தமிழ்புத்தாண்டு தினத்தன்று வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பது வழக்கம். அதேபோல் பூஜை அறையில் உள்ள படங்களை துடைத்து மலர்போட்டு அலங்கரிக்கும் மக்கள் ரூபாய் நாணயங்களினாலும், பழங்களினாலும் அலங்கரித்து அதனை பார்ப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.இந்த புத்தாண்டில் பூஜை அறையை அலங்கரிக்க நாங்கள் கூறும் ஐடியாவை பின்பற்றுங்களேன்.
மலர் அலங்காரம்
பூஜை அறையில் உள்ள படங்களுக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கலாம் மஞ்சள் நிறம் மங்களகரமானது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மஞ்சள் நிற பூக்கள் அதிகமாய் பூத்துக்குலுங்கும். இந்தப்பூக்களினால் பூஜை அறையை அலங்கரிக்கலாம். தாமரை மலரில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பதால் நடுநாயகமாக லட்சுமி தேவியின் படத்தை வைத்து தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.
ரூபாய், நாணயங்கள்
செல்வத்தின் ரூபாமாக உள்ள லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய ஒரு தாம்பாளத்தில் சில்லறை நாணயங்களைக் கொட்டி அதனைச்சுற்றி ரூபாய் நோட்டுக்களை அடுக்கலாம்.
தற்போது 5 ரூபாய் தங்க நாணயங்களை வடிவில் வந்துள்ளது. அதனை நடுவில் வட்டமாக அடுக்கி அதனுள் பிளாட்டினம் போல் உள்ள ஒரு ரூபாய் சின்ன நாணயங்களை அடுக்கலாம். பார்க்கவே லட்சுமி கடாட்சமாக இருக்கும்.
கனிகளால் அலங்காரம்
கோடை காலத்தில் அதிகம் கிடைப்பது மாங்கனி. பசும் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே கண்ணைப் பறிக்கும். அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக் கனி,போன்றவைகளை தட்டில் பரப்பில் வைத்து வரிசையாக அடுக்கலாம். நடுவில் சிகரம் வைத்ததுபோல மாதுளம் பழங்களையோ, ஆப்பிள் பழங்களையோ அடுக்கலாம்.
இதுபோல் பூஜை அறையை அலங்கரித்து வருடத்தின் முதல்நாள் இவற்றில் கண் விழித்தால் வீட்டில் மங்களம் பொங்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.
No comments:
Post a Comment