஒரு நிலையில் இறைவன் தன் காதினின்றும் கழன்று விழுந்த குண்டலத்தினை சுழன்றாடியபடியே காலினால் லாகவமாக எடுத்து ஊர்த்துவ தாண்டவ நிலையில் பழையபடி காதில் அணிந்த நிலையில், பெண்மை காளியை காலைத் தூக்க இயலாது தலைகுனியச் செய்தது. இது திருவாலங்காட்டில் நடந்தது. இதைக் காண ஆனந்த முனிவரும், கார்க்கோடகன் எனும் பாம்பரசனும் தவமியற்றிக் கண்டனர். யோக நிலையில் பிராணாயாமத்தால் மூச்சை ஊர்த்துவ நிலைக்கு கொண்டு செல்வதையே இந்த யோக நடனம் குறிக்கிறது என்பர்.

சந்தியா தாண்டவம்

சிவபெருமான் சமுத்திர மந்தனம் எனப்படும் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிவந்த ஆலகால விஷத்தினை புவனங்களைக் காக்க வேண்டி, தன் கண்டத்தே நிறுத்தி அருளி நீலகண்டராகி தேவர்களால் அர்ச்சிக்கப்பட்டார். ஓர் ஏகாதசியன்று. இதையடுத்து திரயோதசியன்று மாலை சந்தியாகாலத்தில் ஒரு யாமப் பொழுது கையில் சூலமேந்தி உமையவள் காண நந்தியின் இரு கொம்பினுக்கிடையே நின்று தாண்டவ நடனம் புரிந்தார். இதை பிரதோஷ நடனம் என்பர். ஆகமத் திரட்டும், சோமதேவரின் கதாசரித் ஸாகரமும் இதை வர்ணிக்கின்றன. வைரங்களால் இழைக்கப்பெற்ற பொன் சிம்மாசனத்தில் ஜகன்மாதாவை இருத்தி கயிலாயத்தின் உச்சியில் ஈசன் சூலபாணியாக ஆடினான். தேவர்கள் நன்றிகூறி சூழ்ந்து நின்றனர். வாணி வீணை இசைத்தான். இந்திரன் குழலூதுகின்றான். திருமகள் பாடுகிறாள். திருமால் மத்தளம் இசைத்தான். பிரமன் குடம் இசைக்கிறான். நாரதர் தனது மஹதி எனும் தம்பூரில் சுருதி சேர்த்தார். கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், அமரர்கள், அப்ஸரஸ்கள், இன்னும் மூவுலக வாசிகளும் கண்டுகளிக்க சூலபாணியாக அம்பிகை காண இந்த சந்தியா தாண்டவத்தினை ஈசன் திருக்கைகள் சுழன்றாட அவருடன் மலைகளும், காற்றும், கடல்களும் உடன் சுழன்று புயல்வீசும் சூழல் ஏற்படுவதாக ரத்னாகரரின் சுபாஷிதரத்ன கோஷத்தில் சோமநாத பிரஸஸ்தியில் வர்ணிக்கப் படுகிறது. இந்த சந்தியா தாண்டவத்தில் ஈசனின் காலின் கீழ் முயலகன் இல்லை. காளிதாசரும் உஜ்ஜயினி மஹாகாளியின் சந்தியா தாண்டவத்தை இதே ரீதியில் வர்ணிக்கிறார். இதில் இவர் புஜதாருவனம் என்னும் பலவகைப் பாணியை எட்டு, பத்து, பன்னிரண்டு கைகள் அமைவதை வர்ணிக்கிறார். இதில் பாம்பை ஈசன் தன் அரையிலணிந்தும், தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டும் ஆடினார். ஜபாகுசும புஷ்பங்கள் அலரும் மாலைவேளையில் மஹாகாளர் இந்த நடனத்தை ஆடுவதாக காளிதாசர் வர்ணிக்கிறார். இத்தகைய நடனத்தை எல்லாரும் கயிலாசநாதர் கோவிலிலுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தில் காண்கிறோம்.

இதைத் தவிர திருப்பரங்குன்றத்தில் அமைந்த லலித நடனத்தையும், மதுரை வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறியாடிய நடனத்தையும் சந்தியா தாண்டவம் என்பதுண்டு. இதில் ஈசனின் காலில் கீழ் முயலகன் உண்டு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வங்கத்தைச் சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்புப் பட்டயத்தில் தொடக்கத்திலேயே சந்தியா தாண்டவ வழிபாடு காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் கோவில் ஆனந்த தாண்டவத்தைப் போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பமும், முயலகனுடன் கூடிய மற்றொரு சிற்பமும் உள்ளன.

மணவை முனுசாமி எனும் புலவர் எழுதிய ‘நடராஜர் பத்து’ இந்த ஆனந்த தாண்டவத்தை விவரிக்கிறது. இதில் ஈசனின் ஆபரணங்களும், கையிலேந்திய ஆயுதங்களும், அவருடைய ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்து ஆடியவர்களும் வர்ணிக்கப்படுவதைக் காண்கிறோம்.

ஈசனின் கையிலிருக்கும் ஜீவனின் மனமெனும் மான்ஆடுகிறதாம். மனம் ஒரு நிலையில் நிற்காது இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கும், ஒரு மானைப்போல். ஓரிடத்தில் நின்றாலும் அதன் கண்கள் இங்குமங்கும் அலையும். ஈசனின் கையிலிருக்கும் போதே அது நிலைபெறுகிறது. அதன் கண்களும் ஈசனை நோக்கி அவரிடத்திலேயே லயிக்கின்றன. ஈசன் ஆடும்போது அதுவும் ஆடுகிறதாம்.

ஈசனின் கையிலிருக்கும் மழுவென்னும் கோடாலியாடுகிறதாம். தன் தாள் சேர்ந்த ஜீவன்களின் பிறவித் தொடரை அந்த மழுவினால் வெட்டி பிறவியற்ற நிலையை அருளுகிறாராம் ஈசன். அவருடன் அந்த மழுவும் ஆடுகிறதாம்.

ஈசனின் தலையிலணிந்திருக்கும் மதியும், புனலான கங்கையும் ஆடுகின்றனவாம். நிறைமதியாய் எப்போதும் இருந்தவன், தன் இருபத்தேழு மனைவியருள் ரோஹிணியிடமே மிகுதியாகக் கொண்ட அன்பால், மற்ற மனைவியரின் மனத்தாங்கலையும், தனது மாமனாரின் சாபத்தையும் அடைந்து, அதனால் உடல் தேயத் தொடங்கி பொலிவிழந்த நிலையில் ஈசனின் தாள்களைச் சரணடைய, அவனைப் பிறைமதியாய் தனது சென்னியில் சூடினார் ஈசன். அதேபோல் பகீரதனின் தவத்திற்கிணங்கி வேகவதியாக வேகமாய் இறங்கிய ஆகாச கங்கையை உலகைக் காக்கும் பொருட்டு தன் விரிசடையில் சூடினார் ஈசன். அந்த மதியும், புனலும் ஆடலரசனின் ஆனந்த நடனத்தின்போது சேர்ந்தாடுகின்றனவாம்.

ஈசனின் பூணூலாடுகின்றதாம். கால் தண்டையயணிந்த மறைகள் ஆடுகின்றனவாம். ஈசனின் குண்டலங்களிரண்டும் ஆடுகின்றனவாம். அரையில் உடுத்தியிருக்கும் உடையான புலித்தோல் ஆடுகின்றதாம். தும்பை, அருகு மாலைகளாடுகின்றனவாம்.

ஈசன் ஆடுவதைக் கண்டால் எவருக்குத்தான் ஆடத் தோன்றாது?
மங்கை சிவகாமியும்,
சகோதரன் திருமாலும்,
மறை தந்த பிரமனும்,
வானவர்கோன் இந்திரனுடன் வானவர் கூட்டமும்,
குஞ்சர முகத்தோனும்,
குழந்தை முருகனும்,
ஞானசம்பந்தரோடு பதினெட்டு முனிவர்களும்,
அஷ்டதிக்பாலகரும்,
நந்தி வாகனமும்,
தேவலோகத்து நாட்டியப் பெண்களும் ஆட
இவர்களோடு திசையெங்கும் தன் குழல் பறந்தாட ஈசன்
ஆனந்தக் கூத்தாடினாராம்.

ஈசனின் கைகளில்
மானையும்,
மழுவையும் தவிர
உடுக்கை,
அக்னி,
சூலம்,
கத்தி,
கேடயம்,
பிரம்ம கபாலம்,
பாம்பு ஆகியவற்றையும் நாம் காண்கிறோம்.

வீசு கையினால் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தில் தன் ஆனந்த நடனத்தில் தேவியின் பாகமாகிய இடப் பதத்தினைக் காட்டுகின்றார் ஈசன், “தேவியின் பதத்தைப் பற்றிக் கொள். என் மறுகால் போல் ஸ்திரமான, அஞ்ஞானத்தை ஒடுக்கிய, வாழ்வினை அளிக்கிறேன்,” என்றுணர்த்தும் வகையில், வலக் கரத்தினால் அபயத்தையும் அருளுகின்றார். மதுரை வெள்ளியம்பலத்தில் மாறுகால் நடனமாடும் போதும் இவ்விரண்டு முத்திரைகளும் மட்டும் மாறுவதில்லை. சிவதாண்டவச் சிற்பங்களில் மாறாது காணும் மற்றொன்று ஈசனின் தலையில் காணும் விரித்த மயிற் பீலியும், விரித்த சடையும். சந்தியாகால அழகைக் கண்டு ஈசன் தனை மறந்தவராய் தன் சடைமுடிகளைத் தளர்த்திவிட்டு ஆடத்தொடங்கி விட்டார். ஆடலின் வேகத்திற்கேற்ப சடைகள் திக்கெங்கும் வீசிப் பனந்தன. அடியவர்களுக்கு வேண்டிய வளங்களை வாரிவழங்கும் கருணை மேகமான அவரைக் கண்டு மயில்களும் தோகை விரித்தாடின. அவற்றின் பீலிகளும் ஈசனின் சிரத்தை அலங்கரித்தன.

இந்த ஆனந்தத் தாண்டவத்தில் ஈசனின் கையிலிருக்கும் அக்னியை சம்ஹார சக்தியாகவும், உடுக்கையை ஸ்ருஷ்டி சக்தியாகவும் அறிஞர்கள் விவரித்த போதிலும், இலங்கையைச் சேர்ந்த பேரறிஞர் திரு. ஆனந்த குமாரஸ்வாமியும், இந்திய கலை, மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரும், பேரறிஞரும், எனது தந்தையுமான, திரு. க. சிவராமமூர்த்தி அவர்களும் வேறுபட்ட கருத்தை உடையவர்களாக உள்ளனர். அவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அறுதியிட்டுக் கூறுவது ஈசன் கையிலிருக்கும் அக்னிதான் பரமாத்மாவின் ஸ்ருஷ்டி சக்தியான பேரொளியென்றும், அதனின்றும் தோன்றிய ஒளிச்சுடர்களான ஜீவாத்மாக்கள்தான் ஈசனின் பிரபாவலியிலுள்ள சிறு சிறு தீச்சுடர்களென்றும், அவை யாவும் லயமடைவது ஈசனின் வலக் கரத்திலிருக்கும் உடுக்கையின் நாதப் பிரஹ்மத்தில் என்பதும் தான். நாதமென்றாலே லயம் என்பது உடன் பிறந்த தொரு தத்துவமல்லவா! மேலும் அம்பாளின் பாகமான இடக் கரத்தில், தாயான அவளது செயலான ஸ்ருஷ்டியும், ஈசனின் பாகமாகிய வலக் கரத்தில் அவரது செயலான சம்ஹாரமும் இருப்பது தானே முறை?

இவை தவிர சதருத்ரீயத்தில், பார்வதியை மணப்பதற்கு விழைந்த சிவபெருமான், இமவானின் மனைவியான மேனையின் முன் இடக் கரத்தில் ஊது குழலும், வலக் கரத்தில் துடியும் ஏந்தி நடமிட்டதாக வர்ணிக்கப்படுகிறது.

பரத முனி பஞ்சபூதங்களின் உருவிலும் இறைவன் ஆடுவதாக ஜலமய மூர்த்தி, தேஜோமய மூர்த்தி, ஆகாஸமய மூர்த்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார். சுழற்காற்றின் சுந்தர நடம், தீச்சுடரின் நெளியும் ஒளிநடம், ஒளிகளின் நடம், சூரிய, சந்திரர்களின் நடம், இவை யாவும் ஈசனின் நடமன்றோ! நடராஜ ஸ்தோத்திரத்தில் சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள இயற்கை நிலை ஒற்றுமையைக் கூறும் வகையில் “நடராஜரே, நீங்கள்தான் ஆடுகிறீர்களா? அல்லது பஞ்சபூத உடையில் உள்ள என்னை ஆடவைக்கிறீர்களா?” என வினவும் நிலையைக் காண்கிறோம்.

இவை தவிர வெவ்வேறு யோக நிலைகளைக் காட்டும் வீராட்ட தாண்டவங்கள் எட்டு வகைப்படும். அவை ஈசனின் வெவ்வேறு வெற்றிகளை முழங்குவனவாகவும் விளங்குகின்றன. திருவதிகையில் அட்டயோக சாதனையை விளக்கும் வகையில் திரிபுரசம்ஹாரராகவும், கண்டியூரில் விந்து ஜெயம், மூலாக்னி எழுப்புதல் ஆகியவற்றை விளக்கும் வகையில் பிரஹ்மசிரச்சேதம் செய்த நிலையிலும்; திருக்கொறுக்கையில் சிவதிருஷ்டி பெறல், ஞானக்கண் நிலைகளை விளக்கும் வகையில் காமதஹனராகவும்; திருவழுவூரில் முத்திச் சிறப்பு, சிவவொளி விளக்கம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கஜசம்ஹாரராகவும்; திருக்கோவிலூரில் அஞ்ஞான அழிப்பை விளக்கும் வகையில் அந்தகாசுர வதம் புரிந்த நிலையிலும்; திருப்பறியலூரில் சிவராஜயோகம், அக்னிகாரியம், பசித்துவ நீக்க அகவேள்வி ஆகியவற்றை விளக்கும் வகையில் தக்ஷன் வேள்வி தகர்த்த நிலையிலும்;திருவிற்குடியில் வாயுயோகசாதனை, மூலாதாரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் ஜலந்தர சம்ஹார மூர்த்தியாகவும்; திருக்கடவூரில் அங்கியோகம், மூலநாடி சுஷும்னை வைபவம் ஆகியவற்றை விளக்கும் வகையில் காலசம்ஹார மூர்த்தியாகவும் ஈசன் விளங்குகிறார்.

மும்மலங்களே முப்புரமாகக் கொண்டு ஈசன் ஆகியவற்றை நாசம் செய்து யோகியரைக் காத்தலே திரிபுர சம்ஹாரமென்பர். இந்நிலையில் ஈசன் கரங்களில் வழக்கமான சூலம், மழு, கத்தி, கேடயம் தவிர பினாகமெனும் வில்லையும், பாசுபதமெனும் அம்பையும் காண்கிறோம்.

யோகநெறியில் விந்து ஜெயம் சிறப்பானதொன்று. மூலாக்னியை மேலெழுப்பி விந்து நாசம் ஏற்படாது தடுத்தலை பிரம்ம சிரச்சேதமென யோகநெறியில் கூறுவர். தானும் ஐந்து சிரம் கொண்டவனே, ஈசனுக்கு சமமானவனே எனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க பைரவர் மூலம் அவனது நடுச்சிரத்தைக் கொய்து அந்த பிரம்ம கபாலத்தை பிக்ஷா பாத்திரமாய் ஏந்தி ஈசன் தாண்டவமாடுகிறார்.

வாசியோக மேன்மையால் குண்டலினியை மேலெழுப்பி மேனிலைப் பலன்களை எய்துவதை காமதஹனமாக யோகியர் கூறுவர். சிவத்தின் மேன்மையினை விளக்கவே காமதஹனம் விளைந்தது.

யோகநெறியில் ஆறு ஆதாரநிலைகளிலிருக்கும் தேவதைகளின் அருள்நிலைகள் மறைந்து சஹஸ்ராரத்தில் அக்னி தோன்றுதலை கஜசம்ஹாரமாகக் கூறுவர். சிவனைத்தவிர வேறு யாராலும் அழிவிலா வரம்பெற்ற கஜமுகாசுரனைக் கொன்று ஈசன் கரியுடை போர்த்து தாண்டவமாடுகிறார்.

முதுகெலும்பின் முடிவிடமாகிய குருத்து அல்லது குந்தகம் எனும் பகுதிக்கு மேல் சூரிய ஒளி, ஆன்ம ஒளி, சோம ஒளி, எனும் மூவொளி அமைந்த பகுதியை சூலம் என்பர். யோகப் பயிற்சியின் மூலம் அந்தகமாகிய அறியாமையினை நீக்கி சுஷும்னையில் ஆன்ம ஒளி காணுதலே அந்தகாசுர சம்ஹாரமென திருமந்திரம் கூறுகிறது. இந்நிலையில் ஈசனின் தாண்டவத்தை திருக்கோவிலூரில் காண்கிறோம்.

சிவசக்தி ஐக்கியமான ஆண்-பெண் அம்சக் கூட்டுறவு வேள்வி எனப்படும். இதனை ஈசனுக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். ஈசன் அருளின்றி யோகத்தில் விந்து ஜெயம் கிட்டுவது இயலாது என்பதைக் காட்டுவதே தக்ஷன் வேள்வி தகர்த்தல். ஈசனின் இந்நிலையை திருப்பறியலூரில் காண்கிறோம்.

யோகத்தின்போது கீழ்நோக்கு இயல்புடைய ஜலந்தரனெனப்படும் அபானவாயுவை மேல்நோக்கிப் பிராணனுடன் கலக்கச் செய்யும் யோகமுறையை அங்குலி யோகம் என்பர். இந்நிலையில் பிராணனுடன் கலந்து அபானன் சஹஸ்ராரத்தில் ஈசனின் பேரொளியில் இணைவதை ஜலந்தர யோகமென திருமந்திரம் கூறும். இந்நிலைத் தாண்டவத்தை திருவிற்குடியில் காண்கிறோம்.

மூலக்கனலை சுஷும்னை வழியாக சஹஸ்ராரத்துக்கு எழுப்பும்போது காலமெனும் யமபயம் ஒழியும். பிரஹ்மரந்திரப் பேரொளியில் லயித்து சாகாதிருத்தலை அங்கியோகம் என்பர். பிரஹ்மரந்திரத்தில் ஊர்த்துவதிருஷ்டியால் பார்த்து சஹஸ்ரார தளத்தில் சிவ - ஜீவ, சிவ - சக்தி ஐக்கியப் பேரொளியில் லயிக்கும்போது எழும் பேரொளி வைபவத்தை காலசம்ஹார வைபவம் என்பர். இத்தாண்டவத்தை திருக்கடையூரில் காண்கிறோம்.

இந்த எட்டு வீராட்டங்களின் அம்சமும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் ஒருமை எய்துவதைக் காண்கிறோம். ஸ்ரீருத்ரத்தின் நடுமணியாம் ‘நம : சிவாய’த்தில் ஐந்து பூதங்களும், ஐந்து தொழில்களும், ஐந்து பிரஹ்ம நிலைகளும், ஐந்து திசைகளும், ஐந்து சக்திவேதங்களும் அடங்குவதுடன் சிவதாண்டவ உருவின் ஐந்து பாகங்களும் கூட அடங்குவதைக் காண்கிறோம்.

சிவதாண்டவத்தில் ஐம்பெரும் பாகமென ஐந்தெழுத்து மந்திரம், ஐந்து முகங்கள் (ஐந்து பிரஹ்மங்கள்), ஐந்து திசைகள், ஐந்து பூதங்கள், ஐந்தொழில்கள், ஐந்து சக்திபேதங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. துடி எனும் உடுக்கையில் ‘ந’ எனும் எழுத்தும், ஸத்யோஜாதமெனும் பிரஹ்மநிலையும், மேற்கு திசையும், பிருத்வி எனும் பூதமும், படைத்தலைச் செயும் பிரம்மனும், கிரியா சக்தியும் அடங்கக் காண்கிறோம்; அமைந்த கரத்தில் ‘ம’ எனும் எழுத்தும், தத்புருஷமும், கிழக்கு திசையும், வாயுவும், காத்தல் எனும் தொழில் புரியும் விஷ்ணுவும், ஞான சக்தியும் அடங்கக் காண்கிறோம்; அக்னியில் ‘சி’ எனும் எழுத்தும், அகோரமும், தெற்கு திசையும், தேஜஸும், அழித்தலெனும் பணிபுரியும் ருத்ரனும், இச்சா ஸக்தியும் அடங்கக் காண்கிறோம்; ஊன்றிய பாதத்தில் ‘வா’ எனும் எழுத்தும், வாமதேவமும், வடக்கு திசையும், நீரெனும் பூதமும், திரோதனமெனும் மறைத்தலைப் புரியும் சதாசிவனும், ஆதிசக்தியும் அடங்கக் காண்கிறோம்; குஞ்சித பாதத்தில் ‘ய’ எனும் எழுத்தும், ஈஸானமும், உச்சிதிசையும், ஆகாயமும், அருளலைப் புரியும் மஹேஸ்வரரும், பராசக்தியும் அடங்கக் காண்கிறோம்.

அவரது ஆனந்த நடனம் மூலம் அவரே உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்து தூக்கிய திருவடியாம் அம்பிகையின் பாதத்தை சிக்கெனப் பற்றி, அவரருளால் அபஸ்மாரம் நீங்கப் பெற்று ஸ்திர வாழ்வை நாம் அடைவோமாக. அவரது இடக்கரம் அமைந்த தேஜஸினின்று ஒரு பொறியாகப் பிறந்த நாம், அவரருளால் அவரது நினைவில் வாழ்ந்து அவரது வலக்கரமமர்ந்த துடியில் லயத்தை அடைய அவரது திருவடி போற்றி வேண்டுவோமாக.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Photo: நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்  
*********************www.fb.com/thirumarai

நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’  எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன. 

சிவமந்திரமும்-பலன்களும்

நமசிவய, சிவயநம, வயநமசி, சிவாய தத்புருட
சிவமந்திரமும்-பலன்களும் ***

நங்சிவயநம - திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம - தேக நோய் நீங்கும்
வங்சிவயநம - யோக சித்திகள் பெறலாம்.

அங்சிவயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவய - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய - விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவய - புத்தி வித்தை மேம்படும்.
நமசிவய - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய - கடன்கள் தீரும்.
நமசிவயவங் - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம - சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்.
லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவய - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவயநம - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

சாஷ்டாங்க நமஸ்காரம்

கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கீழே விழுந்து (சாஷ்டாங்க நமஸ்காரம்) வணங்கக்கூடாது
***********************
சர்வ+அஷ்ட்ட+அங்க+நமஸ்காரம்
(எல்லா+எட்டு+உறுப்பு+வணக்கம்)

தலை, இரு தோள்கள், மார்பு உட்பட வயிற்
றுப்பகுதி, இரு கால்கள் , இரு பாதங்கள் ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை.
*****************************************
ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் சேர்வதற்குரிய இடம்.

ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் ஆலயம் என்றும் கொள்ளலாகும்.

பழத்தின் ரசம் போலவும், விறகில் தீ போலவும், எள்ளில் நெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் எங்கும் நீக்க மற நிறைந்து, மறைந்து நின்ற சிவ பரம்பொருள், ஆலயங்களில் தயிரில் நெய் போல் நின்று ஆன்மாக்களுக்கு அருள்புரிந்து இயங்குகின்றார்.

அன்பர்கள் எளிதில் இறைவனின் அருளைப் பெறும் இடங்களாகத் திகழ்வன சிவன் கோயில்.

கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது.

கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.

கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும்,
வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இரு வித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
***"ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது''***

முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Photo: கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கீழே விழுந்து (சாஷ்டாங்க நமஸ்காரம்) வணங்கக்கூடாது
*********************** www.fb.com/thirumarai
சர்வ+அஷ்ட்ட+அங்க+நமஸ்காரம்
(எல்லா+எட்டு+உறுப்பு+வணக்கம்)

தலை, இரு தோள்கள், மார்பு உட்பட வயிற்றுப்பகுதி, இரு கால்கள் , இரு பாதங்கள் ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை.
*****************************************
ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் சேர்வதற்குரிய இடம். 

ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் ஆலயம் என்றும் கொள்ளலாகும். 

பழத்தின் ரசம் போலவும், விறகில் தீ போலவும், எள்ளில் நெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் எங்கும் நீக்க மற நிறைந்து, மறைந்து நின்ற சிவ பரம்பொருள், ஆலயங்களில் தயிரில் நெய் போல் நின்று ஆன்மாக்களுக்கு அருள்புரிந்து இயங்குகின்றார். 

அன்பர்கள் எளிதில் இறைவனின் அருளைப் பெறும் இடங்களாகத் திகழ்வன சிவன் கோயில்.

கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது. 

கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும். 

கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், 
வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். 

சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இரு வித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
***"ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது''***

முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை பகவான் ரமண மஹர்ஷிகள் அருளிய

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமணமாலை சாற்றக்
கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!

அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா! - 001

அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா

அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் அமர்வித்தது என்கொல் அருணாசலா

ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா

இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா

ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா

உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா

ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாசலா

எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா

ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா - 010

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா

ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் உன் சூதேயிது அருணாசலா

ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா

ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை
ஆளுவது உன் கடன் அருணாசலா

கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா

காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா

கிரி உரு ஆகிய கிருபைக் கடலே கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா

கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என் கீழ்மையைப் பாழ் செய் அருணாசலா

குற்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
குரு உருவாய் ஒளிர் அருணாசலா

கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள் கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா - 020

கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை அஞ்சல் என்றே அருள் அருணாசலா

கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக் கேடு செய்யாது அருள் அருணாசலா

கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை வெறி கொள அருள் அருணாசலா

கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக் கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா

கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
குறை என்செய்தேன் அருணாசலா

கௌதமர் போற்றும் கருணை மாமலையே கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா!

சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன சலசம் அலர்த்தியிடு அருணாசலா

சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான் சாந்தமாய்ப் போவன் அருணாசலா

சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத வாயைத்திற அருண்மதி அருணாசலா

சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள் சீரை அளித்து அருள் அருணாசலா - 030

சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச் சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா

சூது செய்து என்னைச் சோதியாது இனி உன் ஜோதி உருக்காட்டு அருணாசலா

செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு உருப்படு வித்தை காட்டு அருணாசலா

சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர் ஆற்று அழிவேன் அருணாசலா

சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால் உய்வகை ஏது உரை அருணாசலா

சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று சும்மா இருந்தாய் அருணாசலா

சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில் சொல் வேறு என் கதி அருணாசலா

சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே சலியாது இருந்தாய் அருணாசலா

ஞமலியில் கேடா நான் என் உறுதியால் நாடி நின் உறுவேன் அருணாசலா

ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற ஞானம் தெரித்தருள் அருணாசலா - 040

ஞிமிறுபோல் நீயும் மலர்ந்திலை என்றே நேர் நின்றனை என் அருணாசலா

தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய் தத்துவம் இது என் அருணாசலா

தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாசலா

திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண் தெரியும் என்றனை என் அருணாசலா

தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான் திரும்ப உற்றேன் அருள் அருணாசலா

துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன் ஒப்பிட வாய் ஏன் அருணாசலா

தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம் தோயவே அருள் என் அருணாசலா

தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச் சேர ஒழித்தாய் அருணாசலா

தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத் தியக்கம் தீர்த்து அருள் அருணாசலா

தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான் தட்டழிந்தேன் அருள் அருணாசலா - 050

தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான் நட்டமாவேன் அருள் அருணாசலா

தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும் சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா!

நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள் நகையிட்டுப் பார் நீ அருணாசலா

நாணிலை நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவா நின்றனை அருணாசலா

நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன் நின் அருள்
மழை பொழி அருணாசலா

நீ நான் அறப்புலி நிதம் களிமயமா நின்றிடும் நிலை அருள் அருணாசலா

நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட எண்ண அலை இறும் என்று அருணாசலா

நூலறிவு அறியாப் பேதையன் என்தன் மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா

நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல் நக்கனா நின்றனை அருணாசலா

நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ மோசம் செயாது அருள் அருணாசலா! - 060

நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில் நாடி உட்கொள் நலம் அருணாசலா

நொந்திடாது உன்தனைத் தந்து எனைக் கொண்டிலை அந்தகன் நீ எனக்கு அருணாசலா

நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம் ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா

பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள் பற்றிட அருள்புரி அருணாசலா

பார்த்தருள் மால் அறப் பார்த்திலை எனின் அருள் பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா

பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள் பித்தம் தெளி மருந்து அருணாசலா

பீதி இல் உனைச் சார் பீதியில் எனைச்சேர், பீதி உன் தனக்கு ஏன் அருணாசலா

புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை புல்லிடவே அருள் அருணாசலா

பூமண மா மனம் பூரண மணம் கொளப் பூரண மணம் அருள் அருணாசலா

பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன் பெருமை யார் அறிவார் அருணாசலா - 070

பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப் பேயன் ஆக்கினை என் அருணாசலா

பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல் பற்றுக் கோடாய்க் கா அருணாசாலா

பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன் போதத்தைக் காட்டினை அருணாசலா

போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட் போராட்டம் காட்டு அருணாசலா

பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன் பவிசு கண்டுற அருள் அருணாசலா

மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள் மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா

மானங்கொண்டு உறுபவர் மானத்தை அழித்து அபிமான மில்லாது ஒளிர் அருணாசலா

மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான் வஞ்சியாது அருள் எனை அருணாசலா

மீகாமன் இல‍்லாமன் மாகாற்று அலை கலம் ஆகாமல் காத்தருள் அருணாசலா

முடி அடி காணா முடி விடுத்து அனைநேர் முடிவிடக் கடனிலை அருணாசலா - 080

மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத் தூக்கி அணைந்து அருள் அருணாசலா

மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம் மெய் கலந்திட அருள் அருணாசலா!

மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர்க் சேர்ந்து நீ மேன்மை உற்றனை என் அருணாசலா

மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்மை வசம் ஆக்கினை அருணாசலா

மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில் நீ நட்டம் ஆடினை என் அருணாசலா

மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்து என் மோகம் தீராய் என் அருணாசலா

மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால் மௌனம் இது ஆமோ அருணாசலா

யவன் என் வாயில் மண்ணினை அட்டி என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா

யாரும் அறியாது என் மதியினை மருட்டி எவர் கொளை கொண்டது அருணாசலா

ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது எனை ரமித்திடச் செயவா அருணாசலா - 090

ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில் ரமித்திடுவோம் வா அருணாசலா

லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப்
பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா

லாபம் நீ இகபர லாபம் இல் எனை உற்று லாபம் என் உற்றனை அருணாசலா

வரும்படி சொலிலை வந்துஎன் படி அள வருந்திடு உன் தலைவிதி அருணாசலா

வாவென்று அகம் புக்கு உ ன் வாழ்வு அருள் அன்றே என் வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா

விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர் விட்டிட அருள்புரி அருணாசலா

வீடு விட்டு ஈர்த்து உள வீடு புக்குப் பைய உன் வீடு காட்டினை அருள் அருணாசலா

வெளிவிட்டேன் உன்செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா

வேதாந்தத்தே வேறு அற விளங்கும் வேதப் பொருள் அருள் அருணாசலா

வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா வைத்து எனை விடாது அருள் அருணாசலா - 100

அம்புவில் ஆலிபோல் அன்பு உரு உனில் எனை அன்பாக் கரைத்து அருள் அருணாசலா

அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன் உன் அருள்வலை தப்புமோ அருணாசலா

சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச் சிறையிட்டு உண்டணை அருணாசலா

அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு அன்பன் ஆயிட அருள் அருணாசலா

என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாசலா

என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என் புன் மொழி கொள அருள் அருணாசலா

பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப் பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா

மாலையளித்து அருணாசல ரமண என் மாலை அணிந்து அருள் அருணாசலா - 108

அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலம் வாழி அன்பர்களும் வாழி
அக்ஷர மணமாலை வாழி.
Photo: ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை பகவான் ரமண மஹர்ஷிகள் அருளிய

www.fb.com/thirumarai

திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்:

திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்:

திருமலை முருகன் கோயில் நெல்லை மாவட்டம் தென்காசி நகரிலிருந்து நேர்வடக்காக சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பண்பொழி கிராமத்தில் உள்ளது. இங்குள்ள மூலவர் பெயர் முத்துக்குமாரசுவாமி ஆகும் . திரு
மலை 500 அடி உயரமுடையது மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த ம
லையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. .பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும். மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள்.

மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். தற்போது பூஞ்சுனை என்று இந்த குளத்தை அழைக்கிறார்கள். இங்கு இலக்கியங்களில் கண்ட குவளை என்னும் மலர் இதில் பூத்தது.அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இங்கு முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது வேறு முருகன் கோவில்களில் இல்லாத சிறப்பாகும்.

ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, ""பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்,'' என்றார். அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பூவன் பட்டரின் கனவில் வந்த சிலையை கடப்பாரை வைத்து தோண்டி எடுக்க முயன்றபோது சிலையில் மூக்கு பகுதியில்ல் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த சேதம் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இதனால் இதை வழிபட வந்த கிராம மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக ’மூக்கன்’ என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள்.

விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்....

Friday, September 7, 2012

ஶ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு

AddThis Social Bookmark Button
ஶ்ரீ ஹயக்ரீவர் திருமாலின் அவதாரம் ஆகத் தோன்றியவர். தசவதாரங்களுக்கு முற்பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர்.

பரிமுகன் என்றும் அஸ்வசிரவர் என்றும் குறிப்பிடப்படுவர். ஒருமுறை பிரம்ம தேவர் உறக்கத்தில் இருக்கும் வேளையில் மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதள பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்த நான்முகனும் வேதங்களைக்காணாது மகாவிஸ்ணுவிடம் முறையிட அவரும் அவற்றை மீட்டு வருவதற்காக ஹயக்ரீவராக உருவெடுத்துச் சென்றதாக

அதள பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன் வழியே வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு ஞானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார். பின்னர் வேதத்தை படைப்புத்தெய்வம் பிரம்மாவிற்கே ஆவணி மாதப் பெளர்ணமி அதாவது (சிரவணப்பெளர்ணமி) நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்க கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆக கல்வி கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவர் உள்ளார் எனவே இவரை போற்றி வழிபடுபவருக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும்.

'ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே'

அதாவது தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன். என்று போற்றித் துதிக்கின்றனர்.
அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும் அவர் லஸ்மி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பல வித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்திரி முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.

ஆத்திசூடியில் ஒளவை கூறியதுபோல்' நூல் பல கல் ' என அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப் படிப்பது போல் ஹயக்ரீவர் தியானத்தையும் கூறி மாணாக்கர் வாழ்வை வளம் பெறச்செய்வோம்.

ஹயக்ரீவர் காயத்திரி
'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'

மூலமந்திரம்

'உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர
ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய'

ஞானத்தையும் ஒருமுகப் பட்ட மனதையும் வீர்யமான சக்தியையும் அளிக்கவல்லதும், இச்சுலோகங்களின் அதிர்வலைகள் சொல்பவர்களின் நரம்புகளில் ஒருவகை நல்ல அதிர்வுகளை ஏற்படச் செய்து மூளையில் ஞானத்தைப் பெருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானம் உணர்ந்த வேத பண்டிதர்கள். ஆகவே ஹயக்ரீவரை வணங்கி கலைகளை கற்றத் தேர்ச்சி அடைவோம்.

-  அருந்தா