Tuesday, April 24, 2012

famous quotes

நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே.. ---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ---- எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல். ---திரு. டெஸ்கார்டஸ்-- இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான். --பெயர் தெரியா பெரியவர்--- தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான். --புத்தர்--- அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல. உழைக்கும் நேரம். --பெயர் தெரியா பெரியவர்--- இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். ---மாவீரன் நெப்போலியன்--- தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு. வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம். --பெயர் தெரியா பெரியவர்--- நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன். ---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்--- எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு.. --பெயர் தெரியா பெரியவர்--- தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம் தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடும். --பெயர் தெரியா பெரியவர்--- போலியான நண்பனாக இருப்பதைவிட வெளிப்படையான எதிரியாக இரு --பெயர் தெரியா பெரியவர்--- ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ? --ரஸ்கின்--- எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை. --பெயர் தெரியா பெரியவர்--- ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம். ---திரு. எட்மன்ட் பார்க்--- முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல் --திரு. ஜார்ஜ் பெர்னாட்ஷா--- காதல் என்பது அரசியலைப் போல் ஒரு சூதாட்டம். ஏனெனில் இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும் செய்தால்தான் வெற்றி பெற முடியும். --பெயர் தெரியா பெரியவர்--- நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள், நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும். --பெயர் தெரியா பெரியவர்--- ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர். யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை. முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள். பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும். --சுவாமி விவேகாந்தர்-- எல்லாரும் தன்னை சீர்திருத்துவதை விட்டு, உலகத்தை சீர்திருத்த விரும்புகின்றனர். --பெயர் தெரியா பெரியவர்--- நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு. --- அண்ணல் காந்தி --- நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது. மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது. ---தத்துவஞானி சாக்ரடீஸ்-- இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை. --தத்துவஞானி கன்பூசியஸ்--- அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனை சந்திக்கிறான். அதிர்ஷ்டம் இல்லாதவன் ஒரு அழகியை சந்திக்கிறான். --பெயர் தெரியா பெரியவர்--- உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும், ஒருவருக்கு உணவளி அது போதும் உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி. --அன்னை திரசா-- ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம். --திரு. வோயாஸ்--- நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும். --கவிஞர் ஹோமர்-- சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது. --பெயர் தெரியா பெரியவர்--- வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை. தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு.. --கவிஞர் சுகி--- உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது. உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது. --பெயர் தெரியா பெரியவர்--- உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா? அப்படியென்றால் சந்தோசப்படு நீ அவர்களை விட மேலே இருக்கிறாய். --பெயர் தெரியா பெரியவர்--- ஒருவன் கடவுளை நோக்கி நொண்டியடித்து செல்கிறான். சாத்தனை நோக்கி குதித்தொடுகிறான். --பெயர் தெரியா பெரியவர்--- இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார். ---பைபிள்--- வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும். ---திரு. ஹென்றி டேவிட் தேரோ---- அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள். -- தத்துவஞானி கன்பூசியஸ்--- உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா? அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான். --திரு. டாக்டஸ்-- வாக்குறுதி முழுமதியை போன்றது.. உடனே நிறைவேற்றா விட்டால் அது நாளுக்கு நாள் தேய்ந்துவிடும். --பெயர் தெரியா பெரியவர்--- உன்னால் இது முடியும் என்று சொல்கிறபோது அந்த செயலை செய்ய என்னைப் போல் ஒரு சோம்பேறியை பார்க்க முடியாது. உன்னால் இது முடியாது என்று சொல்கிறபோது என்னைப்போல் ஒரு இயந்திரத்தை பார்க்க முடியாது. -- நான்--- அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி. --பெயர் தெரியா பெரியவர்--- எல்லாம் கடைசியில் சரியாகிவிடும் அப்படி சரியாகவில்லை என்றால் அது கடைசியல்ல --பெயர் தெரியா பெரியவர்--- சாதிக்க துடிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம். நலம் தரும் நந்திகேஸ்வரர் நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள். எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும். சோம சூக்தப் பிரதட்சணம் மற்ற நாட்களால் ஆலயத்தில் மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும். ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கதிலும் எதிர்த்துச் சென்று பயமுருத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது. பிரதட்சண முறை முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இfவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. பிரதோஷ வழிபாடு செய்ய மாலயனாதி வானவர்களும் சிவாலயம் செல்வார்கள். ஆதலால் பிரதோஷ நேரத்தில் திருமால் கோயில்களால் வழிபாடு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் மாலை நாலரை, முதல் ஆறுவரை பிரதோஷ நேரமாகும். இது தினப் பிரதோஷம் எனப்படும். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும். பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:- 1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 2. தயிர் - பல வளமும் உண்டாகும் 3. தேன் - இனிய சாரீரம் கிட்டும் 4. பழங்கள் - விளைச்சல் பெருகும் 5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும் 6. நெய் - முக்தி பேறு கிட்டும் 7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும் 8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும் 9. எண்ணெய் - சுகவாழ்வு 10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம் 11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

Monday, April 23, 2012

அட்சய திருதியையில்… ஆதிசங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம்! வீட்டில் சகல சுபிட்சங்களும் பெருகிடும்..! ஜகத் குரு ஸ்ரீஆதிசங்கரரின் அவதார காலத்தை பரம புண்ணிய காலம் எனப் போற்று வார் மகாபெரியவா. ஏன் அப்படி? அவரே சொல்கிறார்… ”ஸ்ரீசங்கர ஜயந்தி புண்ய காலத்துக்கு சமமாக எதுவுமில்லை… இன்றைக்கும் சிவராத்திரி, ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி இத்யாதியை நாம் கொண்டாடுகிறோம் என்றால், அதற்கு ஆசார்ய ஜயந்தி என்ற புண்ய காலம் ஏற்பட்டதுதான் காரணம். இந்த ஒரு ஜயந்தி ஏற்படாமல் போயிருந்தால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருக்கும் (அனைத்தையும் அவைதிகம் அடித்துக்கொண்டு போயிருக்கும்). ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக்கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீசங்கர ஜயந்தியே…’ என்கிறார் (‘தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து). ஷண்மதங்களை ஸ்தாபித்து தர்மம் தழைத்தோங்க வழிசெய்த மகான் ஸ்ரீஆதிசங்கரர். கேரள மாநிலம் காலடியில் அந்த யுகபுருஷரின் அவதாரம் மட்டும் நிகழாமல் போயிருந்தால்… எத்தனையோ தலங்களில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டையும் ஜன ஆகர்ஷண பிரதிஷ்டையும் நிகழாமல் போயிருக்கும். ஸ்ரீசௌந்தர்யலஹரி, ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம் முதலான அரும்பெரும் பொக்கிஷங்களும் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். ஸ்ரீஆதிசங்கரர் காசியில் இருந்தபோது பிரம்ம சூத்ரம், உபநிடதங்கள், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் முதலானவற்றுக்கு அற்புதமான பேருரை கண்டார். வேதவியாசரே வயோதிகராக வந்து, இவர் இயற்றிய பிரம்மசூத்ர பாஷ்யத்தைக் கேட்டு அங்கீகரித்தாராம். இதிலிருந்து ஜகத்குருவின் மகிமையை நாம் அறியலாம். சிறு வயதிலேயே அவரது சாந்நித்யம் வெளிப்பட்டது.குருகுலவாச காலத்தில் ஆச்சார்யாள் தாம் பாடம் படித்ததுடன், உலகுக்கெல்லாம் பாடமாக பிரம்மச்சரிய தர்மங்களை நன்றாக அனுஷ்டித்தார். குரு சுச்ருஷை பண்ணிக்கொண்டு, வீடு வீடாக பி¬க்ஷ ஏற்று வருவார். ஒருநாள்… ஒரு வீட்டின் முன் நின்று முறைப்படி, ‘பவதி பிக்ஷ£ம் தேஹி’ எனக் குரல் கொடுத்தார். வீட்டுக்குள் இருந்து பெண்ணொருத்தி வெளிப்பட்டாள். வாயிலில் சங்கரனைக் கண்டதும் பரவசம் பொங்கியது அவளுள். உள்ளே ஓடோடிச் சென்றாள். பாலகனுக்கு பி¬க்ஷயிட ஏதாவது உள்ளதா எனத் தேடிப் பார்த்தாள். விதியின் விளையாட்டு… மணி அரிசி இல்லை. சில கணங்கள் பரிதவித்துப் போனவள், முயற்சியைக் கைவிடாமல் என்னவாவது கிடைக்குமா என்று தேடிப் பார்த்தாள். ஒரு புரையில் நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அகமகிழ்ந்தாள் அந்த மங்கையர்குல திலகம். பயபக்தியுடன் எடுத்துவந்து, சங்கரனின் பி¬க்ஷ பாத்திரத்தில் இட்டாள். அவளின் வறுமையை புரிந்துகொண்ட பாலகன், திருமகளைத் தியானித்து அந்தப் பெண்மணியின் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் செழிக்க வேண்டும் என ஸ்தோத்திரம் பாடி பிரார்த்தித்தான். அவன் பாடி முடித்ததும் பொன்மாரி பொழிந்தது! இவ்வாறு ஆதிசங்கரரால் அருளப்பட்டதே கனகதாரா ஸ்தோத்திரம். அருள் பெருகும் அட்சய திருதியை நன்னாளில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, திருமகள் கடாட்சத்தால் நமது வாழ்விலும் வளம்பெருக வழி காண்போமா! அங்கம் ஹரே: புளகபூஷணமாஸ்ரயந்தீ ப்ருங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்! அங்கீக்ருதாகிலவிபூதிரபாங்கலீலா மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா:!! ஸ்ரீவிஷ்ணுவின் மார்பு மகிழ்ச்சியால் மெய் சிலிர்க்கும்போது, பொன்னிற வண்டுகள் மொய்க்கும் முகுள மலர்களைப் போல் காட்சி தருகிறது. சர்வ மங்கலங்களுக்கும் நாயகியான ஸ்ரீலட்சுமி அவரின் மார்பில் வசிக்கிறாள். அவரின் ஆனந்தத்துக்கு வேறு காரணமும் வேண்டுமோ? அப்படிப்பட்ட திருமகளின் கடைக்கண் பார்வை என்மீது படவேண்டும். சகல மங்கலங்களும் அருளவேண்டும். முக்தா முஹுர்விதததீ வதனே முராரே: ப்ரேமத்ரபாப்ரணிஹிதானி கதாகதானி! மாலாத்ருஸோர்மதுகரீவ மஹோத்பலே யா ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:!! பெரிய நீலோத்பல புஷ்பத்தில் பெண் வண்டா னது வெளியில் போய்க்கொண்டும், திரும்பி வந்து கொண்டும் இருப்பதுபோல், முராரியான ஸ்ரீநாராயணனின் முகத்தில் வெட்கத்தால் போய்க் கொண்டும், பிரியத்தால் திரும்புகின்றதுமான பாற் கடலின் புத்ரியான ஸ்ரீமகாலட்சுமியினுடைய கடைக்கண்களின் வரிசையானது எனக்கு சம்பத்தைக் கொடுக்கட்டும். ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம் ஆனந்தகந்தமநிமேஷமனங்கதந்தரம்! ஆகேகரஸ்திதகநீநிகபக்ஷ்ம நேத்ரம் பூத்யை பவேன்மம புஜங்கஸயாங்கனாயா:!! ஆனந்தத்தினால் கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் ஸ்ரீமுகுந்தனை அடைந்து இமைக் கொட்டல் இல்லாததும், காமத்துக்கு வசமானதும், ஆனந்தத்துக்கு மூலமும், கொஞ்சம் புரட்டப்பட்ட கருவிழி, இமை ஆகியவற்றை உடையதுமான ஸ்ரீமகாலட்சுமியின் கண்ணானது க்ஷேமத்தைக் கொடுக்கட்டும். பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி! காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா கல்யாணமாவஹது மே கமலாலயாயா:!! எந்தக் கடைக்கண் வரிசையானது கௌஸ்துப மணியுடன் கூடிய ஸ்ரீநாராயணனுடைய மார்பில் இந்திர நீலக் கற்களால் கட்டப்பட்ட மாலைபோல் பிரகாசிக்கிறதோ, ஸ்ரீபகவானுக்கேகூட இஷ்டத்தை அளிக்கிறதோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலட்சுமி யினுடைய கடைக்கண் வரிசையானது எனக்குக் கல்யாணத்தைக் கொடுக்கட்டும். காலாம்புதாளிலலிதோரஸி கைடபாரே: தாராதரே ஸ்புரதி யா தடிதங்கனேவ! மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனீய மூர்த்தி: பத்ராணி மே திஸது பார்கவநந்தனாயா:!! ஸ்ரீநாராயணனுடைய நீருண்ட மேகக் கூட்டம் போல் அழகிய மார்பில், நீருண்ட மேகத்தில் மின்னல் கொடி போல் எந்த உருவம் பிரகாசிக் கிறதோ, எல்லா உலகங் களுக்குத் தாயும், பார்கவ மகரிஷியின் புத்ரியுமான ஸ்ரீலட்சுமியினுடைய பூஜிக்கத் தகுந்த அந்த உருவமானது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும். ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத் மாங்கல்யபாஜி மதுமாதுனி மன்மதேன! மய்யாபதேத்ததிஹ மந்தரமீக்ஷணார்த்தம் மந்தாலஸம் ச மகராலயகன்யகாயா:!! எந்தப் பார்வையின் பெருமையால் மங்களங்களுக்கு இருப்பிடமானவரும், மது என்ற அரக்கனை ஒழித்தவருமான மகாவிஷ்ணுவிடம் முதன்முதலாக மன்மதனுக்கு இடம் கிடைத்ததோ, அந்த சமுத்திர குமாரியான மகாலட்சுமியின் மந்தாலஸமான அரைப் பார்வை என்மேல் கொஞ்சம் விழட்டும். விஸ்வாமரேந்த்ரபதவிப்ரமதானதக்ஷம் ஆனந்தஹேதுரதிகம் முரவித்விஷோபி! ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்தம் இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:!! சக்ரவர்த்தித் தன்மை, இந்திரப் பதவி இவற்றை வேடிக்கையாகக் கொடுக்கும் சாமர்த்தியம் உள்ளதும், முரனை வென்ற மகாவிஷ்ணுவுக்குங்கூட ஆனந்தப் பெருக்குக்குக் காரணமானதும், நீலோத்பல புஷ்பத்தின் உட்புறம் போன்றதுமான மகாலட்சுமியின் கடைக்கண்ணின் பாதியானது ஒரு க்ஷணம் என்மேல் விழட்டும். இஷ்டாவிஸிஷ்டமதயோபி யயா தயார்த்ர த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே! த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோதரதீப்திரிஷ்டாம் புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:!! அஸ்வமேதம் முதலிய யாகங்களினால் சுத்தி பண்ணப் படாத மனதை உடையவர்கள்கூட கருணையினால் நனைந்த எந்தப் பார்வையினால் ஸ்வர்க ஸ்தானத்தை சுலபமாக அடைகின்றனரோ, மலர்ந்த தாமரைப் புஷ்பத்தின் நடுப்பாகம் போன்ற ஸ்ரீமகாலட்சுமியின் அந்த பார்வையானது எனக்கு அபிஷ்ட ஸித்தியைக் கொடுக்கட்டும். தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம்புதாரா மஸ்மிந்நகிஞ்சனவிஹங்கஸிஸெள விஷண்ணே! துஷ்கர்மதர்மமபனீய சிராய தூரம் நாராயணப்ரணயினீநயனாம்புவாஹ:!! கருணையாகிற அனுகூலக் காற்றுடன் கூடிய ஸ்ரீமகாலட்சுமியினுடைய கண்களாகிற நீருண்ட மேகம், தாரித்ரியத்தால் கஷ்டப்படும் இந்த ஏழையான சாதகக் குஞ்சுவிடத்தில், வெகுநாளாக ஏற்பட்ட பாப கர்மமாகிற தாபத்தை வெகுதூரத்தில் போக்கி, பொருள் மழையைக் கொடுக்கட்டும். கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி ஸாகம்பரீதி ஸஸிஸேகரவல்லபேதி! ஸ்ருஷ்டிஸ்திதிப்ரளயகேளிஷூ ஸம்ஸ்திதா யா தஸ்யை நமஸ்த்ரிபுவனை ககுரோஸ்தருண்யை!! சரஸ்வதிதேவி என்றும், கருட வாஹனனுடைய மனைவி என்றும், சாகம்பரியாகிற பூமிதேவி என்றும், பார்வதி என்றும் ப்ரஸித்தி பெற்று, ஸ்ருஷ்டி, ரக்ஷணம், நாசம் என்ற விளையாட்டான காரியங்களில் அமர்ந்தவளும், மூவுலகுக்கும் குருவான நாராயணனுடைய யுவதியுமான அந்த மகாலட்சுமிக்கு நமஸ்காரம். ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை ரத்யை நமோஸ்து ரமணீயகுணார்ணவாயை! ஸக்த்யை நமோஸ்து ஸதபத்ரநிகேதனாயை புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை!! நல்ல கர்மாவின் பலத்தைக் கொடுக்கின்ற வேத ரூபிணியான தங்களுக்கு நமஸ்காரம். அழகிய குணங்க ளுக்கு இருப்பிடமான ரதிதேவியான தங்களுக்கு நமஸ் காரம். தாமரையில் அமர்ந்த சக்தி ரூபிணீயான தங்களுக்கு நமஸ்காரம். புருஷோத்தமருடைய மனைவியாகிற புஷ்டி தேவியாகிற தங்களுக்கு நமஸ்காரம். நமோஸ்து நாளீகநிபானனாயை நமோஸ்து துக்தோததிஜன்மபூம்யை! நமோஸ்து ஸோமாம்ருதஸோதராயை நமோஸ்து நாராயணவல்லபாயை!! தாமரை போன்ற முகமுள்ள தேவிக்கு நமஸ்காரம். பாற்கடலில் பிறந்த தேவிக்கு நமஸ்காரம். சந்திரன், அமிர்தம் இவைகளோடு தோன்றிய தேவிக்கு நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனுடைய ப்ரிய தேவிக்கு நமஸ்காரம். நமோஸ்து ஹேமாம்புஜபீடிகாயை நமோஸ்து பூமண்டலநாயிகாயை! நமோஸ்து தேவாதிதயாபராயை நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை!! தங்கத் தாமரையை ஆசனமாக உடைய தேவிக்கு நமஸ்காரம். பூமண்டலத்துக்குத் தலைவியான தேவிக்கு நமஸ்காரம். தேவாதிகளுக்கு தயை செய் கின்ற தேவிக்கு நமஸ்காரம். சாரங்கபாணியாக உள்ள மகாவிஷ்ணுவின் ப்ரிய தேவிக்கு நமஸ்காரம். நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தனாயை நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை! நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை நமோஸ்து தாமோதரவல்லபாயை!! ப்ருகுரிஷியின் புத்ரியான தேவிக்கு நமஸ்காரம். மகாவிஷ்ணுவின் மார்பில் இருக்கும் தேவிக்கு நமஸ்காரம். தாமரையை இருப்பிடமாக உடைய லட்சுமிக்கு நமஸ்காரம். தாமோதரமூர்த்தியான மகாவிஷ்ணுவின் ப்ரிய பார்யைக்கு நமஸ்காரம். நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை! நமோஸ்து தேவாதிபிரர்ச்சிதாயை நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை!! ஜ்யோதி ஸ்வரூபிணியும், தாமரை போன்ற கண் களை உடையவளுமான தேவிக்கு நமஸ்காரம். ஐஸ்வர்ய ஸ்வரூபிணியாயும், உலகங்களைப் படைத்தவளாயும் உள்ள தேவிக்கு நமஸ்காரம். தேவர் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட தேவிக்கு நமஸ்காரம். நந்தகுமாரனான கோபாலனின் ப்ரியநாயகியின் பொருட்டு நமஸ்காரம். ஸம்பத்கராணி ஸகலேந்த்ரியநந்தனானி ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாக்ஷி! த்வத்வந்தனானி துரிதாஹரணோத்யதானி மாமேவ மாதரநிஸம் கலயந்து மான்யே!! தாமரை போன்ற கண்களை உடையவளே, பூஜிக்கப் படுகின்றவளே, தாயே, சகல ஸம்பத்துக்களையும் கொடுக்கின்றவையும், எல்லா இந்திரியங்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவையும், சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும் திறமை வாய்ந்தவையும், பாபங்களைப் போக்குவதில் முயற்சி உள்ளவையுமான தங்களுக்குச் செய்யும் நமஸ்காரங்கள் எப்பொழுதுமே என்னை அடையட்டும். யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி: ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:! ஸந்தனோதி வசனாங்கமானஸை: த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே!! எந்தத் தேவியின் கடைக்கண்களின் உபாஸனை அவைகளை ஸேவிப்பவருக்கு எல்லா ஸம்பத்துக் களையும் ஏராளமாகக் கொடுக்குமோ, அந்த முராரி யான மகாவிஷ்ணுவின் இருதயத்து நாயகியான உன்னை வாக்கு, காயம், மனஸ் இவைகளால் நமஸ்கரிக்கிறேன். ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே தவளதமாம்ஸுககந்தமால்ய ஸோயே! பகவதி ஹரிவல்லபே மனோக்ஞே த்ரிபுவனபூதிகரி ப்ரஸீத மஹ்யம்!! தாமரையை இருப்பிடமாக உடையவளே, தாமரை யைக் கையில் உடையவளே, அதிக வெண்மையான வஸ்திரம், சந்தனம், மாலை இவைகளால் பிரகாசிப் பவளே, மகிமை வாய்ந்தவளே, மகாவிஷ்ணுவின் ப்ரிய நாயகியே, மனதை ரமிக்கச் செய்பவளே, மூவுல கத்துக்கும் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவளே, எனக்குக் கருணை செய். திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட ஸ்வர்வாஹினீ விமலசாருஜலாப்லுதாங்கீம்! ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமஸேஷ லோகாதிநாதக்ருஹிணீமம்ருதாப்திபுத்ரீம்!! திக்கஜங்களினால் தங்கக் குடங்களினால் விடப்பட்ட தேவ கங்கையின் நிர்மலமானதும், பரிசுத்தமானதுமான ஜலத்தினால் நனைக்கப்பட்ட சரீரத்தை உடையவளும், உலகங்களுக்குத் தாயும், எல்லா உலகத்துக்கும் நாயகனான மகாவிஷ்ணுவின் மனைவியும், பாற்கடலின் புத்ரியுமான தங்களை காலையில் நமஸ்கரிக்கின்றேன். கமலே கமலாக்ஷவல்லபே த்வம் கருணாபூரதரங்கிதைரபாங்கை:! அவலோகய மாமகிஞ்சனானாம் ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:!! தாமரை போன்ற கண்களை உடைய மகா விஷ்ணுவின் காதலியான லக்ஷ்மியே. நீ, கருணை வெள்ளத்தில் அலைமோதும் உன் கடைக்கண் பார்வைகளால், தரித்திரர்களில் முதல்வனாயும், உன்னுடைய தயைக்கு உண்மையான பாத்திர மாகவுமுள்ள என்னைப் பார். ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரன்வஹம் த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம்! குணாதிகா குருதரபாக்யபாகின: பவந்தி தே புவி புதபாவிதாஸயா:!! மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியும், மூவுலகத்துக்கு தாயுமான மகாலட்சுமியை இந்த ஸ்தோத்திரங்களினால் தினசரி எவர் துதிக்கின்றனரோ, அவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்கியசாலிகளாகவும், வித்வான்கள் கொண்டாடும் புத்தி சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர். தொகுப்பு: எம்.எஸ்.வேல் காலடியில் கனகதாரா யாகம் ஆதிசங்கரர் பிறந்த திருவிடம் காலடி. எர்ணாகுளத்திலிருந்து திருச்சூர் செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவிலுள்ள அங்கமாலியில் இறங்கி அங்கிருந்து 8 கி.மீ. சென்றால் காலடியை அடையலாம். இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஉன்னி கிருஷ்ணனின் திருமேனி ‘அஞ்சனா’ எனும் கல்லால் ஆனதாம். இதில், இரும்பு மற்றும் தாமிரத் தாதுக்கள் அதிகம் கலந்துள்ளதால் சக்தி அதிகம் என்பர். இந்தக் கோயிலில் அட்சய திருதியை அன்று பெரிய அளவில் யாகம் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஆதிசங்கரரின் ஸ்தோத்திரத்தால் மகாலட்சுமி மகிழ்ந்து பொன்மாரி பொழிவித்து அருள்செய்தது, ஓர் அட்சய திருதியை என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. ஆக, இந்தக் கோயிலில் அட்சய திருதியையும், சங்கர ஜயந்தியும் விசேஷம். இதையட்டி, ஆதிசங்கரரின் 32 வயதைக் குறிக்கும் வகையில் 32 நம்பூதிரிகள் 10,008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கின்றனர். அட்சய திருதியை நாளில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகமும் நடைபெறும். யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு பூஜை பிரசாதமும், கனகதாரா யந்திரமும் வழங்கப்படுகிறது. இவற்றை நம் வீட்டு பூஜையறையில் வைத்திருந்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். - எஸ்.ராமச்சந்திரன், சென்னை-4

உலக புத்தக தினம்: வாசிப்போம், நேசிப்போம்

உலக புத்தக தினம் தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினம் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் ஏப்ரல் 23-ந் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும். மேற்கூறிய 10 கட்டளைகளையும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தமுஎச கொண்டாட்டம் பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த ஆண்டு உலகப் புத்தக தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஏப்ரல் 21 சனிக்கிழமை மாலை, சென்னைக் கடற்கரை காந்தி சிலை அருகே கவிஞர்கள் பலரும் பங்கேற்கும் உலகப் புத்தகதின சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. இந்த கவியரங்கத்தில் கவிஞர் மு. மேக்தா, பாரிகபிலன், விஜயலட்சுமி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற 60க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசித்தனர். ஏப்ரல் 22 ஞாயிறு காலை 7 மணிக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் திரளாகக் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ‘உலகைக் குலுக்கிய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் தெருமுனை நாடகம், ‘புத்தகத் தேர்’ இழுப்பு, மாவட்ட வாரியாக புத்தகக் கண்காட்சிகள் என மே 1 ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Sunday, April 22, 2012

மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள் (பொதுஅறிவுக் கட்டுரைகள்)

1. சிறந்த வழி நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை 2. பெருந்தன்மையே முதல் படி 1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!. 2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!. 3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும். 4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும். - சீனப் பழமொழி 3. பயப்படாதீர்கள் நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்! - நெப்பொலியன் ஹில் 4. மூன்று ஆயுதம் நம்மிடம் தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும். - கன்ஃப்யூஷியன் 5. துணிவே துணை ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள். -ஸர் டி.ப்ரௌன் 6. வெற்றிக்கு முதல்படி எது? மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும். - டாக்டர் ஜான்சன் ( உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது ) 7. அன்பின் நோக்கம் உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும் - ஸ்ரீ அன்னை 8. விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம் ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான். எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள். எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை. செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே 'வெற்றி' என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன். பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர். நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள். நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும். - பார்பர் 9. அஞ்சா நெஞ்சம் வேண்டும் கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்! - சுபாஷ் சந்திரபோஸ் 10. நல்ல எண்ணெய் எது? மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும். - அய்டா 11. ஓய்வு எடுங்கள் 'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும். - டப்ஃபீல்டு 12. எளிமைதான் முன்னேற்றம் எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம். - ஜே.ஆர்.லோவெல் 13. அன்பை அனுப்புங்கள் அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள். ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள். கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள். உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம். சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்!. - ஓஷோ ரஜனீஷ் 14. சூரிய ஒளி போல யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள். - ரீடர்ஸ் டைஜஸ்ட் 15. வாய்மை வெல்லும் தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்). - ஸ்ரீ அன்னை 16. பிரார்த்தனை செய்யலாமா? இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது - மாட்டிகாஸ் பெரீன் 17. நல்ல எண்ணமே சிறந்தது நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள். - ஸ்ரீ அன்னை 18. எல்லா உயிர்களையும் நேசியுங்கள் அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார். - ரோமெயின் ரோலந்து ( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்) 19. இயற்கை நமது நன்பன் மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான் - அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங் ( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது) 20. சிந்தனைக்கு நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள். - ஸ்ரீ அன்னை ( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்) 21. அன்பை வெளிப்படுத்துங்கள் அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும். - ஸ்ரீ அன்னை 22. வாழ்வின் வெற்றி வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது. - ஸ்ரீ அன்னை 23. தரமே தங்கக்குணம் முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும். - ஸ்ரீ அன்னை 24. எது உயிர் மூச்சு? நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும். - நார்மன் வின்சென்ட்டில் 25. அன்பின் சக்தி அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். - புனித பைபிள் கொரிந்தியர் 1:13 26. அன்பு மயமாக இருங்கள் அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார் - ஓஷோ ரஜனீஷ் 27. மனஉரம் வேண்டும் கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும். - ஜார்ஜ் எலியட் 28. யோசனை கூறும் தகுதி யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே. - ஜார்ஜ் எலியட் 29. உறுதி மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான். - புனித பைபிள் 30. உதவி கிடைக்க நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது. - ஸ்ரீ அன்னை

Saturday, April 21, 2012

அட்சய திருதியை

அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. அன்றைய தினம் மகாலட்சுமி அனைவரின் வீட்டிற்கும் வருகிறாள் என்பது ஐதீகம். அட்சய திருதியை அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்களால் அலங்கரித்து, பூஜை அறையை அலங்கரித்து தானம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அட்சய திருதியை அலங்காரம் குறித்து ஜோதிடர்கள் கூறிய கருத்துக்களை படியுங்களேன். அட்சய திருதியை அன்று தங்கம் பிளாட்டினம் வாங்க வேண்டும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரி‌சிதான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. லட்சுமி குபேரர் பூஜை அறையில் மகாலட்சுமி, குபேரர் படங்கள் இருந்தால் மஞ்சள் மலர்கள், அல்லது மல்லிகை மலர்களால் அலங்கரித்து அந்த படத்தின் முன் படியில் குத்தரிசியை நிரப்பி வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வம் பெருகும். மஞ்சள் மகிமை மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். தானம் செய்தல் அட்சய திருதியை அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள், வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று வேதங்கள் என்ன சொல்கிறது, உத்திர கால விரதம் என்ற நூலில் கூட இது பற்றி சொல்லப்பட்டுள்ளது . எனவே கடைக்கு சென்று ஆடைகளை வாங்கி பூஜை அறையில் வைத்து தானம் செய்யுங்கள். காய்கறிகள் அட்சய திருதியை அன்றைக்கு திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும். அப்போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் ஆகியவற்றை தானம் தரலாம். வெள்ளி அலங்காரம் தங்கத்தை விட வெள்ளிதான் உயர்வானது என்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்றாலும் வெள்ளியால் பூஜை அறையை அலங்கரிக்கலாம். தங்கம் வாங்கினால்தான் நல்லது என்பது தவறு. அதற்குப் பதிலாக முனை முறியாத பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் பூஜை அறையில் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அனைவரின் வீட்டிலும் மகாலட்சுமி குடிபுகுவாள் என்பது நிச்சயம்.

Friday, April 20, 2012

நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்!

மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் மெடிடேசன் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம் தலைக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு பேசுவது போல இருப்பதுதான். ஒருசிலரின் மனதுக்குள் மணியடிக்கும், காதுக்குள் யாரோ பேசுவது போல இருக்கும். உலக அளவில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் இந்த சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் பேசும் இந்த பேச்சை நிறுத்த முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

உடல் ரீதியான பிரச்சினை, பொருளாதார சிக்கல், கிசு கிசு, செக்ஸ் சிக்கல், குடும்ப பிரச்சினை, சமூக ரீதியான பிரச்சினை, கடந்த கால பிரச்சினை, எதிர்காலம் குறித்த பயம் போன்றவையே மனரீதியான சிக்கல் எழ காரணமாகிறது.

மன அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற மனதிற்குள் மணியடிக்கும் சத்தமும், பேச்சுச் சத்தமும் கேட்பதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு சிலருக்கு நேர்மறையானதாகவும், சிலருக்கு எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனதில் கேட்கும் பேச்சு அதிகாலை நேரத்திலோ, அல்லது இரவிலோ தொந்தரவை தரும். இதனால் பாதிப்பிற்குள்ளாகும் சரியாக உறங்க முடியாது. சராசரி மனிதர்களைப் போல நடமாட முடியாது. இதை ஒரு சில பழக்கத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளை கூறியுள்ளனர்.

பணிச் சூழலில் உயர் அதிகரிகளுடன் கலந்துரையாடலில் இருக்கும் போது நம்மை திசை திருப்பும் வகையில் மனதிற்குள் பேச்சுச்சத்தம் கேட்டால் அது நம் வேலைக்கே உலை வைத்து விடும். எனவே மன சத்தம் குறித்து போகஸ் செய்யவேண்டும். பின்னர் மெடிடேசன் செய்வதன் மூலம் இந்த அழுத்தத்தை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவைகளும் மனதில் எழும் இந்த பேச்சுக்களை குறைக்க வழி செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மனதை கட்டுப்படுத்த உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிக்கலில் இருந்து முழுவதுமாக நமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்ம வேண்டும். எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம்பிக்கையின் மூலம் இதை குணப்படுத்த முடியும்.

உள்ளத்தில் அமைதி ஏற்பட மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்ப வேண்டும். எதிர்மறை சாத்தானை விரட்டினால்தான் நேர்மறை தேவதை மனதில் குடிபுகும். கவலைகளை புறந்தள்ள வேண்டும். நம்மால் எதுவும் முடியும், இதெல்லாம் சாதாரணம் என்று மனதில் நினைத்தாலே போதும். தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாது. மனதில் பேச்சு சத்தமும் கேட்காது என்கின்றனர் நிபுணர்கள்.

Thursday, April 19, 2012

விநாயகர் அகவல் (அவ்வையார் நூல்கள்)

நூல்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல்லிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் . 4

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் . 8

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும் . 12

குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்..

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூஸிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் . 16

தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து . 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே. 24

சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி..

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் . 28

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே. 32

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே . 36

வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,

இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக். 40

குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே . 44

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச். 48

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட் எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி . 52

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து . 56

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில். 60

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 64

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி. 68

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே . 72

அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.


விநாயகர் அகவல் முற்றிற்று.

Wednesday, April 18, 2012

மூதுரை (அவ்வையார் நூல்கள்)

கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.


நூல்


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம். 13

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம். 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு. 17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். 19

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு. 20

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும். 21

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 26

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று? 28

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம். 29

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30



மூதுரை முற்றிற்று.

Tuesday, April 17, 2012

நல்வழி (அவ்வையார் நூல்கள்)

வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் இப்பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல்.

கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.


நூல்


புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. 2

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து. 9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 10

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? 22

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை. 24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். 26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 40



நல்வழி முற்றிற்று.

Monday, April 16, 2012

கொன்றை வேந்தன் (அவ்வையார் நூல்கள்)

கடவுள் வாழ்த்து


கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.


நூல்


உயிர் வருக்கம்


1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு


ககர வருக்கம்


14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை


சகர வருக்கம்


26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்


தகர வருக்கம்


37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை
39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்


நகர வருக்கம்


48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை
51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
53. நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீர் ஆகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை


பகர வருக்கம்


59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்


மகர வருக்கம்


70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு


வகர வருக்கம்


81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும்
83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்


கொன்றை வேந்தன் முற்றிற்று.

Lord Sri Venkateshwara Ashtotharam – (Astothara Sathnamavali)

Venkateshwara Ashtotharams are recited and chanted after Suprabhatam on every Saturdays,

on every Yekadashi and also in the month of Margashira.

“Vinaa Venkatesam Nanaadho Nanatha
Sadhaa Venkatesam Smaraami Smaraami
Hare Venkatesa Praseedha Praseedha
Priyam Venkatesa Prayaccha Prayaccha”

The 108 names of Venkateswara – Ashtothara Satha Namavali of Venkateshwara are ;

Om Shri Ventakeshaya Namaha
OM Sreenivasaya Namaha
OM Laxmipataye Namaha
OM Anaamayaaya Namaha
OM Amruthamsaya Namaha
OM Jagadvandyaya Namaha
OM Govindaya Namaha
OM Shashvataya Namaha
OM Prabhave Namaha
OM Sheshadrinilayaya Namaha
OM Devaya Namaha
OM Keshavaya Namaha
OM Madhusudhanaya Namaha
OM Amrutaya Namaha
OM Madhavaya Namaha
OM Krishnaya Namaha
OM Sriharaye Namaha
OM Jnanapanjaraya Namaha
OM SreeVatsavakshase Namaha
OM Sarveshaya Namaha
OM Gopalaya Namaha
OM Purushotamaya Namaha
OM Gopeeshwaraya Namaha
OM Parasmyjyotishe Namaha
OM Vaikuntapataye Namaha
OM Avyayaya Namaha
OM Sudhaatanave Namaha
OM Yadavendraya Namaha
OM Nithyayavvanaroopavate Namaha
OM Chaturvedatmakaya Namaha
OM Vishnave Namaha
OM Achutyaya Namaha
OM Padminipriyaya Namaha
OM Dharapataye Namaha
OM Surapatye Namaha
OM Nirmalaya Namaha
OM Devapoojitaya Namaha
OM Chaturboojaya Namaha
OM Chakradaraya Namaha
OM Tridamne Namaha
OM Trigunashrayaya Namaha
OM Nirvikalpaya Namaha
OM Nishkalankaya Namaha
OM Niranthakaya Namaha
OM Niranjanaya Namaha
OM Nirabasaya Namaha
OM Nityatruptaya Namaha
OM Nirgunaya Namaha
OM Nirupadravaya Namaha
OM Gadhaadharaya Namaha
OM Shaarangapanaye Namaha
OM Nandakine Namaha
OM Shankhadarakaya Namaha
OM Anakemurtaye Namaha
OM Avyaktaya Namaha
OM Katihastaya Namaha
OM Varapradaya Namaha
OM Anekatmane Namaha
OM Deenabandhave Namaha
OM Aartalokabhayapradhaya
OM Akasharajavaradhaya Namaha
OM Yogihrutpadmamandhiraya Namaha
OM Dhamodharaya Namaha
OM Karunakaraya Namaha
OM Jagatpalayapapagnaya Namaha
OM Bhakthavatsalaya Namaha
OM Trivikramaya Namaha
OM Shishumaraya Namaha
OM Jatamakutashobhitaya Namaha
OM Shankamadyolasanmanjookinkinyadyakarakandakaya Namaha
OM Neelameghashyamatanave Namaha
OM Bilvapatrarchanapriyaya Namaha
OM Jagatvyapine Namaha
OM Jagatkartre Namaha
OM Jagatsakshine Namaha
OM Jagatpataya Namaha
OM Chintitarthapradaya Namaha
OM Jishnave Namaha
OM Daasharhaaya Namaha
OM Dhasharoopavate Namaha
OM Devakinandanaya Namaha
OM Shauraye Namaha
OM Hayagreevaya Namaha
OM Janardhanaya Namaha
OM Kanyashravanatharejyaya Namaha
OM Peetambharadharaya Namaha
OM Anagaya Namaha
OM Vanamaline Namaha
OM Padmanabhaya Namaha
OM Mrughayasaktamanasaya Namaha
OM Ashvaroodaya Namaha
OM Kadghadharine Namaha
OM Dhanarjanasamootsukaya Namaha
OM Ganasaralasanmadhyakasturitilakojjwalaya Namaha
OM Sachitandharoopaya Namaha
OM Jaganmangaladayakaya Namaha
OM Yajnaroopaya Namaha
OM Yajnabokthre Namaha
OM Chinmayaya Namaha
OM Parameshwaraya Namaha
OM Paramarthapradhaya Namaha
OM Shanthaya Namaha
OM Sreemathe Namaha
OM Dordhandhavikramaya Namaha
OM Paratparaya Namaha
OM Parasmaibrahmane Namaha
OM Sreevibhave Namaha
OM Jagadeeshwaraya Namaha

Saturday, April 14, 2012

ஆத்திசூடி (அவ்வையார் நூல்கள்)

பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 109 ஒருவரிப்பாடல்கள் உள்ளன. உயர்ந்த ஒழுக்க விதைகள் மனத்தின் ஊன்றுவதற்காக அவ்வையாரல் எழுதப்பெற்றன.


கடவுள் வாழ்த்து


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.


நூல்


உயிர் வருக்கம்


1. அறஞ் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகஞ் சுருக்கேல்


உயிர்மெய் வருக்கம்


14. கண்டு ஒன்று சொல்லேல்
15. ஙப் போல்வளை
16. சனி நீராடு
17. ஞயம் பட உரை
18. இடம் பட வீடு எடேல்
19. இணககம்அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம்ஆடேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்


ககர வருக்கம்


32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப்பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று


சகர வருக்கம்


44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்திரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சை எனத் திரியேல்
53. சொல் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்


தகர வருக்கம்


55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்


நகர வருக்கம்


66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெல் பயிர் விளை
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்


பகர வருக்கம்


77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்


மகர வருக்கம்


88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93 மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள் சேர்
95. மேன் மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி


வகர வருக்கம்


99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்


ஆத்தி சூடி முற்றிற்று.

Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு பூஜை அறை அலங்காரம்!

தமிழ்புத்தாண்டு தினத்தன்று வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பது வழக்கம். அதேபோல் பூஜை அறையில் உள்ள படங்களை துடைத்து மலர்போட்டு அலங்கரிக்கும் மக்கள் ரூபாய் நாணயங்களினாலும், பழங்களினாலும் அலங்கரித்து அதனை பார்ப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.இந்த புத்தாண்டில் பூஜை அறையை அலங்கரிக்க நாங்கள் கூறும் ஐடியாவை பின்பற்றுங்களேன்.

மலர் அலங்காரம்

பூஜை அறையில் உள்ள படங்களுக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கலாம் மஞ்சள் நிறம் மங்களகரமானது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மஞ்சள் நிற பூக்கள் அதிகமாய் பூத்துக்குலுங்கும். இந்தப்பூக்களினால் பூஜை அறையை அலங்கரிக்கலாம். தாமரை மலரில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பதால் நடுநாயகமாக லட்சுமி தேவியின் படத்தை வைத்து தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.

ரூபாய், நாணயங்கள்

செல்வத்தின் ரூபாமாக உள்ள லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய ஒரு தாம்பாளத்தில் சில்லறை நாணயங்களைக் கொட்டி அதனைச்சுற்றி ரூபாய் நோட்டுக்களை அடுக்கலாம்.

தற்போது 5 ரூபாய் தங்க நாணயங்களை வடிவில் வந்துள்ளது. அதனை நடுவில் வட்டமாக அடுக்கி அதனுள் பிளாட்டினம் போல் உள்ள ஒரு ரூபாய் சின்ன நாணயங்களை அடுக்கலாம். பார்க்கவே லட்சுமி கடாட்சமாக இருக்கும்.

கனிகளால் அலங்காரம்

கோடை காலத்தில் அதிகம் கிடைப்பது மாங்கனி. பசும் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே கண்ணைப் பறிக்கும். அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக் கனி,போன்றவைகளை தட்டில் பரப்பில் வைத்து வரிசையாக அடுக்கலாம். நடுவில் சிகரம் வைத்ததுபோல மாதுளம் பழங்களையோ, ஆப்பிள் பழங்களையோ அடுக்கலாம்.

இதுபோல் பூஜை அறையை அலங்கரித்து வருடத்தின் முதல்நாள் இவற்றில் கண் விழித்தால் வீட்டில் மங்களம் பொங்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.

செல்வ வளம் தரும் சித்திரை மாதம்

தமிழர்கள் கொண்டாடும் தமிழ்புத்தாண்டு திருநாள் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. கர வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான நந்தன வருடம் பிறப்பதை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து சித்திரை அன்னையை வரவேற்கின்றனர்.

சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம்.

சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.

அட்சய திருதியை

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு. சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை.

லட்சுமி பூஜை

சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

பஞ்சாங்கம்

திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான். ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் இந்நாளில் தான். சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரையில் சித்திரை மாதம் நடைபெறுகிறது.

சித்ரா பவுர்ணமி

சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் அருகிலுள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கான விழா நடைபெறுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி

திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்

வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை

நேரிசை வெண்பா

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்?

கட்டளைக் கலித்துறை

நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது μங்கும்அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி μத இசைநெஞ்சமே!


சோமாசியாண்டான் அருளியதென்பர்

சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமா னுச! இதென் விண்ணப்பமே.

வேதப்பிரான்பட்டர் அருளியதென்பர்

இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.



திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி

கட்டளைக் கலித்துறை

3893 பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே. 1

3894 கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே. 2

3895 பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே. 3

3896 என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே. 4

3897 எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே. 5

3898 இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே. 6

3899 மொழியைக் கடக்கும் பெரும்புக ழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே. 7

3900 வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே. 8

3901 இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் μதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே. 9

3902 மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே. 10

3903 சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழாலளித்த
பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத்
தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம்
காரிய வண்மை, என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே. 11

3904 இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ
தடங்கும் இதயத் திராமா னுசன்,அம்பொற் பாதமென்றும்
கடங்கொண் டிறைஞ்சும் திருமுனி வர்க்கன்றிக் காதல்செய்யாத்
திடங்கொண்ட ஞானியர்க் கேஅடி யேனன்பு செய்வதுவே. 12

3905 செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே. 13

3906 கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே. 14

3907 சோராத காதல் பெருஞ்சுழிப் பால், சொல்லை மாலையொன்றும்
பாரா தவனைப்பல் லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள்
பேராத வுள்ளத் திராமா னுசன்றன் பிறங்கியசீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே? 15

3908 தாழ்வொன்றில் லாமறை தாழ்ந்து தலமுழு தும்கலியே
ஆள்கின்ற நாள்வந் தளித்தவன் காண்மின் அரங்கர்மெளலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமா னுசனென்னும் மாமுனியே. 16

3909 முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடிலும்
கனியார் மனம்கண்ண மங்கைநின் றானைக் கலைபரவும்
தனியா னையைத்தண் டமிழ்செய்த நீலன் றனக்குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனைவந் தெய்தினரே. 17

3910 எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற் குலதில் வரும்சட கோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற் குதவும் இராமா னுசனெம் உறுதுணையே. 18

3911 உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்
வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங்கியசீர்
நெறிதரும் செந்தமிழ் ஆரண மெயென்றிந் நீணிலத்தோர்
அறிதர நின்ற,இராமா னுசனெனக் காரமுதே. 19

3912 ஆரப் பொழில்தென் குருகைப் பிரான்,அமு தத்திருவாய்
ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு இனியவர்தம்
சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாத முனியைநெஞ்சால்
வாரிப் பருகும் இராமா னுசனென்றன் மாநிதியே. 20

3913 நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்
எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே. 21

3914 கார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவ னே. என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த
தீர்த்தனை யேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே. 22

3915 வைப்பாய வான்பொருள் என்று,நல் லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில்
ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே. 23

3916 மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்
எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே. 24

3917 காரேய் கருணை இராமா னுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்
சீரே யுயிர்க்குயி ராய், அடி யேற்கின்று தித்திக்குமே. 25

3918 திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர்
எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே. 26

3919 கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோ ங்கியவுன்
வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்
வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும் இராமா னுச என் தனிநெஞ்சமே. 27

3920 நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா
வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்
கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே. 28

3921 கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்
வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே? 29

3922 இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே. 30

3923 ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே.
ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. 31

3924 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32

3925 அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்
படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்
புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33

3926 நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34

3927 நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே? 35

3928 அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36

3929 படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்
கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்
அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37

3930 ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே
போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்
வாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம்
நோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே. 38

3931 பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ் சே.மற்று ளார்த்தரமோ?
இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே
தெருளும் தெருள்தந்து இராமா னுசன்fசெய்யும் சேமங்களே. 39

3932 சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே. 40

3933 மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே. 41

3934 ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே. 42

3935 சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்
துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே. 43

3936 சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே. 44

3937 பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்
காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்
கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே. 45

3938 கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும்
ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே. 46

3939 இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின்
திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே
நிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே. 47

3940 நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமா னுச இனி நாம்பழுதே
அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே? 48

3941 ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே. 49

3942 உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே. 50

3943 அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்
முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51

3944 பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ
டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே. 52

3945 அற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே. 53

3946 நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்
வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே. 54

3947 கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே. 55

3948 கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்
வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே. 56

3949 மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே. 57

3950 பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்
றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்
டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்
வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே. 58

3951 கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே. 59

3952 உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்
புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60

3953 கொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்
தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்
தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்
கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே. 61

3954 இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும்
வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்
பொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே. 62

3955 பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்
செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்
படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63

3956 பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே. 64

3957 வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல்
கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே. 65

3958 ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே. 66

3959 சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்
கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே? 67

3960 ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்
பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே. 68

3961 சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து
எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே. 69

3962 என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை
தன்னையென் பார்ப்பர் இராமா னுச உன்னைச் சார்ந்தவரே? 70

3963 சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமா னுச எம் பெருந்தகையே. 71

3964 கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என் றுன்னியுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே
வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே. 72

3965 வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்
தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்
உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே. 73

3966 தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை
ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே. 74

3967 செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச. என்னை முற்றுநின்றே. 75

3968 நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே. 76

3969 ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே? 77

3970 கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச மற்றோர் பொய்ப் பொருளே. 78

3971 பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை
உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே
ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே. 79

3972 நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப
வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே. 80

3973 சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங் கன்செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமா னுச. இனியுன்
சீரொன் றியகரு ணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே. 81

3974 தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்
பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ.
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே. 82

3975 சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்
எர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார்கொண்ட வண்மை இராமா னுச. இது கண்டுகொள்ளே. 83

3976 கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே
தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்
விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்
றுண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே. 84

3977 ஓதிய வேதத்தின் உட்பொரு ளய், அதன் உச்சிமிக்க
சோதியை நாதன் எனவெறி யாதுழல் கின்றதொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை. 85

3978 பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே. 86

3979 பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்
குரியசொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில்மிக்கோர்
தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில்
புரியுநன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும்கலியே. 87

3980 கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்
வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்
புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே. 88

3981 போற்றருஞ் சீலத் திராமா னுச,நின் புகழ்தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்
ஏற்றமென் றேகொண் டிருக்கிலு மென்மனம் ஏத்தியன்றி
ஆற்றகில் லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே. 89

3982 நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே. 90

3983 மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்
இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர்
அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே. 91

3984 புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி இராமா னுச. இன்று நீபுகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே. 92

3985 கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர்சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரனல்ல னே,என் பெருவினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி
வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே. 93

3986 தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந் தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே. 94

3987 உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலைநின்று விடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே. 95

3988 வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்
குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே. 96

3989 தன்னையுற் றாட்செய்யும் தன்மையி னோர்,மன்னு தாமரைத்தாள்
தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று தன்தகவால்
தன்னையுற் றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து
தன்னையுற் றாரை இராமா னுசன்குணம் சாற்றிடுமே. 97

3990 இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில்
நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே
விடுமே சரணமென் றால், மன மே நையல் மேவுதற்கே? 98

3991 தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே. 99

3992 போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச. இது அன்றியொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே. 100

3993 மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதிமயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமா னுச. என்ற துன்னையுன்னி
நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும்நைந்தே. 101

3994 நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அருவினையேன்
கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ்
வையம் இதனில், உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே? 102

3995 வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய்
களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே. 103

3996 கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ
செய்யில் தரிப்பன் இராமா னுச என் செழுங்கொண்டலே. 104

3997 செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள்
தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர்
எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே. 105

3998 இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே. 106

3999 இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே. 107

4000 அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே நந் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே. 108


திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

Wednesday, April 11, 2012

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருவாய் மொழி பத்தாம் பத்து

ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவாய் மொழி பத்தாம் பத்து

3783 தாள தாமரைத் தடமணி வயல் திரு மோகூர்
நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காள மேகத்தை யன் றிமற் றொன் றிலம் கதியே. 1.1

3784 இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்
அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்
நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. 1.2

3785 அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்
நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. 1.3

3786 இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி
சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்
இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர். வம்மினே. 1.4

3787 தொண்டீர். வம்மின்நம் சுடரொளி யொருதனி முதல்வன்
அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர்
எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே. 1.5

3888 கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கடகும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர்
ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே. 1.6

3789 மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா
சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா
முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்
சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ. 1.7

3790 துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்
உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்
பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே. 1.8

3791 மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்
அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்
துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே. 1.9

3792 நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள். 1.10.

3793 ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு
கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்
வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே. 1.11

3794 கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே. 2.1

3795 இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார
குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை
மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்
ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. 2.2

3796 ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. 2.3

3797 பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. 2.4

3798 புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். 2.5

3799 அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்
நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. 2.6

3800 துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்
படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. 2.7

3801 கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை
இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம்
படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண
நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம். 2.8

3802 நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்
தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. 2.9

3803 மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. 2.10.

3804 அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை
கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. 2.11

3805 வேய்மரு தோளிணை மெலியு மாலோ.
மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவு மாலோ.
கணமயில் அவைகலந்தாலு மாலோ
ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு
ஒருபக லாயிர மூழி யாலோ
தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ.
தகவிலை தகவிலையே நீ கண்ணா. 3.1

3806 தகவிலை தகவிலை யேநீ கண்ணா.
தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா
சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே
அகவுயிர் அகமதந்தோறும் உள்புக்
காவியின் பரமல்ல வேட்கை யந்தோ
மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால்
வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே. 3.2

3807 வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு
வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்
யாவரும் துணையில்லை யானி ருந்துன்
அஞ்சன மேனியை யாட்டம் காணேன்
போவதன் றொருபகல் நீய கன்றால்
பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா
சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப்
பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே. 3.3

3808 தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந் தா நின்
தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித்
துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம்
பாவியேன் மனமகந் தோறு முள்புக்
கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணிமொழி நினை தொறும் ஆவி வேமால். 3.4

3809 பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
பெருமத மாலையும் வந்தின் றாலோ
மணிமிகு மார்வினில் முல்லைப் போதென்
வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து
அணிமிகு தாமரைக் கையை யந்தோ.
அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய். 3.5

3810 அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய்
ஆழியங் கண்ணா. உன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை மாரும்
பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்
வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா
மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே
வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே. 3.6

3811 வேமெம துயிரழல் மெழுகில் உக்கு
வெள்வளை மேகலை கழன்று வீழ
தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்
தூணைமுலை பயந்து என தோள்கள் வாட
மாமணி வண்ணா உன்செங்கமல
வண்ணமென் மலரடி நோவ நீபோய்
ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 3.7

3812 அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று
ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்க லந்து
கலவியும் நலியுமென் கைகழி யேல்
வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ
உகக்குநல் லவரொடும் உழித ராயே. 3.8

3813 உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன்
திருவுள்ளம் இடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றோம்
எம்பெரு மான். பசு மேய்க்கப் போகேல்
மிதப்பல அசுரர்கள் வேண்டும் உருவங்
கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ
அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. 3.9

3814 அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ.
அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர்
தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்
உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று
ஊடுற வென்னுடை யாவிவேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே. 3.10.

3815 செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு
அத்திருவடி திருவடி மேல் பொ ருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்
மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை
அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்
அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான்
உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே. 3.11

3816 சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள்,
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்,
நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான்,
பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே. 4.1

3817 பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும்
இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே. 4.2

3818 ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம்,
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன் கேள்வன்,
தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே. 4.3

3819 தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை
நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே. 4.4

3820 நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை
கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்
மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்
நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே. 4.5

3821 நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத் திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே. 4.6

3822 பணிநெஞ்சே. நாளும் பரம பரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழி யானே. 4.7

3823 ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியா னூழி படைத்தான் நிரைமேய்த்தான்
பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்
வாழியென் நெஞ்சே. மறவாது வாழ்கண்டாய். 4.8

3824 கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையா யினவெல்லாம்
தொண்டேசெய் தென்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே. 4.9

3825 வகையால் மனமொன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புதுமலரால் நீரால்
திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே. 4.10.

