Wednesday, February 1, 2012

ஸ்ரீமத் பகவத்கீதை - ஐந்தாவது அத்தியாயம்

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத பம்சமோ அத்ய:।

கர்மஸந்யாஸ யோகம்



அர்ஜுந உவாச।
ஸம்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஷம்ஸஸி।
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஷ்சிதம்॥ 5.1 ॥

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, கர்ம ஸந்நியாசத்தையும் (செயல் துறத்தல்), பிறகு கர்ம யோகத்தையும் (முழு அறிவுடன் பகவானை இலக்காய்க் கொண்டு செயல்படல்) உபதேசிக்கிறீர். இவற்றில் எது சிறந்தது என்பதைக் கூறுவீராக.

ஸ்ரீபகவாநுவாச।
ஸம்ந்யாஸ: கர்மயோகஷ்ச நி:ஷ்ரேயஸகராவுபௌ।
தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே॥ 5.2 ॥

பகவான் கூறினார்: பகவான்: இரண்டும் சிறப்பைத் தரும், எனினும், செயலைத் துறத்தலை விட பக்தித் தொண்டில் செயல்படுவதே மேலானது.

ஜ்ஞேய: ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி।
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே॥ 5.3 ॥

செயலின் விளைவில் விருப்பு வெறுப்பற்றவனே நித்யமான துறவியாவான். அவன் இருமைகளிலிருந்தும், பந்தங்களிலிருந்தும் விடுதலை அடைகிறான்.

ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:।
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்॥ 5.4 ॥

உலக ஆய்வறிவு (ஸாங்க்யம்), கர்மயோகம் இரண்டும் வெவ்வேறானது என அறிவற்றோர் கூறுகின்றனர். இவற்றில் எதை முழுமையாகப் பின்பற்றினாலும் ஒரே பலனைப் பெறலாம்.

யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே।
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 5.5 ॥

துறவினால் அடையப்படும் பக்குவம், பக்தித் தொண்டினாலும் அடையப்படும். இவ்வகையின் செயலும், துறவும் ஒன்றெனக் காண்பவன் உண்மையை அறிந்தவனாகிறான்.

ஸம்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:।
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி॥ 5.6 ॥

பகவானுக்காக தொண்டில் ஈடுபடாமல், வெறுமனே செயலை மட்டும் துறப்பவன் இன்ப நிலையை அடைய முடியாது. தத்துவமறிந்தவன் இறைச்செயல்களால் தூயவனாகி, விரைவில் பரத்தை அடைகிறான்.

யோகயுக்தோ விஷுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:।
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே॥ 5.7 ॥

அத்தகு தூய ஆத்மா தன்னடக்கத்தால் அனைவரிடமும் அன்புள்ளவனாகவும், அன்பு கொள்ளப்பட்டவனாகவும், செயலில் ஈடுபட்டாலும் கட்டுப்படாதவனாகவும் இருக்கிறான்.

நைவ கிம்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்।
பஷ்யஞ்ஷ்ருண்வந்ஸ்ப்ருஷஞ்ஜிக்ரந்நஷ்நம்கச்சந்ஸ்வபந்ஷ்வஸந்॥ 5.8 ॥

ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி।
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்॥ 5.9 ॥

உண்மையறிந்தவன் பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், உண்ணல், செல்லல், உறக்கம், சுவாசம் இவற்றில் ஈடுபட்டாலும், தான் ஒன்றும் செய்யவில்லை என்பதை அறிந்துள்ளான். பேசும்போதும், கண்மூடித் திறக்கும்போதும், பெறும்போதும், கழிக்கும் போதும், தான் அவற்றிலிருந்து வேறுபட்டவன் என அறிந்துள்ளான்.

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:।
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா॥ 5.10 ॥

நீரிலிருக்கும் தாமரை இலைகளில் நீர் ஒட்டாதது போல், இறைவனை மையமாகக் கொண்டு செயல்படும் பற்றற்றவனை கர்மவிளைவுகள் பாதிப்ப‌தில்லை.

காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி।
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஷுத்தயே॥ 5.11 ॥

பற்றைத் துறந்து மனம், புத்தி, உடல் மற்றும் புலன்களால் கூட தங்களைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் யோகிகள் செயல்படுகின்றனர்.

யுக்த:கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே॥ 5.12 ॥

எல்லாச் செயல்களின் விளைவுகளையும் எனக்கே அர்ப்பணம் செய்த, உறுதியான பக்தியுடைய ஆன்மா தூய அமைதியை அடைகிறான். அவ்வாறு செய்யாதவன் கர்ம பந்தங்களில் சிக்குகிறான்.

ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஷீ।
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்॥ 5.13 ॥

ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:।
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே॥ 5.14 ॥

உடல் கொண்ட ஆன்மா, தன் இயற்கையைக் கட்டுப்படுத்தி மனதால் செயலைத் துறக்கையில், ஒன்பது கதவுகளையுடைய நகரில் அவன் செய்யாமலும், செயலுக்குக் காரணமில்லாமலும் இன்பமாய் வாழ்கிறான். உடல் நகரின் தலைவனான ஆன்மா செயல்களையோ, செயற்பலனையோ உண்டாக்குவதுமில்லை; யாரையும் செயல்படத் தூண்டுவதுமில்லை.


நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:।
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:॥ 5.15 ॥

ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஷிதமாத்மந:।
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஷயதி தத்பரம்॥ 5.16 ॥

யாருடைய பாப, புண்ணியங்களுக்கும் பரமாத்மா பொறுப்பல்ல. அஞ்ஞானத்தினாலேயே ஆன்மாக்கள் மயங்குகின்றனர். எல்லாம் கதிரவனால் வெளிப்படுத்தப்படுவது போல, அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானத்தால் ஒருவனுக்கு உண்மை ஞானம் வெளிப்படுகிறது.



தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:।
கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:॥ 5.17 ॥

அறிவு, மனம், நம்பிக்கை இவற்றை இறைவன் மீது நிறுத்தி சரணடைந்தவன், தனது ஞானத்தால் களங்கங்கள் அகன்று, விடுபடும் பாதையில் முன்னேறுகிறான்.

வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி।
ஷுநி சைவ ஷ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஷிந:॥ 5.18 ॥

அடக்கமுள்ள சாது – அறிவின் காரணத்தால் நல்ல அந்தணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் இவர்கள் அனைவரையும் சமநோக்குடன் காண்கிறான்.

இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:।
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:॥ 5.19 ॥

ஆன்மா குறித்த ஒருமை, சமத்துவம் – இவற்றை அறிந்தவர்கள் இப்பிறவியிலேயே உலக நியதிகளை வென்றவர்களாவர். பிரம்ம உணர்வில் இருப்பதால் அவர்கள் பிரம்மம் போன்றே களங்கமற்றவர்களாவர்.

ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்।
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:॥ 5.20 ॥

பிரியமானதை அடைவதால் மகிழ்வும், பிரியமற்றதை அடைவதால் துயரமும் கொள்ளாது, தன்னறிவுடன் மயக்கமற்று இறைவிஞ்ஞானத்தை அறிபவனாகவும் இருப்பவன் பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

பாஹ்யஸ்பர்ஷேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்।
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஷ்நுதே॥ 5.21 ॥

யே ஹி ஸம்ஸ்பர்ஷஜா போகா து:கயோநய ஏவ தே।
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:॥ 5.22 ॥

அவன் இன்பத்திற்காக ஜடவுலகத் தொடர்புகளால் கவரப்படுவதில்லை. பரத்தில் கருத்தை செலுத்தியதால் தன்னுள்ளே எல்லையற்ற ஆனந்தத்துடன் இருக்கிறான். ஜட இன்பங்களுக்கு ஆரம்பமும், முடிவும் உள்ளன என்றும் துன்பத்திற்கு காரணமாக புலனீடுபாடுகள் இருக்கின்றன என்றும் அவன் அறிந்துள்ளதால் அவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஷக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஷரீரவிமோக்ஷணாத்।
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:॥ 5.23 ॥

சரீரத்தை விடும்முன்பே புலன் மற்றும் காம, குரோத உந்துதல்களைக் கட்டுப்படுத்த முடிந்தவனே யோகி ஆவான். தனக்குள் இன்புற்று, மகிழ்வுடன் இருக்கும் அவன் தன்னுணர்வால் பரத்தை அடைகிறான்.

யோ அந்த:ஸுகோ அந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:।
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோ அதிகச்சதி॥ 5.24 ॥

லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:।
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:॥ 5.25 ॥

இருமை – ஐயங்களுக்கு அப்பாற்பட்டு, மனம் உள் நோக்கிய நிலையில், எல்லா ஜீவர்களின் நலனுக்குமாய் வாழ்பவன், பாபங்களிலிருந்து விடுபட்டு பரத்தை அடைகிறான்.


காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்।
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்॥ 5.26 ॥

புலனிச்சைகள், கோபம் இவற்றிலிருந்து விடுபட்ட, தன்னுணர்வும் தன்னொழுக்கமும் கொண்ட, முழுமைக்காகப் பாடுபடும் சாதகன் விரைவில் பரத்தை அடைகிறான்.

ஸ்பர்ஷாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஷ்சக்ஷுஷ்சைவாந்தரே ப்ருவோ:।
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யந்தரசாரிணௌ॥ 5.27 ॥

யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:।
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:॥ 5.28 ॥

புலன் விஷயங்களை வெளி நிறுத்தி, புருவ மத்தியில் பார்வையை நிறுத்தி, மனம், புலன், அறிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு நிரந்தரமாய் இந்நிலையிலிருக்கும் சாதகன் நிச்சயம் விடுதலை பெற்றவனாவான்.

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஷ்வரம்।
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம்ருச்சதி॥ 5.29 ॥

எல்லா யாகங்களுக்கும், தவங்களுக்கும் இறுதி லட்சியமாகவும், எல்லா லோக தலைவர்களுக்கும் மகேஸ்வரனாகவும், எல்லா உயிரினங்களின் நண்பனாகவும் என்னை அறிபவன், உலகத் துயர்களிலிருந்து விடுபட்டு அமைதியடைகிறான்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஸம்ந்யாஸயோகோ நாம பம்சமோ அத்யாய:॥ 5 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'கர்மஸந்யாஸ யோகம்' எனப் பெயர் படைத்த ஐந்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment