Friday, August 24, 2012

பஞ்ச புராணம்

பஞ்ச புராணம் என்பது *

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்துள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடல்
******************************************
1- திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரம்
------------------------------------------------------------------------------
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்---
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்---இவன் அன்றே!

2- திருப்பெருந்துறையில் அருளிய சிவபுராணம்
-----------------------------------------------------------------
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

3- திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
------------------------------------------------------------------
ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

4- சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
------------------------------------------------------
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.

5- திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்; திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்.
--------------------------------------------------------------------
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்

No comments:

Post a Comment