3826 பற்றென்று பற்றிப் பரம பரமபரனை
மற்றிண்டோ ள் மாலை வழுதி வளநாடன்
சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே. 4.11


பத்து வகை பத்தியும் பிரபத்தியும்

3827 கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே. 5.1

3828 நாரணன் எம்மான்
பாரணங்காளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே. 5.2

3829 தானே உலகெலாம்
தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து
தானே யாள்வானே. 5.3

3830 ஆள்வான் ஆழிநீர்
கோள்வாய அரவணையான்
தாள்வாய் மலரிட்டு
நாள்வாய் நாடீரே. 5.4

3831 நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம்
வீடே பெறலாமே. 5.5

3832 மேயான் வேங்கடம்
காயா மலர்வண்ணன்
பேயார் முலையுண்ட
வாயான் மாதவனே. 5.6

3833 மாதவன் என்றென்று
ஓத வல்லீரேல்
தீதொன்று மடையா
ஏதம் சாராவே. 5.7

3834 சாரா ஏதங்கள்
நீரார் முகில்வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே. 5.8

3835 அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே. 5.9

3836 வினைவல் இருளென்னும்
முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு
நினைமின் நெடியானே. 5.10.

3837 நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து
அடியார்க்கு அருள் பேறே. 5.11

3838 அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே. வாட்டாற்றான் அடிவணங்கே. 6.1

3839 வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே. கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. 6.2

3840 நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே. 6.3

3841 என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே. நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. 6.4

3842 வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறுகின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. 6.5

3843 தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித்தான் குரைகழல்தள் குறுகினமே. 6.6

3844 குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. 6.7

3845 மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? 6.8

3846 திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. 6.9

3847 பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. 6.10.

3848 காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. 6.11

3849 செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட்
செய்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சு முயிரு முள்கலந்து
நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சு முயிரும் அவைடுண்டு
தானே யாகி நிறைந்தானே. 7.1

3850 தானே யாகி நிறைந்தெல்லா
உலகும் உயிரும் தானேயாய்
தானே யானென் பானாகித்
தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே யாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே. 7.2

3851 என்னை முற்றும் உயிருண்டென்
மாய ஆக்கை யிதனுள்புக்கு
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமா லிருஞ்சோலைத்
திசைகை கூப்பிச் தேர்ந்தயான்
இன்னம் போவே னேகொலோ.
எங்கொல் அம்மான் திருவருளே? 7.3

3852 என்கொல் அம்மான் திருவருள்கள்?
உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் னுடலம் கைவிடான்
ஞாலத் தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய்
நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான்
நண்ணா அசுரர் நலியவே. 7.4

3853 நண்ணா அசுரர் நலிவெய்த
நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணா தனகள் எண்ணும்நன்
முனிவ ரின்பம் தலைசிறப்ப
பண்ணார் பாடல் இன்கவிகள்
யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம்மான்
திருமாலிருஞ்சோலையானே. 7.5

3854 திருமாலிருஞ்சோலையானே
ஆகிச் செழுமூ வுலகும் தன்
ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து
ஊழி யூழி தலையளிக்கும்
திருமாலென்னை யாளுமால்
சிவனும் பிரமனும்காணாது
அருமா லெய்தி யடிபரவ
அருளை யீந்த அம்மானே. 7.6

3855 அருளை ஈயென் அம்மானே.
என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரமன் அம்மானும்
தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும்
ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை
திருமாலிருஞ்சோலைமலையே. 7.7

3856 திருமாலிருஞ்சோலைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண்
திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத் தெனதுயிரே
மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என்
ஊழி முதல்வன் ஒருவனே. 7.8

3857 ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே. 7.9

3858 மங்க வொட்டுன் மாமாயை
திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ
யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும்
கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி
மானாங்கார மனங்களே. 7.10.

3859 மானாங்கார மனம்கெட
ஐவர் வன்கை யர்மங்க
தானாங்கார மாய்ப்புக்குத்
தானே தானே யானானை
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்
சடகோபன்சொல்லாயிரத்துள்
மானாங்காரத்திவைபத்தும்
திருமாலிருங்சோலைமலைக்கே. 7.11

3860 திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன
திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே. 8.1

3861 பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே. 8.2

3862 பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்
மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை
கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்
அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே. 8.3

3863 எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான்
தெளிதா கியசேண் விசும்புதரு வானே. 8.4

3864 வானே தருவா னெனக்காயென் னோடொட்டி
ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே. 8.5

3865 திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே யுறைகின் றபிரானின்றுவந்து
இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே. 8.6

3866 உண்டு களித்தேற் கும்பரென் குறை மேலைத்
தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே. 8.7

3867 கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே
வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான்
திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ. 8.8

3868 இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான்
அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்?
குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்
ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே. 8.9

3869 உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்
பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்
கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே. 8.10.

3870 நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்
வல்லார் தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே. 8.11

3871 சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின
ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்
வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே. 9.1

3872 நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்
பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில்
நீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே. 9.2

3873 தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை
பொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே
எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே. 9.3

3874 எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்
அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த
மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே. 9.4

3875 மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே. 9.5

3876 வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்
ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே. 9.6

3877 மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி
குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே. 9.7

3878 குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள
கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே. 9.8

3879 வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. 9.9

3880 விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்
மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே. 9.10.

3881 வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை
கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல்
சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே. 9.11

3882 முனியே. நான்முக னே.முக்கண்
ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு
மாணிக்கமே. என்கள்வா
தனியேன் ஆருயிரே. என் தலை
மிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட் டேன் ஒன்றும்
மாயம் செய்யேல் என்னையே. 10.1

3883 மாயம்செய் யேலென்னை உன்திரு
மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை
நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை
உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக்
கூவிச்கொள் ளாய்வந்தந்தோ. 10.2

3884 கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என்
பொல்லாக்கரு மாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால்
அறிகின்றி லேன்யான்
மேவித் தொழும்பிரமன் சிவன்
இந்திர னாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே.
உம்பர் அந்ததுவே. 10.3

3885 உம்ப ரந்தண் பாழேயோ.
அதனுள்மிசை நீயேயோ
அம்பர நற்சோதி. அதனுள்
பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த
முனிவன் அவன்நீ
எம்பரம் சாதிக்க லுற்றென்னைப்
போரவிட் டிட்டாயே. 10.4

3886 போரவிட் டிட்டென்னை நீபுறம்
போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ.
எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது
போலவென் ஆருயிரை
ஆரப் பருக,எனக்கு
ஆராவமுதானாயே. 10.5

3887 எனக்கா ராவமு தாயென
தாவியை இன்னுயிரை
மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா
யினியுண் டொழியாய்
புனக்கா யாநிறத்த புண்டரீ
கக்கட்f செங்கனிவாய்
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக்
கன்பா..என் அன்பேயோ. 10.6

3888 கோல மலர்ப்பாவைக் கன்பா
கியவென் அன்பேயோ
நீல வரையிரண்டு பிறைகவ்வி
நிமிர்ந்த தொப்ப
கோல வராகமொன் றாய்நிலங்
கோட்டிடைக் கொண்டேந்தாய்
நீலக் கடல்கடைந் தாயுன்னைப்
பெற்றினிப் போக்குவனோ? 10.7

3889 பெற்றினிப் போக்குவனோ உன்னை
என் தனிப் பேருயிரை
உற்ற இருவினையாய் உயிராய்ப்
பயனாய் அவையாய்
முற்றவிம் மூவுலகும் பெருந்
தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்தொளித் தாய்.என்
முதல்தனி னித்தேயோ. 10.8

3890 முதல்தனி வித்தேயோ. முழுமூ
வுலகாதிக் கெல்லாம்
முதல்தனி யுன்னையுன்னை எனைநாள்
வந்து கூடுவன்நான்
முதல்தனி அங்குமிங்கும் முழுமுற்
றுறுவாழ் பாழாய்
முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த
முடிவி லீயோ. 10.9

3891 சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில்
பெரும்பா ழேயோ
சூழ்ந்தத னில்பெரிய பரநன்
மலர்ச்சோ தீயோ
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான
வின்ப மேயோ
சூழ்ந்தத னில்பெரிய என்னவா
அறச்சூழ்ந் தாயே. 10.10.

3892 அவாவறச் சூழரியை அயனை
அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்
சடகோபன் சொன்ன
அவாவிலந் தாதிகளால் இவையா
யிரமும் முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந்
தார்பிறந் தாருயர்ந்தே. 10.11


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.