மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் மெடிடேசன் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம் தலைக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு பேசுவது போல இருப்பதுதான். ஒருசிலரின் மனதுக்குள் மணியடிக்கும், காதுக்குள் யாரோ பேசுவது போல இருக்கும். உலக அளவில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் இந்த சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் பேசும் இந்த பேச்சை நிறுத்த முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
உடல் ரீதியான பிரச்சினை, பொருளாதார சிக்கல், கிசு கிசு, செக்ஸ் சிக்கல், குடும்ப பிரச்சினை, சமூக ரீதியான பிரச்சினை, கடந்த கால பிரச்சினை, எதிர்காலம் குறித்த பயம் போன்றவையே மனரீதியான சிக்கல் எழ காரணமாகிறது.
மன அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற மனதிற்குள் மணியடிக்கும் சத்தமும், பேச்சுச் சத்தமும் கேட்பதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு சிலருக்கு நேர்மறையானதாகவும், சிலருக்கு எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனதில் கேட்கும் பேச்சு அதிகாலை நேரத்திலோ, அல்லது இரவிலோ தொந்தரவை தரும். இதனால் பாதிப்பிற்குள்ளாகும் சரியாக உறங்க முடியாது. சராசரி மனிதர்களைப் போல நடமாட முடியாது. இதை ஒரு சில பழக்கத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளை கூறியுள்ளனர்.
பணிச் சூழலில் உயர் அதிகரிகளுடன் கலந்துரையாடலில் இருக்கும் போது நம்மை திசை திருப்பும் வகையில் மனதிற்குள் பேச்சுச்சத்தம் கேட்டால் அது நம் வேலைக்கே உலை வைத்து விடும். எனவே மன சத்தம் குறித்து போகஸ் செய்யவேண்டும். பின்னர் மெடிடேசன் செய்வதன் மூலம் இந்த அழுத்தத்தை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவைகளும் மனதில் எழும் இந்த பேச்சுக்களை குறைக்க வழி செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மனதை கட்டுப்படுத்த உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிக்கலில் இருந்து முழுவதுமாக நமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்ம வேண்டும். எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம்பிக்கையின் மூலம் இதை குணப்படுத்த முடியும்.
உள்ளத்தில் அமைதி ஏற்பட மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்ப வேண்டும். எதிர்மறை சாத்தானை விரட்டினால்தான் நேர்மறை தேவதை மனதில் குடிபுகும். கவலைகளை புறந்தள்ள வேண்டும். நம்மால் எதுவும் முடியும், இதெல்லாம் சாதாரணம் என்று மனதில் நினைத்தாலே போதும். தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாது. மனதில் பேச்சு சத்தமும் கேட்காது என்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment